சொற்கீரன்
ஓங்கு பருதி செந்நெல் குப்பை
பழனந்தோறும் அணிமலி காட்சியின்
சோறுடைத்து வளனே நீரொடு கலித்த
வளவன் நாட்டு திண் தோள் மறவன்
கையொடு கோர்த்து இலம் நீங்கு
தோகை கண்ணொடு கண்ணிணை
கசிய வாங்கு நுதலி கருவிழியாளும்
வரு நிலை கலங்கா வண்ணம் சேர்த்து
கதழ்பரி கலிமா அன்ன விரைஇ
கடும் சுரம் எதிர்த்தும் கால் பதித்தனளே.
ஆறு அலையுநர் பசுங்குடை பொதிந்த
வெண்ணிய சோறு மறிப்ப போலும்
பசி உழல யாங்கும் நோன்றல் இல்லாள்
பொருள்வயின் வேட்டுகம் யாம்
பொரி அறை வெம்பரல் இடறவும்
ஈண்டு முக முகம் நோக்கி
இடர்ப்பாடு களைவம் என்றாள் மன்.
நீள் வழியாவும் நின் நீள் விழி அன்ன
தண்ணிய கண்டேன் நனி கண்டேன்
அவள் வண்ணச் சீறடியாய் யானே
தாங்கும். வன்சுரம் என்செயும் என
தழீச்சென்று பொள்ளாறும் பொள்ளுக
கடவோம் மற்று என்றான் களித்து.
_________________________________________
சொற்கீரன்.
- மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு
- பூர்வீக வீடு
- பருகியதன் பித்து.
- விளக்கு விருது. – விட்டல்ராவ், வைதேகி ஹெர்பர்ட்.
- சாவி
- பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- கடைசி ஆள்
- ரொறன்ரோவில் பனிக்கால உள்ளக விளையாட்டுகள்
- நேரலை
- அகழ்நானூறு 91