ரவி அல்லது
யாவைச் சுற்றியும்
நிறைந்திருக்கும்
நிம்மதியை
திளைக்கப்
பழகிடாத
துயரத்தில்
கோப்பையைத் தூக்கியபடி
கொடுந்துயரில்
பார தூரம்
பயணிக்கின்றேன்
நிரப்பிவிடுவார்கள்
நிம்மதியையென
பருகிப்
பரவசங்கள் கொண்டுவிட.
ஆச்சரியத்திலும்
ஆச்சரியமாக
அனைவரும்
சொர்க்கப் பானமென
சுவைக்க நிரப்புகிறார்கள்
வழி வழியாக
நம்பியதை
இட்டு.
மொட்டு குடிக்க
வந்தவன்
நிரம்பி வழிவதறியாமல்.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
- இரக்கத்தைத் தின்ற இத்யாதிகள்
- மனிதக் கோப்பையினாலொரு மானுடப்பருகல்
- வாழ்வு
- கானல் நீர்
- பழகிப் போச்சு….
- ஶ்ருதி கீதை – 1
- நன்றி