Posted in

தெரு நாய்

This entry is part 9 of 10 in the series 14 ஜுலை 2024

                                               வளவ. துரையன்

                              வேண்டும் வேண்டும் வேண்டும்

                                வாழ்க வாழ்க வாழ்க

                                ஒழிக ஒழிக ஒழிக

                               இவை போன்று

                               ஒவ்வொரு இடங்களிலும்

                               தனித்தனியாகக் கூட்டங்கள்

                              கோஷங்கள் போட்டார்கள்.

                              பேருந்துகளில் மனிதர்கள்

                              மிகக் கவனத்துடன்

                              பார்த்தபடிச் செல்கின்றனர்.

                             பிச்சைக்காரர்கள்

                             நின்று நோக்கியபின்

                             நகர்ந்து போகிறார்கள்.

                             அங்கங்கே தேநீரும்

                             குளிர்பானமும்தான்

                             போட்டிபோட்டுக்கொண்டு                          

                            அழைக்கின்றன.

                             கூட்டங்களில்

                             சிலர் நகரந்துவிடச்

                             சிலர் புதிதாகச் சேர்கிறார்கள்.

                            ஒவ்வொரு கூட்டத்திலும்

                            எதைப்பற்றியும்

                            கவலைபப்டாமல்

                            படுத்துக்கிடக்கிறது

                            தெரு நாய் ஒன்று

Series Navigationபரந்து கெடுக….!மௌனத்தோடு உரையாடல்

2 thoughts on “தெரு நாய்

  1. என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை.

    தெரு நாய் தெருவில்தான் வாழும். மனிதர்கள் அதை ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் கவிஞர் சொல்வது,

    “மனிதர்கள் போகும் வாகனத்திலிருந்து இறங்கி அதை கவனிக்க வேண்டும்; மேடையில் பேசும்போது கவனித்தால் பேச்சை விட்டுவிட்டு கீழிறங்கி தெருநாயை கவனிக்க வேண்டும்; தேநீர் கடையில் தேநீர் குடிப்பவர்களும், தேநீர்கடைக்காரனும் அவரவர் செயல்களை விட்டுவிட்டு தெருநாயை கவனிக்க வேண்டும்!”

    விலங்குகளை பற்றி எழுத விழைவோர் அவற்றைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். மெத்த படித்தறிவு தேவை இல்லை. நாய்களை பார்த்தால் போதும்.

    தெருநாய் தன்னிச்சைப்படி வாழும். அதுதான் அதற்கு இறைவன் வகுத்த வாழ்க்கை முறை. தன இரையைத் தானே தேடிக்கொள்ளும். மனிதர்கள் அதைக கண்டும் காணாமல் செல்வதே அதற்கு செய்யும் உதவியாகும். தெருநாய்க்கு பரிதாபப்பட தேவை இல்லை. அதை தொந்தரவு பண்ணாமலிருந்தால் போதும்.

    //எதைப்பற்றியும் கவலைபப்டாமல் படுத்துக்கிடக்கிறது தெரு நாய் ஒன்று// கவிஞர் அங்கலாய்க்கிறார்! ஐயோ !!

    தெருநாய் மட்டுமல்ல பல பிராணிகளுக்கு பிறர் தன்னை எப்படி நோக்குகிறார்கள்; தான் வெட்க உணர்வு கொள்ள வேண்டுமென்ற உணர்வெல்லாம் கிடையாது. வெட்க உணர்வு இல்லாத பிராணி நாய். நாம் வேறு; விலங்குகள் வேறு. விலங்குகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் இறைவன் கொடுத்த வரம் அதுவே. குழந்தைக்கு நாம்தான் பப்பி ஷமே சொல்லி சொல்லி வெட்க உணர்வை உருவாக்குகிறோம். நாய்களுக்கு சொல்ல முடியுமா ?

    மனிதனோ நிமிடத்துக்கு நிமிடம் தன்னை பிறர் எப்படி நோக்குகிறார்கள்; அவர்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென்ற உள்ளுணர்வோடு போலி வாழ்க்கை வாழ்கிறான். அந்த போலி வாழ்க்கை மனிதர்களுக்கு கூடாது அதாவது, வெட்க உணர்வே இருக்க கூடாது என்று சொல்வதுதான் டயோஜீன் தத்துவமான சிணிஸிஸம். அது ரொம்ப முடியாத தத்துவ பாடம் நமக்கு. இருப்பினும், அந்த தத்துவத்தின் உட்பொருள் யாதெனில், வெட்க உணர்வு நம் வாழ்க்கையை போலியாக்குகிறது என்பதே ! டயோஜீன் ஏதென்ஸ் நகரில் குப்பைத்தொட்டியில் நாய்களோடு வாழ்ந்தார். அதாவது, தன தத்துவத்தை செயலில் காட்டினார். மாவீரன் அலெக்சாண்டர் அவரின் புகழைக்கேள்விப்பட்டு அவரை பார்க்க வந்தான். அவரிடம், “நான்தான் இந்நாட்டு மன்னன். தங்களுக்கு ஏதாவது நான் செய்ய வேண்டுமென்று விழைகிறேன் கேளுங்கள்!” என்றான். அதற்கு ஞானி, சூரிய ஒளி என் மேல் படும்படி உட்கார்ந்திருந்தேன். நீ மறைத்துக் கொண்டு நிற்கிறாய். நீ விலகி நின்றால் அதுவே எனக்கு செய்யும் உதவி !” என்கிறார்.

    தெருநாய்களை பற்றித் தெரியாத ஒருவரை இப்போதுதான் பார்க்கிறேன்.

  2. இன்னொரு பிறழ்வையும் இக்கவிதை நம்மேல் திணிக்கிறது. அதாவது மனிதர்களோடு வாழும் தெரு நாய்களை மனிதர்கள் கண்டு கொள்வதே இல்லை என்பது. இஃது குறைப்பார்வை.

    இரு லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சென்னையில் அலையும் தெருநாய்களை பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை வரைந்திருக்கிறார்கள். அவர்கள் செய்யக்காரணம், பிரிட்டன் போன்ற நாடுகளில் தெரு நாய்கள் கிடையா. நாய் வளர்ப்போர் அந்த நாயை வைத்திருக்க வேண்டும். எப்படி சென்னையில் நாய்கள் அலைகின்றன? மனிதர்களுக்கும் நாய்களுக்கும் என்ன தொடர்பு? அவைகள் மகிழ்ச்சையாக வாழ்கின்றனவா ? என்றெல்லாம் கவனித்து அவர்கள் சொன்னது: ஆம் என்ற பதிலே. Read here https://aeon.co/essays/dogs-on-indias-streets-can-be-freer-and-happier-than-many-pets சென்னைவாசிகளில் சிலரைத் தவிர மற்றவர்கள் தெருநாய்களிடன் பரிவன்போடுதான் இருக்கிறார்கள். Covid காலத்தில் தெரு நாய்களுக்கு உணவில்லாத போது ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு மாநகராட்சியை அந்நாய்களுக்கு உணவளிக்கும்படி தீர்ப்பே வாங்கினார். மாநகராட்சி எதிர்க்கவில்லை. Save the Starys என்ற தனியார் இயக்கமே இருந்தது. பலர் நன்கொடை கொடுத்தார்கள்.

    இக்கவிதை மூலம் அவர்களையும் தெரு நாய்களையும் தரம் தாழ்ந்து நாம் நினைக்க வேண்டுமென்று கவிதை மெனக்கெடுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *