ரவி அல்லது
முக்கோணத்தில்
முளைத்திருக்கும்
கொம்பான வளைவுகளையும்.
சதுரத்தில்
நெளிந்திருக்கும்
பின்னல்
கோலங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம்
அம்மாவின்
நினைவு வரும்.
அவரைப் போன்ற
ஒருவர்
இங்கிருப்பது
சற்றே
ஆறுதலாகத்தான்
இருக்கும்.
கடக்கும் கணம்
நேசத்தில்
ஏக்கமாக மனம் எட்டிப்பார்க்கும்.
கவனம் பெறாத
மாக்கோலத்தைப்போல
கண்டுக்கொள்ளப்படாமல்
இங்கு
இவர்கள்
இருப்பார்களோ என்ற
கவலையோடு
கடப்பது
ஒவ்வொரு முறையும்
நடந்தேறும்
இல்லாமையின்
இன்னலின்
நெருடலாக
எங்கேயும்
எப்பொழுதும்.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com