அன்று
என் முப்பதுவயதுப்
பண்டிகையில்
ஆயிரம் வெள்ளியில்
எனக்கு உடுப்பு
ஐம்பது வெள்ளியில்
அப்பாவுக்கு உடுப்பு
இன்று
எழுபது வயதில்
என் பிள்ளைகளின்
பண்டிகையில்
ஐயாயிரம் வெள்ளியில்
அவர்களுக்கு உடுப்பு
ஐம்பது வெள்ளியில்
எனக்கு உடுப்பு
விட்டெறிந்த கல்லாய்
வட்டப் பயணமாய்
வாழ்க்கை
அமீதாம்மாள்