போதி மரம்

author
0 minutes, 8 seconds Read
This entry is part 4 of 4 in the series 12 ஜனவரி 2025

எனக்கு 

ஞாபகமில்லை 

அவரை. 

அவர் 

எனைப்பார்த்து 

புன்னகையை சிந்தினார் 

நானும் 

சிந்தினேன். 

அருகில் 

வந்தார்.

நானும் 

அவரருகே சென்றேன். 

நினைவில்லையா….,

இழுத்தார். 

கொஞ்சம் 

நெற்றியை தடவினேன். 

“அதான் சார். …

போனமாசம் 

இதே இடத்தில் 

நான் 

வாந்தி எடுத்த போது 

ஓடோடிச்சென்று ,

கோலி சோடா 

வாங்கி கொடுத்திங்களே. ..”

ஏதோ 

ஒரு இடத்தில் 

சிந்திய 

புன்னகை 

இன்னொரு 

இடத்தில் 

விருட்சம். 

யார் யாரோ 

வருகிறார்கள், போகிறார்கள். 

அன்பே 

போதிமரம்.

Series Navigationபாட்டியின் கதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *