ஆர் வத்ஸலா
உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள
ஒரு நல்ல தோழியாக என்னை தேர்ந்தெடுத்தாய்
நீ
உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும்
அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன்
உனக்கு
நான்
வெகு காலத்திற்கு பிறகு தான் தெரிந்தது –
அன்பில் தோய்ந்த
எனது அனுதாபம்
உனக்கு அமிர்தமாய் இனிக்க
உனது மகிழ்ச்சித் தருணங்களை
என்னிடமிருந்து ஒளித்து வைத்திருந்தாய்
நீயென
அன்றறுந்தது வேரோடு
எனது பாசம்