Posted in

நீளும் நீர் சாலை

This entry is part 1 of 8 in the series 13 அக்டோபர் 2024

வசந்ததீபன்

உயிருக்குள் உயிர் என்றாய்

உடலின் பாதி என்றாய்

உதிர்த்த இறகாக்கி

நீ பறந்தாய்

அவரவர்க்கு அவரது நியாயம்

எனக்கும் இருக்கிறது

உனக்கும் உள்ளது

அறம் குறித்தோ அவகாசமில்லை

சிறு நாவாய் அசைந்து போகிறது

நீர்ப்பாலை விரிந்து கிடக்க

கரை தொடும் ஏக்கம்  

கொடுங்காற்றாய் வீசுகிறது

காற்றில் கண்ணீர் வாசம்

இறக்கை முளைக்காத

புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில்

நனைந்தபாடல் கடந்து செல்ல…

மிதந்து செல்கின்றன வார்த்தைகள்

கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை

உயிர்காற்றே என்னோடு  

சற்று பேசிவிடு

நீந்திப் போகிறேன்

நீளும் நீர் சாலை

நிறம் மாறிக் கொண்டிருக்கிறது தொடுவானம்

என்னைக் கடந்து செல்லும் காற்றில் கண்ணீர் வாசம்

என்நிழலில் வந்து பதுங்குகின்றன இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகள்

ரத்தகவிச்சியில் நனைந்த பாடல் 

என் செவிப்பறையில் மோதுகிறது

என் இதயம் மெழுகாய் உருகி வடிந்து கொண்டிருக்கிறது

என் உயிர் பறவையாய் பறந்து போகிறது

நான் மெளனமாய் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Series Navigationலயப்புரிதலின்கரைதல்கனடாவில் மார்க்கம் விவசாயக் கண்காட்சி – 2024கனடா – நடேஸ்வரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்கலைந்த கனவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *