வளவ. துரையன்
ஒரு முழம் கூட
விற்கவில்லையென
பூப்போல வாடும்
பூக்காரியின் முகம்
கூடு கட்ட
எந்தக் குச்ச்சியும்
சரியில்லை எனத்
தேடி அலையும் காக்கை
எலிகள் கிடைக்காததால்
காக்கைக்கு வைத்த
சோற்றைப் பார்க்கும்
நகரத்துப் பூனை
திடீரென வந்த தூறலில்
ஒதுங்க இடம்
தேடும் தெரு நாய்
ஆட்டோவில் அடைத்து
அழைத்துச் செல்லப்படும்
நர்சரியின் மாணவர்கள்