கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023

கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023
This entry is part 3 of 5 in the series 8 அக்டோபர் 2023

குரு அரவிந்தன் –

சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றல், கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, தொல்காப்பிய மன்றப்பாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப்பட்டது. அடுத்து தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் பெற்றது.

தலைமை உரையைத் தொடர்ந்து நடன ஆசிரியை திருமதி சியாமளா தயாளனின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. அதைத் தெடர்ந்து பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றி முதற்பரிசு பெற்ற ஆறு பிரிவுகளைச் சேர்ந்த மணவர்களின் உரைகள் ஒவ்வொன்றாக இடம் பெற்றன.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரின் உரைகளும், செல்வி ஜஸ்வரியா சந்துருவின் வாய்ப்பாட்டு இசைநிகழ்ச்சியும் இடம் பெற்றன. இந்த இசை நிகழ்ச்சிக்கு செல்வன் கீதன் விவேகானந்தன் மிருதங்கமும், நமிகா வசந்தகுமார் வயலினும் வாசித்தனர். தொடர்ந்து அடுத்த தலைமுறையிரை ஊக்குவிக்கும் சிறந்த நோக்கத்தோடு நடத்தப்பட்ட தமிழ் மொழி சார்ந்த போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்குப் பரிசுகளும், நிகழ்வில் பங்குபற்றிய தொண்டர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அடுத்து கலைக்கோவில் நாட்டியக் கலாகுலநிதி திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. அடுத்து முதன்மை விருந்தினர் பேராசிரியர் முனைவர் ஜோசப் சந்திரகாந்தன் அடிகளாரின் உரை இடம் பெற்றது. தமிழக அரசு சார்பாக இலக்கிய விருது பெற்ற மூவர் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மன்றச் செயலாளர் திரு சி. சண்முகராசா அவர்களின் நன்றியுரையுடன் விழா சிறப்பாக முடிவடைந்தது.

இந்த நிகழ்வின் போது தொல்காப்பிய விழா மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. 279 பக்கங்களைக் கொண்ட இந்த மலரில் வாழ்த்துரைகளைத் தொடர்ந்து பலனுள்ள பல கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. பேராசிரியர் கு.வே. பாலசுப்ரமணியன், முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், சி. சண்முகராசா, எழுத்தாளர் குரு அரவிந்தன், யோகா அருள்சுப்பிரமணியம், ரஜிதா சூரியகுமார், சாரதா குமாரசாமி, பவானி சந்திரன், மருத்துவர் துளசி விக்னேஸ்வரன், கௌரிசிவம் குணரட்ணம், கஜரூபன் குகதாசன், பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன், முனைவர் பால.சிவகடாட்சம், முனைவர் ஜோதி எஸ்.தேமொழி, மருத்துவர் வரதா. கந்தசாமி, சின்னையா விமலநாதன், இலக்குவனார் திருவள்ளுவன், சிவ ஞானநாயகன், உமா சூரியகுமார், கலா அரியராசா, சண்முகலிங்கம் கந்தையா, விக்னேஸ்வரன் கணபதிப்பிள்ளை, த. சிவபாலு, சுவந்தி சங்கர், மருத்துவர் சாயி சர்மா, மேரி ஞானப்பிரகாசம், புட்பா கிறிட்டி, சாதனா பாலேந்திரன், சந்திரன் வேலாயுதபிள்ளை, முத்தையா அரியராசா, லலிதா. மகேந்திரன், லீலா சிவானந்தன், சசிகலா ஜீவானந்தன், கிருஸ்ணபிள்ளை ஆனந்தராஜா, அகணி சுரேஸ் ஆகியோரது கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

புலம் பெயர்ந்த மண்ணில் சிறப்பாக இந்த மலரை வெளியிட்டு ஆவணப்படுத்திய தொல்காப்பிய மலர்க் குழவினருக்கும், நிகழ்வைச் சிறப்பாக நடத்தி முடித்த செயற்குழுவினருக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!

Series Navigationஅடுத்த முறைகனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *