அலகிலா விளையாட்டு

author
1 minute, 15 seconds Read
This entry is part 6 of 6 in the series 16 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி

சிவனும் பார்வதியும் தாயக்கட்டம் ஆடும் காட்சி சிற்பம்

கம்பன் சொல்லுகிறார்….

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டு உடையார்  அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

நம்மாழ்வார் சொல்லுகிறார்:

துன்பமும் இன்பமுமாகிய செய்வினையா யுலகங்களுமாய்,

இன்பமில் வெந்நரகாகி இனியநல்வான் சுவர்க்கங்களுமாய்,

மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால்,

இன்புரும் இவ்விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்லலிலனே.

படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூவகை  அருந்தொழில்

பரமனுக்கு   மிக   மிக   எளிது   என்பதை  ‘விளையாட்டு’   என்ற

சொல்லாட்சி குறிக்கிறது.

‘காத்தும்     படைத்தும்    கரந்தும்  விளையாடி

’  என  முத்தொழிலை

இறைவன்   விளையாட்டாக    மாணிக்கவாசகர்   குறித்தது    காண்க.

“இன்புறுமிவ்விளையாட்டுடையான்” என்றவிடத்து “லோகவத்து லீலா கைவல்யம்” என்ற ப்ரஹ்மஸூத்ரம் ஸ்மரிக்கத்தக்கது.

In a nutshell, the attached tamizh translated Srimad Bhagavatham Sanskrit verses “அலகிலா விளையாட்டு” capture this wholesome absolute truth – what this Divine Play is and what is the goal of humankind?

The entire veda-vedanta essence (the Supreme Absolute Truth) is summarised in a nutshell in these four aphorisms that were put forth by the Lord Sriman Narayana to Lord Brahma.

The Tamizh literary world (தமிழ் கூறும் நல்லுலகம்) must study, investigate, and realise the truth enunciated in these four translated Sanskrit verses.

The word “Anvaya” means inductive reasoning (Unconditional Surrender) and “Vyatireka” means deductive reasoning (Atma Vichara). Both are not mutually exclusive and pursuit of any one of these two leads to another. All seekers in all religions (even atheists and nihilists) do these two methods simultaneously either knowingly or unknowingly.

In Srimad Bhagavatham 11.9.28:

सृष्ट्वा पुराणि विविधान्यजयात्मशक्त्या
वृक्षान् सरीसृपपशून् खगदन्दशूकान् ।
तैस्तैरतुष्टहृदय: पुरुषं विधाय
ब्रह्मावलोकधिषणं मुदमाप देव: ॥

Then He created human life, which offers the conditioned soul sufficient intelligence to perceive the Absolute Truth and He became pleased.

The Lord has already bestowed the Humanity with this Anvaya and Vyatireka intelligence. Please note that these are not to be developed by us as some modern scientists say.

The above fact was also expressed by a great Tamizh Saint Manickkavachagar – Avan Arulal Avan Thal Paninthu – அவன் அருளால் அவன் தாள் பணிந்து in Shivapuranam – Thiruvachagam.



இதையே.. ஸ்ரீமத் பாகவதம் Canto 2, Chapter 9, verses 32-35 to contemporary Tamizh.

அலகிலா விளையாட்டு

[ஶ்ரீம.பா-2.9.32]

ஆதியில் அன்னியம் அற்று யாமாய் யாமே,
இடையில் இவ்வுருவரு தோற்றுவாய் பரமாய் யாமே,
முடிவில் எஞ்சுவது அனைத்துமாய் யாமே.

[ஶ்ரீம.பா-2.9.33]

இருப்பற்று தோன்றியொடுங்கும் எம்மில் உருவருவம்
எமது மாயமெனும் பிரதிபிம்ப பொய்யிருளென அறி.

[ஶ்ரீம.பா-2.9.34]

எவ்விதம் உயிர்களுள் ஐம்பெரும் பூதங்கள்

புகுந்தும் புகாமலும்,

ஒட்டியுமொட்டாமலும், சேர்ந்தும் தனித்தும்,
எல்லாமும் தானாயுமானதோ,
அவ்விதம் அனைத்திலும் யாமே.


[ஶ்ரீம.பா-2.9.35]

யாமே யாமாய் எல்லாமுமாய் எங்கேயும் எப்பொழுதும் என தெளிதல்
தீர விசாரித்தல் மற்றும் ஸம்பூர்ண ஶரணாகதியினால்.

Series Navigation`கற்பகதரு – சுவைத்தேன்’ – சுவையுரை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *