ரவி அல்லது
ஆடை பாதி என்பதில்
மாற்றுக் கருத்தில்லைதான்
தரித்த ஆடைகள்
யுவனாக தோற்றமளிப்பதால்.
மகனின் அம்மா
பிறந்த நாளுக்கா
இல்லை
அதற்கு
ஆறு நாள் முன்பான
எனது பிறந்தநாளுக்கா என்று
யோசிப்பதைவிட
மேலாடையில்
பையற்ற இடத்திலிருக்கும்
இலட்சினைக்குறி
பார்க்கத் தோற்ற
அழகுதான்.
பணமற்ற பரிவர்த்தனைகளில்
பழகிய தலைமுறைக்கு
இதயத்திற்கு பக்கத்தில்
இரக்கத்தை ஒட்ட வைப்பது
கொஞ்சம்
அசௌகரியம்தான்.
எண்ணத்திற்கு முன்
எடுத்துக் கொடுக்கும்
இடமற்ற
ஏமாற்றத்தை
கைபேசி காவந்து
உறையின் அறைகள்
நிவர்த்திகள் செய்கிறது
கையேந்துகிறவர்களைத்
தவிக்க விடாமல்
இக் கலாச்சார
மாறுபாடுகளுடைய
காலத்தில்
சற்று ஆறுதலாக.
***
-ரவி அல்லது.
- ‘அபராஜிதன்’ – சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது
- சரித்திர சான்று
- தொடர் மழை
- கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.
- அஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி )
- சாகித்திய ரத்னா விருது பெற்ற பெண் ஆளுமை – ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை
- சுகமான வலிகள்
- எழுத்தாளனின் முகவரி
- களவு போன அணுக்கப்பை
- இடிந்த சுவரும் மடிந்த உயிர்களும்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ்