ரவி அல்லது.
உன்னைத்தவிர்த்த
யாவையும்
உதாசீனம்
செய்கிறேன்
உயர்த்திப்பார்க்கும்
உலகம்
ஓயாது போற்றுமென
தெரிந்தும்.
சுற்றிச் சுற்றியே
திளைக்கின்றேன்
மகிழ்வில்
சுய கௌரவ
இழுக்கென்றாலும்
நீ
இருக்குமிடமே
சொர்கமென
லயித்து.
பித்தனென்றேப்
பேசட்டும்
பழகிய பதர்கள்
பழக்கத்தில்.
பின்னொரு நாள்
பேரின்ப வாழ்வை
காணும் வரை.
பற்றி எரிகிறது
பார்க்கும்பொழுது
பரவச அன்பு
தீக்காடாய்
இல்லாமல்
திகட்டாத சுவையாக
எப்பொழுதும்
உன் அணுக்கத்தில்.
வேடிக்கைப்
பார்க்கிறது
வெறுப்பின்
பரிகாசமாய்
பாழாய்ப்போன
சம்பிரதாய சங்கடங்கள்
பசி மறந்தும்
படும் துயரை
உனக்கெனப்
புரியாமல்.
நெஞ்சம்
நெகிழ்கிறது
காதலாகக் கசிந்து
நினைக்கும் நொடியே
உணரும்
உன்னதப் பரவசமாக உன்னோடு மட்டும்.
உணர்ந்திட்டக் காதலை
புரியாமல்.
உயிர் மூச்சு நின்றுவிடும்
கேள்வியை
ஒரு பொழுதும்
கேட்க வேண்டாம்
விளையாட்டாகவேனும்
எவரும்
நீயற்ற பொழுது
நிம்மதியா எனக்கென
நீச்சமாக.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
- மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு
- பூர்வீக வீடு
- பருகியதன் பித்து.
- விளக்கு விருது. – விட்டல்ராவ், வைதேகி ஹெர்பர்ட்.
- சாவி
- பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- கடைசி ஆள்
- ரொறன்ரோவில் பனிக்கால உள்ளக விளையாட்டுகள்
- நேரலை
- அகழ்நானூறு 91