வளவ. துரையன்
அரியாசனம் யாரும்
அமைத்துத் தராததால்
அரற்றுகிறது அசல்
போலிகள் தம்
பொக்கை வாயால்
சிரித்துக் கொண்டிருக்கின்றன.
போலிகள் எப்படியும்
பொய் எனும் ஆயுதம்
கொண்டு வெற்றி
பெறுகிறார்கள்
காலம்காலமாகவே
இந்திரன்கள்
வெற்றி பெற்றும்
கவுதமர்கள்
தோற்றுக் கொண்டும்
இருக்கிறார்கள்
எல்லாம் முடிந்தபிறகு
கல்லாய் மாறிப்பின்
கால்பட்டுப்
பெண்ணானது
என்ன நியாயம்?
போலி சிரிக்கிறதே
ஆமாம்
அசல் வருவதற்குள்
போலிக்குப்
புகழ்மாலை சூட்டும்
பொல்லாத உலகமிது