வளவ. துரையன்
நேற்று அவள் பேசிய
ஒரு வார்த்தைதான்
பிடரி பிடித்து என்னை
உந்தித்ள்ளுகிறது.
அழைக்காதவள் அழைப்பது
இந்த முடவனுக்குக்
கொம்புத்தேன்.
என்னை உற்று உற்றுப்
பார்ப்பவர்க்கு என் அவசரம்
நிச்சயம் புரியாது.
ஏனென்று யாரும்
கேட்கவும் முடியாது.
காலச்சக்கரம் மிக
மெதுவாகச் சுழல்வதுபோலக்
கனத்த என் மனத்துக்குத்
தோன்றுவது உண்மையா?
அவளிடம்போய்சேர்ந்து
அன்புமொழி பேசிப்
பிரியும்போது
வலி வாங்கவேண்டுமே
அதற்காகத்தான்
போய்க்கொண்டிருக்கிறேன்