வளவ. துரையன்
வேண்டும் வேண்டும் வேண்டும்
வாழ்க வாழ்க வாழ்க
ஒழிக ஒழிக ஒழிக
இவை போன்று
ஒவ்வொரு இடங்களிலும்
தனித்தனியாகக் கூட்டங்கள்
கோஷங்கள் போட்டார்கள்.
பேருந்துகளில் மனிதர்கள்
மிகக் கவனத்துடன்
பார்த்தபடிச் செல்கின்றனர்.
பிச்சைக்காரர்கள்
நின்று நோக்கியபின்
நகர்ந்து போகிறார்கள்.
அங்கங்கே தேநீரும்
குளிர்பானமும்தான்
போட்டிபோட்டுக்கொண்டு
அழைக்கின்றன.
கூட்டங்களில்
சிலர் நகரந்துவிடச்
சிலர் புதிதாகச் சேர்கிறார்கள்.
ஒவ்வொரு கூட்டத்திலும்
எதைப்பற்றியும்
கவலைபப்டாமல்
படுத்துக்கிடக்கிறது
தெரு நாய் ஒன்று