ரவி அல்லது
வாய்கள் தான்
தீர்மானிக்கிறது.
வார்த்தைகளின்
வாசனைகளை
முகருமாறும்
முகம் சுழிக்குமாறும்.
அதன்
ஏற்ற இரக்க
சுதியில்தான்
இயங்குகிறது
உலகம்
பிடி கயிற்றின்
பின்னால்
ஓடுவதாக
மாடுகளற்றபொழுதும்
மாறாமல்.
கலைத் தோய்ந்து
காத்த
மௌனத்தின் பொழுதான
கண்டெடுப்பிற்கு
வடிவமிட முடியாத
லயித்தலின்
வாழ்க்கைதான்
தள்ளிக் கொண்டே
இருக்கிறது
வார்த்தைகளை
நோக்கி
வாஞ்சைகள் கொண்டு
வாழ்தலில் மகிழச்சொல்லி.
-ரவி அல்லது.
20/12/24.
01:46ம.