Posted in

கலிபோர்னியாவிலொரு கொரில்லா யுத்தம்

This entry is part 2 of 8 in the series 19 ஜனவரி 2025

.ரவி அல்லது.

தற்கொலைத் தாக்குதல் என்றான பின்

யார்

எங்கு

எப்படி

என்பதெல்லாம்

இரண்டாம் பட்சம்தான்.

யுகாந்திர நோதலின்

வெறுப்புக் கனல்

கொளுந்து விட்டு

எரிய

உதவிடும்

காற்றைப் பற்றி

சொல்லத் தேவையில்லை

கலந்திருக்கும்

மாசுக் கட்டற்று

கலந்திருப்பதால்.

அபகரித்து

ஆக்கிரமித்த

நிலங்களை

மீட்கும் போரில்

புற முதுகிட்டு

ஓடும்

அவலத்தை

ரசிக்க முடியவில்லை

அழிவில்

எம் பங்கும்

மிகைத்திருப்பதால்

சமாதான

மேகங்கள்

சூழாமல்

சர்வ நாச

யுத்தம்

நடந்து கொண்டிருக்கும்பொழுது

அங்கேயொரு

மாமிச

மனித பிண்டம்

மற்றொரு பூமியில்

இருப்பதெனும்

கற்பிதத்தில்

மரங்களை வெட்டி

மலைகளைக் குடைகிறது

அங்குமொரு நாள்

யுத்தம்

அரங்கேறுமென்பதை

அறியாமல்.

***

-ரவி அல்லது.

Series Navigationபெருமாள் முருகனின் கூள மாதாரி – ஒரு வாசக அனுபவம்இலக்கியம் என்ன செய்யும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *