ரவி அல்லது
இரவெல்லாம்
இருந்து
வரைந்தேன்
வண்ணமற்று
வாஞ்சையின்
தூரிகையில்.
வடிவமற்றே
ஒளிர்ந்தது
இரவு
பகலாக
அதனழகில்.
இப்படியிருந்தால்
எப்படிக் காண்பதென்றார்கள்
பகலைப்
பார்வைக்குருடர்கள்.
பார்க்கும்
பகலாக்கிக்கொண்டிருந்தேன்
இவர்களுக்காக
இரவை
பார்க்குமாவல் மேவ.
விடிந்து விட்டதே
என்றார்கள்
எப்பொழுதும்போல
கலக்கத்தில் .
ம்ம்ம
பார்க்கலாம்
என்றேன்
பரவசம் சூழ.
மறுபடியும்
சொன்னார்கள்.
இப்படி இருந்தால்
எப்படிக்
காண்பதென்றார்கள்.
நான்
மறுபடியும்
வரைந்தேன்.
அவர்கள்
பார்ப்பதாக
முயன்று கொண்டே
இருந்தார்கள்
விழிகளுக்கு
திரையிட்ட
வண்ணமொரு
வினோதப்போக்கில்
என்னை விளையாட விட்டு.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com