Articles Posted by the Author:

 • அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூரும் மாணவர்கள்

  அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூரும் மாணவர்கள்

        அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசந்துறை குருவீதியை வதிவிடமாகவும் கொண்டவர். 1957 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விலங்கியலுக்கான தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட பட்டதாரியான இவர் மகாஜனாக் கல்லூரியில் உயர்தர வகுப்பு விலங்கியல் ஆசிரியராகவும், அதன் பின் 1976 ஆம் ஆண்டு தொடக்கம் கல்லூரி அதிபராகவும் இணைந்து கடமையாற்றினார். இவரது காலத்தில் கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் கல்லூரி புகழ் பெற்றிருந்தது. இதைவிட ஏழாலை மத்திய மகாவித்தியாலயத்திலும், புத்தூர் சோமஸ்கந்தா […]


 • நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022

  நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022

      குரு அரவிந்தன்   கனடாவில் இயங்கிவரும் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களின் ஒன்றுகூடல் ரொறன்ரோவில் உள்ள மிலிக்கன் பூங்காவில் சென்ற சனிக்கிழமை 27-8-2022 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நீண்ட நாட்களின் பின் வெவ்வேறு காலகட்டங்களில் படித்த சங்க அங்கத்தவர்கள் ஒன்றாகச் சந்தித்து உரையாடவும் முடிந்தது. காலை உணவைத் தொடர்ந்து, வருடாந்த பொதுக்கூட்டம் காலை 11:00 மணியளவில் நடைபெற்றது. அங்கத்தவர்களின் கலந்துரையாடலைத் தொடர்ந்து மதியஉணவும் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.   காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி […]


 • கனடா மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022

    குரு அரவிந்தன்   கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின்  மக்கோவான் – ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் – 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை நடைபெற்றது. கனடா தேசிய கீதம், தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம், கொடிவணக்கம், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்தோருக்கான அகவணக்கம் போன்றவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து காலை […]


 • சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் – 2022

  சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் – 2022 குரு அரவிந்தன்   பீல் பகுதியில் உள்ள சொப்கா குடும்ப மன்ற ஒன்று கூடல் சென்ற ஞாயிற்றுக் கிழமை 07-08-2022 மிசசாகா கொம்யூனிட்டி சென்ரர் பூங்காவில் இடம் பெற்றது. புலம் பெயர்ந்து வந்த இங்குள்ள இளம் தலைமுறையினரின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு இயங்கிவரும் இந்த சொப்கா மன்றம், ஒன்று கூடலின் போது மிசசாகா உணவு வங்கிக்காகவும் உணவுப் பொருட்களைச் சேகரித்தது குறிப்பிடத் தக்கது. அங்கத்தவர்கள் மனமுவர்ந்து உணவுப் […]


 • நங்கூரி

  நங்கூரி

        குரு அரவிந்தன்   அது கொழும்பு துறைமுகம்…   ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது ‘நங்கூரி’ என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன்.   1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது.   நீண்ட நாட்களின்பின் […]


 • இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்

  இரங்கலுரை:   பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்   குரு அரவிந்தன் பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு பெரும் இழப்பாகும். சிறந்த கல்வியாளரான இவர் மதங்களைக் கடந்து கனடாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கனடாவில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, மரபுக் கவிதையை வளர்ப்பதற்காக அந்தப் பத்திரிகையில் […]


 • இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்

      பிள்ளையினார் நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறந்த இவர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் கீரிமலைக்கு அருகே உள்ள மயிலங்கூடல் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனாவார். திருமணமானபின் நாயன்மார்காட்டில் வசித்து வந்தார். ஆரம்ப கல்வியை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பெற்றார். மகாஜனக் கல்லூரியின் பழைய […]


 • கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

    ‘கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி, அதில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டுக்குரிய ஒரு இலக்கிய அமைப்பு என்ற வகையில் கனடா வாழ் தமிழ் மக்களும், மக்கள் அமைப்புக்களும் […]


 • தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

  தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

      குரு அரவிந்தன்   தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.   இலங்கைத்தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே இருந்தார்கள். சைவமும் தமிழும் ஒன்றாகவே வளர்ந்தன. அதனால்தான் எந்த வேற்றுமையும் பாராட்டாது, தென்னிந்தியாவில் இந்துக்கள் கடைப்பிடித்தது போலவே, சித்திரைத் திருநாளையே தமிழர்களின் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தைமாதத்தில் உழவர்களின் திருநாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். மக்கள் மனதில் […]


 • ஒஸ்கார் விருது வழங்கும் விழா – 2022

    குரு அரவிந்தன்     இந்த வருடம் ஒஸ்கார் விருது வழங்கும் விழா சென்ற 27 ஆம் திகதி மார்ச் மாதம், ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோவிட் – 19 காரணமாக கடந்த வருடம் இந்த விழா சிறிய வட்டத்திற்குள் நடத்தப்பட்டது. இம்முறை, சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘கோடா’ படத்திற்குக் கிடைத்தது. போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த 10 படங்களில் இருந்து கோடா திரைப்படம் தெரிவானது. ‘த பவர் ஒவ் த […]