ஆர் வத்ஸலா
விடாமல் பெய்து கொண்டிருக்கிறது
மழை
ஜன்னல் வழியே
ரசித்துக் கொண்டு
காத்திருக்கிறார்
சூடான பலகாரத்திற்காக கவிஞர்
மனதில் கவிதை நெய்துக் கொண்டு
மின்தூக்கி வேலை நிறுத்தம் செய்த அந்த கட்டிடத்தில்
இரண்டிரண்டு படியாக
தாவி
ஏறுகிறான்
மூச்சு வாங்க
ஏழாவது மாடிக்கு
‘ஸ்விக்கி’ பையன்
ஐந்து நட்சத்திரம் வாங்கும் ஆசையில்
‘கார் பார்க்கிங்’ இல் நிற்கும் வாகனங்களை பாதுகாக்க
இருமிக் கொண்டே
தள்ளுகிறாள்
குடியிருப்பின் கீழ்தளத்தில்
தேங்கிய தண்ணீரை
குடியிருப்பு உரிமையாளர் சங்கத்தால்
அதிகார பூர்வமாக
நியமிக்கப்பட்ட
‘ஸ்வீபர் நம்பர் 3’
விடாமல் பெய்து கொண்டிருக்கிறது
மழை
- ‘அபராஜிதன்’ – சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது
- சரித்திர சான்று
- தொடர் மழை
- கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.
- அஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி )
- சாகித்திய ரத்னா விருது பெற்ற பெண் ஆளுமை – ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை
- சுகமான வலிகள்
- எழுத்தாளனின் முகவரி
- களவு போன அணுக்கப்பை
- இடிந்த சுவரும் மடிந்த உயிர்களும்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ்