விடாது துரத்துகின்றவைகளுக்காகவும்
விட்டு விட
முடியாதவைகளுக்காகவும்
ஓடுமென்
அன்றாடத்தின்
இடையில்
உரசிவிடும்
இவரை
விட்டொழித்துவிடலாம்தான்
வெறுப்பின்
வேதனையில்.
மறந்துபோன
என்னை
நினைவூட்டுவதன்
பொருட்டால்
யாவின்
அசௌகரியங்களையும்
பொறுக்கத்தான்
வேண்டியதாகிறது
இவரைப் போல
ஒருவரை
இக்கணம் வரை
என் வாழ்வில்
சந்திக்க
இயலாதிருப்பதால்.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
- அந்தனிஜீவா நினைவுகள் ! ஏழு தசாப்த காலத்தின் கலகக்குரல் ஓய்ந்தது ! !
- ஞாபக மூட்டியெனும் தோதாகாத தொந்தரவு
- பாட்டியின் கதை
- போதி மரம்