தொலந்து போன
காலடி சுவடுகளை
தேடி அலையும் மனசு.
தேடாமல் தேட
நொண்டியாடி வருவான்
அவ்வப்போது.
தொலைதூர பூங்காவில்
கேட்கும்
ரகசிய பயணிகனின்
வாழ்க்கை ரகசியங்கள்
எந்த குகையில்
தேடினாலும்
உள்ளூக்குள் இருட்டு.
வெளிச்சமேற்றிய
கன்னியோ
காயப்பட்டு போனாள்
தொடர் அறுவை சிகிச்சையால்.
சகியே
சொல்லடி
எந்த சாவியை
எந்த மனதில்
வைத்துள்ளாய்.
உனக்காக நான்
நதியில் நீராகப்போகும்
தருணத்தில்
படகுக்காரன்
கரம் நீட்டி
அலைப்பாயா
சகியே
சொல்லடி.
மீண்டும் மீண்டூம்
பிறந்துன்னை
தொட அலைந்தாலும்
நீண்டூக்கொண்டே போகின்றது
பிறவி.
மாயப்பிறவியின்
பிசாசுகள்
பிணம் தின்ன
காத்துக்கிடக்கும்
தகன மேடையில்.
எத்தனை நாள் தான்
காத்திருப்பேன்
சகியே
தொலைந்து போனதை
தேடி.
பாதையெங்கும்
சுவடுகளின்
மனக்குமுறல்
மலை எங்கும்
எதிரொலிக்கும்
உன் முகச்சாயல்.
ஆனால்
அது அல்ல நீ……
ஜெயானந்தன்