Posted in

 முற்றத்தில் நிஜம்

This entry is part 1 of 2 in the series 26 மே 2024

அந்த குழந்தை

கையில் பையுடன் 

ஓடியாடி விளையாடியது.

முற்றத்து தண்ணீரில் 

நிலவை பிடித்தது

வானத்து நட்சத்திரங்களையும்தான் !

மேகத்தில் வெள்ளிமலையோ, பீமரதமோ 

எல்லாம் அந்த பைக்குகள் போட்டது.

மீண்டும் சிரித்துக்கொண்டே

முற்றத்தில் ஓடியது.

அப்பா

வாடிய முகத்துடன் 

திண்ணையில கொட்டாவிவிட்டார். 

நாளை விடியலுக்கு 

சட்டைப்பையில், 

பீடியுடன் சில்லறையை

தேடினார்!.

               ஜெயானந்தன். 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 319ஆம் இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *