ரவி அல்லது
தேவகுமார பாடுகளின்
திருப்பலியில்
சிதறியோடிய
மந்தையை
சேகரம்
பண்ண
ஜீவிக்கும்
பொருட்டு.
உயிர்தெழும்
உன்னத சுவிசேஷத்தில்.
ஹிருதய சுத்தியற்ற
விசுவாச
கீதங்கள்
இசைத்த வண்ணமிருக்கிறது
பரலோக சாம்ராஜ்யத்தை
பற்ற முடியாத
பரிசேய பாங்கில்.
நித்திய ஜீவியத்தில்
நானே வழியென
தட்டும்
கதவுகள்
போஜனம்
பண்ணாத
புதிராக
திறக்கப்படாமல் இருக்கிறது
எப்பொழுதும்
பெலனாகாத ஜெபித்தலில்.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com