(அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். நீங்கள் நலமாக இருப்பதாக நம்புகிறேன். இந்தக் கடிதம் ஒரு நினைவூட்டலாகவும், என் பணிவான வேண்டுகோளாகவும் இருக்கிறது. என் ஶ்ருதி கீதை (ஸ்ரீமத்பாகவதம் 10.87.1–50) தமிழ் மொழிபெயர்ப்பை திண்ணை இதழில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பரீக்ஷித் மன்னரின் கேள்வி – அனைத்து யுகங்களுக்கும் பொருந்தும் ஒரு சிந்தனை!
பரீக்ஷித் மன்னர், ஶ்ரீ ஶுக மகரிஷியிடம் கேட்டார்:
“மனமும், வார்த்தைகளும் பற்ற முடியாத பரம்பொருளை வேதங்கள் எவ்வாறு வர்ணிக்கின்றன? சொற்களாலும், பொருளாலும் வரையறுக்க முடியாத, முக்குணங்களையும் கடந்து நிற்கும் பரம்பொருளை, சொற்கள் கொண்டு விளக்க இயலுமா?” (ஶ்ரீம.பா. 10.87.1)
இது எந்த யுகத்திற்கும், எந்த நூற்றாண்டிற்கும் பொருந்தும் மிக ஆழ்ந்த கேள்வி!
வேதங்கள் முற்றிலும் விளக்க முடியாது என்று சொல்லிவிட்டனவா? இல்லை!
ஶ்ருதி கீதை (10.87.14–41) – இதில் வேதங்கள் பரம்பொருளை முழுமையாக விளக்க முடியாது என்று பணிவுடன் கூறினாலும், உண்மையில், அவை பரம்பொருளை முழுமையாகப் புகழ்ந்து விளக்குகின்றன!

அவன் (பரம்பொருள்) எந்த ஒன்றாலும் வரையறுக்க முடியாதவன், ஆனால் அனைத்திலும் உறையும் அநந்த சக்தி உடையவன்.

அவன் வேதங்களில் பிரத்தியட்சமாக நின்றும், மறைந்தும் விளங்குபவன் – நாமம், ரூபம், லீலைகளின் வழியாக பக்தர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துபவன்.

வேதங்கள் அவனையே நாடுகின்றன, அவனையே அடையக் கடைசித் துறையாகக் காண்கின்றன. ஆனால் அவனை உண்மையில் அறிய பக்தியே வழி!
வேதங்கள் சொல்வது “அவன் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன்!” என்றாலும், அவை அவனின் மகிமையை முழுமையாக பாடுகின்றன. எனவே, ஶ்ருதி கீதை ஒரு மறுப்பு அல்ல, இறையருளின் உச்சப்பாடல்!
இது வேதாந்தத்தின் மிக ஆழ்ந்த உண்மையாகும் – பரம்பொருளை வார்த்தைகள் முழுமையாக பற்ற முடியாது, ஆனால் அவன் மேல் கொண்ட பக்தி அவனை உணர வைக்கும்!
ஶ்ருதி கீதையின் தமிழாக்கம் – தமிழ்ச்சுவை மாறாமல்!
இந்த அரிய பகுதியை தமிழில் மொழிபெயர்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
திண்ணை இதழ் உயர்தரமான ஆன்மீகக் கட்டுரைகளை வெளியிடுவதில் சிறந்தது. ஶ்ருதி கீதை உங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும். பாகவதத்தின் அரிய செல்வம் தமிழ் மொழியில் வெளிவருவது ஆன்மீக ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை தரும்.
மொழிபெயர்ப்பின் மாதிரியை இத்துடன் இணைத்துள்ளேன். மேலும், வேதங்கள் பரமாத்மாவைப் போற்றி வணங்கும் ஓர் அழகான ஓவியத்தையும் சேர்க்கலாம். இது கட்டுரையின் அழகை மேலும் உயர்த்தும்.
திண்ணையில் இது வெளியிடப்படும் என்றால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். இது தமிழ் இலக்கியத்திற்கும், ஆன்மீக ஆராய்ச்சிக்கும் ஓர் அரிய பங்களிப்பாக அமையும்.
நன்றி. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
வெங்கடேசன் நாராயணசாமி )
[ஶ்ரீம.பா.10.87.1]
ஶ்ரீ பரீக்ஷித் மன்னர் வினவினார்:
பிரும்மரிஷியே! மனவாக்கேகா முக்குணமற்ற
சொற்பொருள் கடந்த மெய்ப்பொருள் பரமம்
முக்குணத் திரிபாம் சொற்பொருள் வடிவ
வேதப் பொருளாவது எங்ஙனம்?
[ஶ்ரீம.பா.10.87.2]
ஶ்ரீ ஶுகப் பிரும்மம் பதில் கூறுகிறார்:
அறம் பொருள் இன்பம் வீடு பெற
பொறிபுலன், புத்தி, மனம் பிராணனொடு
உணர்வெனும் பெரும்பதம் ஈந்தான் பரமன்.
சொற்பொருளில் ஸகுணம் வெளிப்படக் கூறி
இலக்கணை-எதிர்மறை கொண்டு நிர்குணம் நிறுவி
குறியாது குறித்து அறியும் அருள் நெறியே
மெய்ப்பொருள் உணர்த்தும் மறை நெறியாம்!
[ஶ்ரீம.பா.10.87.3]
இவ்வுபநிடதத் தத்துவப் பரம்பொருள்தனை நம்
முன்னோர்க்கும் முன்னோராம் ஸநகாதியர் தம்
உள்ளத்தில் உணர்ந்தேத்தி உபதேசித்தருள,
இதனைச் சிரத்தையுடன் சிந்தித்து ஏற்பவர்
பொய்யாம் உலகியல் தளைகளறுபட
எய்துவர் வீடுபேறே!
[ஶ்ரீம.பா.10.87.4]
ஶ்ரீமந் நாராயணனே மறை பெருவாக்கியத்
திருவருட்ப்பொருள் கூறாய் விளங்கும்
ஶ்ரீ நாரத-ஶ்ரீ நாராயண முனி உரையாடல் கதை
ஒன்றை உமக்கு உரைப்பேன்!
[ஶ்ரீம.பா.10.87.5]
பரமனின் பிரிய பக்தராம் ஶ்ரீ நாரத மஹரிஷி
பூவுலகைச் சுற்றி வருமொரு ஸமயம்
காலவரையறை கடந்த ஸனாதன
ஶ்ரீ நாராயண மஹரிஷியைத் தரிசிக்கத்
திருவதரி ஶ்ரீ நாராயணாஶ்ரமம் சென்றார்.
[ஶ்ரீம.பா.10.87.6]
இப்பாரத மக்களின் இக-பர நலன் கருதி
இந்நாராயண மஹரிஷி தர்மம் ஞானம் புலனடக்கம் கொண்டு பெருந்தவம் ஆற்றுகின்றார்
இக்கல்ப1 தொடக்கமுதல்.
1 ஒரு கல்பம் ஒரு மஹாயுகம், 1000 சதுர் யுகங்கள், 4.32 பில்லியன் மனித ஆண்டுகள் கொண்டது. இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் ஶ்வேதவராஹ கல்பம் என்று அழைக்கப்படுகிறது.
[ஶ்ரீம.பா.10.87.7]
குரு குலத் திலகா! ஶ்ரீ நாராயணாஶ்ரமத்தில்
கலாப கிராம முனிவர்கள் சூழ
வீற்றிருக்கும் ஶ்ரீ நாராயண ரிஷியை
ஶ்ரீ நாரதர் வணங்கி, என்னிடம் நீர் கேட்ட
இதே கேள்வியைக் கேட்டார்.
[ஶ்ரீம.பா.10.87.8]
ஏனைய முனிவர்கள் செவி மடுத்துக் கேட்க,
முன்பொரு ஸமயம், ஜனலோக வாஸிகள் மற்றும்
நம் முன்னோர்களாம் ஸநகாதிய சான்றோர்கள்
வேதம், பரம்பொருள் பற்றி ஆய்ந்து உரைத்ததை
ஶ்ரீ நாராயண ரிஷி ஶ்ரீ நாரத மஹரிஷியிடம்
விளக்கிக் கூறினார்.
[ஶ்ரீம.பா.10.87.9]
பகவான் ஶ்ரீ நாராயண மஹரிஷி கூறுகிறார்:
மலரவன் மைந்தா நாரத!
பண்டொரு ஸமயம் ஜனலோகம்தனில்
பிரும்மாவின் மானஸ மைந்தர்கள்
ஸநகாதியர் நால்வரும் பிரம்மச்சரிய விரதம் ஊன்றி நின்று
பிரும்மத்தை ஆய்ந்தறியும் பிரும்மஸத்திரம் நிகழ்த்தினர்.
[ஶ்ரீம.பா.10.87.10]
அதுஸமயம் நீர் ஶ்வேத த்வீபம் சென்று
ஶ்ரீ அநிருத்த பகவானைத் தரிசித்தீர்!
ஆங்கே மறைகளும் முழுமையாய்
விளக்க இயலா மௌனம் காக்கும்
அப்பரம்பொருள் குறித்த விவாதம் நிகழ்ந்தது.
ஆங்கும் எழுந்தது, நீர் எம்மிடம் கேட்ட இதே கேள்வியே!
[ஶ்ரீம.பா.10.87.11]
கல்வி கேள்வி தவ ஒழுக்கம் ஆகியவற்றுள்
ஸநகாதியர் நால்வரும் ஒருவருக்கொருவர் நிகரே!
தன்னைச் சார்ந்தோர், பகைவர் மற்றும் நடுவர் எனும்
விருப்பு-வெறுப்பு இலா ஸமநோக்கு உடையோர்.
பிரம்மத்தில் நிலைபொற்றோர் நால்வரும்.
இருப்பினும், ஸநந்தனரை உரையாளராய் ஏற்று
ஏனைய மூவரும் கேட்பதில் விருப்பங்கொண்டு அமர்ந்தனர்.
[ஶ்ரீம.பா.10.87.12]
ஶ்ரீ ஸநந்தனர் கூறுகிறார்:
தானே உமிழ்ந்து காத்த இவ்வுலகைப் பிரளயத்தில் உண்டு,
ஆற்றலுடன் அரவணைமேல் யோக
அறிதுயில் கொண்ட ஆதிகேஶவனை,
பிரளயம் முடிந்து மீண்டும் படைப்பு தொடங்கும் முன்
அண்ணலின் மூச்சுக்காற்றாய் வெளிவந்த வேதங்கள்
துதித்தனவே திருப்பள்ளியெழுச்சியாய்
அவர்தம் திருக்கல்யாண குணங்களை!
[ஶ்ரீம.பா.10.87.13]
அஃது, அயர்ந்துறங்கும் அரசபெருமானை
அண்டிப் பிழைக்கும் அரசவை வந்தியர்
அதிகாலையில் அருகில் சென்று அரசனின் பேராற்றலையும் புகழையும் தொழுதேத்தித் துயில் எழுப்புவது போலாயிற்றே!
[ஶ்ரீம.பா.10.87.14]
திருமறைகள் துதித்தன:
வெல்க! வெல்க! வென்று பகை கெடுக்கும்
வீரக் கழல்கள் போற்றி!
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகா போற்றி!
மாயையை மருட்டும் மன்னனடி போற்றி!
மறைகள் மலைக்கும் முக்குணம் முறிக்கும்
முடிசூடிய முதல்வனடி போற்றி!
மாயை கலப்பிலா மாதவனடி போற்றி!
மெய்மை மறைத்து முக்குணத்தால் முத்தளை பூட்டும்
முகுந்த மாயை மகிமை போற்றி!
திருவிற்கும் திருவாகிய திருநிறைச்செல்வன்
திருவடி போற்றி! போற்றி!
தன்னிலே தானாய் பரமான்மாவாய் நிறை
பரிபூரண நிர்குணப் பரமன் பதம் போற்றி! போற்றி!
திருமகள் கேள்வனின் திகட்டா
திருக்கல்யாண குணங்கள் போற்றி!
அண்டசராசர ஆற்றலின் ஊற்றாம் உணர்விழியாம்
ஆதிகேஶவன் அருளடி போற்றி! போற்றி!
நாரணன் நாம-ரூப நாத-விந்து-கலைகள் போற்றி!
மாயையேற்று ஸகுண பிரம்மமாய்
அவதரித்து ஆற்றிய திருவிளையாடல்கள் போற்றி!
செங்கண்ணன் அருளால் அவன் மூச்சாம்
மறைகள் துதிக்கும் மாண்பு போற்றி! போற்றி!
[ஶ்ரீம.பா.10.87.15]
பிரம்மத்தில் தோன்றி இயங்கி மறையும்
இவ்வருவுரு பிரபஞ்சம்
மாறும் மண்கலம் ஒப்பாம்.
மனம் வாக்கிற்க்கப்பால் என்றும் மாறாப்
பரம்பொருள் நும்மை
மனோவாக்கு காயம் கருதித் தொழுவர் முனிவர் பலரும்.
அஃது, மண் கல் மஞ்சம் மேல் நடந்த அடி
மண்ணுலகம் மேவியது போலத்தானே?
அவ்விதமாம், மறைகள் யாம் ஏற்றிப் பணிந்து
சாற்றி உரைப்பது அனைத்தும்
ஆதிமூலமாம் நின் திருவடிகளைத் துதிப்பதன்றோ?
[ஶ்ரீம.பா.10.87.16]
மும்மையின் மூல முதல்வோனே!
அனைத்துலகத் தாபம் தீர்க்கும் நின்
அபரிமித திருவிளையாடல் திருக்கதையமுதக்
கடலில் மூழ்கி முத்துயர் களைவர் முனிவர் சான்றோரெனில்,
என் சொல்வது, தன்னிலே தானாய் நின்று ஆசைகளறுத்து காலகுணங்களுண்டு பரமனாம் நின்னடியே பாடிப் பணிந்து
இடையறா இன்பக்கடலில் மூழ்கித் திளைக்கும்
அனுபூதிமான்களின் அப்பரமோன நிலைபற்றி?
[ஶ்ரீம.பா.10.87.17]
நித்தம் நும்மைத் தொழுதேத்துவோரே
உயிர் மூச்சுடன் வாழ்வோர்; மற்றோர்,
வெறுங்காற்றடைத்தப் பைகளாம்!
பேரறிவு, ஆணவாதி மூலதத்துவத்துள் தேவரீர் புகுந்து
பேரியக்கம் மூண்டெழுந்து சமட்டி வியட்டி வடிவாய்
உருவரு பேரண்டம் முளைத்தெழ,
இஃது, உமது உள்ளிருப்பின் ஸந்நிதான விஶேஷமே!
பஞ்ச கோஶங்கட்கு உயிராம் உள்நிறை பரமனாய் நீர்
பலப்பல உருவருவாய் புறத்தே தெரியினும்,
அவற்றுக்கப்பால் அவற்றுளொட்டா
அதிட்டான மெய்ப்பொருளாய்
நிலையாய் அமர்ந்தீர் என்றும் அகத்தே!
அடிக்குறிப்பு:
உடல் பஞ்ச கோஶ உரு; அதனால் ஐந்தும்
உடல் என்னும் சொல்லில் ஒடுங்கும் – உடலன்றி
உண்டோ உலகம்? உடல் விட்டு உலகத்தைக்
கண்டார் உளரோ? கழறு.
- உள்ளது நாற்பது, 5
ஶ்ருதி கீதை
[ஶ்ரீம.பா.10.87.1]
ஶ்ரீ பரீக்ஷித் மன்னர் வினவினார்:
பிரும்மரிஷியே! மனவாக்கேகா முக்குணமற்ற
சொற்பொருள் கடந்த மெய்ப்பொருள் பரமம்
முக்குணத் திரிபாம் சொற்பொருள் வடிவ
வேதப் பொருளாவது எங்ஙனம்?
[ஶ்ரீம.பா.10.87.2]
ஶ்ரீ ஶுகப் பிரும்மம் பதில் கூறுகிறார்:
அறம் பொருள் இன்பம் வீடு பெற
பொறிபுலன், புத்தி, மனம் பிராணனொடு
உணர்வெனும் பெரும்பதம் ஈந்தான் பரமன்.
சொற்பொருளில் ஸகுணம் வெளிப்படக் கூறி
இலக்கணை-எதிர்மறை கொண்டு நிர்குணம் நிறுவி
குறியாது குறித்து அறியும் அருள் நெறியே
மெய்ப்பொருள் உணர்த்தும் மறை நெறியாம்!
[ஶ்ரீம.பா.10.87.3]
இவ்வுபநிடதத் தத்துவப் பரம்பொருள்தனை நம்
முன்னோர்க்கும் முன்னோராம் ஸநகாதியர் தம்
உள்ளத்தில் உணர்ந்தேத்தி உபதேசித்தருள,
இதனைச் சிரத்தையுடன் சிந்தித்து ஏற்பவர்
பொய்யாம் உலகியல் தளைகளறுபட
எய்துவர் வீடுபேறே!
[ஶ்ரீம.பா.10.87.4]
ஶ்ரீமந் நாராயணனே மறை பெருவாக்கியத்
திருவருட்ப்பொருள் கூறாய் விளங்கும்
ஶ்ரீ நாரத-ஶ்ரீ நாராயண முனி உரையாடல் கதை
ஒன்றை உமக்கு உரைப்பேன்!
[ஶ்ரீம.பா.10.87.5]
பரமனின் பிரிய பக்தராம் ஶ்ரீ நாரத மஹரிஷி
பூவுலகைச் சுற்றி வருமொரு ஸமயம்
காலவரையறை கடந்த ஸனாதன
ஶ்ரீ நாராயண மஹரிஷியைத் தரிசிக்கத்
திருவதரி ஶ்ரீ நாராயணாஶ்ரமம் சென்றார்.
[ஶ்ரீம.பா.10.87.6]
இப்பாரத மக்களின் இக-பர நலன் கருதி
இந்நாராயண மஹரிஷி தர்மம் ஞானம் புலனடக்கம் கொண்டு பெருந்தவம் ஆற்றுகின்றார்
இக்கல்ப1 தொடக்கமுதல்.
1 ஒரு கல்பம் ஒரு மஹாயுகம், 1000 சதுர் யுகங்கள், 4.32 பில்லியன் மனித ஆண்டுகள் கொண்டது. இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் ஶ்வேதவராஹ கல்பம் என்று அழைக்கப்படுகிறது.
[ஶ்ரீம.பா.10.87.7]
குரு குலத் திலகா! ஶ்ரீ நாராயணாஶ்ரமத்தில்
கலாப கிராம முனிவர்கள் சூழ
வீற்றிருக்கும் ஶ்ரீ நாராயண ரிஷியை
ஶ்ரீ நாரதர் வணங்கி, என்னிடம் நீர் கேட்ட
இதே கேள்வியைக் கேட்டார்.
[ஶ்ரீம.பா.10.87.8]
ஏனைய முனிவர்கள் செவி மடுத்துக் கேட்க,
முன்பொரு ஸமயம், ஜனலோக வாஸிகள் மற்றும்
நம் முன்னோர்களாம் ஸநகாதிய சான்றோர்கள்
வேதம், பரம்பொருள் பற்றி ஆய்ந்து உரைத்ததை
ஶ்ரீ நாராயண ரிஷி ஶ்ரீ நாரத மஹரிஷியிடம்
விளக்கிக் கூறினார்.
[ஶ்ரீம.பா.10.87.9]
பகவான் ஶ்ரீ நாராயண மஹரிஷி கூறுகிறார்:
மலரவன் மைந்தா நாரத!
பண்டொரு ஸமயம் ஜனலோகம்தனில்
பிரும்மாவின் மானஸ மைந்தர்கள்
ஸநகாதியர் நால்வரும் பிரம்மச்சரிய விரதம் ஊன்றி நின்று
பிரும்மத்தை ஆய்ந்தறியும் பிரும்மஸத்திரம் நிகழ்த்தினர்.
[ஶ்ரீம.பா.10.87.10]
அதுஸமயம் நீர் ஶ்வேத த்வீபம் சென்று
ஶ்ரீ அநிருத்த பகவானைத் தரிசித்தீர்!
ஆங்கே மறைகளும் முழுமையாய்
விளக்க இயலா மௌனம் காக்கும்
அப்பரம்பொருள் குறித்த விவாதம் நிகழ்ந்தது.
ஆங்கும் எழுந்தது, நீர் எம்மிடம் கேட்ட இதே கேள்வியே!
[ஶ்ரீம.பா.10.87.11]
கல்வி கேள்வி தவ ஒழுக்கம் ஆகியவற்றுள்
ஸநகாதியர் நால்வரும் ஒருவருக்கொருவர் நிகரே!
தன்னைச் சார்ந்தோர், பகைவர் மற்றும் நடுவர் எனும்
விருப்பு-வெறுப்பு இலா ஸமநோக்கு உடையோர்.
பிரம்மத்தில் நிலைபொற்றோர் நால்வரும்.
இருப்பினும், ஸநந்தனரை உரையாளராய் ஏற்று
ஏனைய மூவரும் கேட்பதில் விருப்பங்கொண்டு அமர்ந்தனர்.
[ஶ்ரீம.பா.10.87.12]
ஶ்ரீ ஸநந்தனர் கூறுகிறார்:
தானே உமிழ்ந்து காத்த இவ்வுலகைப் பிரளயத்தில் உண்டு,
ஆற்றலுடன் அரவணைமேல் யோக
அறிதுயில் கொண்ட ஆதிகேஶவனை,
பிரளயம் முடிந்து மீண்டும் படைப்பு தொடங்கும் முன்
அண்ணலின் மூச்சுக்காற்றாய் வெளிவந்த வேதங்கள்
துதித்தனவே திருப்பள்ளியெழுச்சியாய்
அவர்தம் திருக்கல்யாண குணங்களை!
[ஶ்ரீம.பா.10.87.13]
அஃது, அயர்ந்துறங்கும் அரசபெருமானை
அண்டிப் பிழைக்கும் அரசவை வந்தியர்
அதிகாலையில் அருகில் சென்று அரசனின் பேராற்றலையும் புகழையும் தொழுதேத்தித் துயில் எழுப்புவது போலாயிற்றே!
[ஶ்ரீம.பா.10.87.14]
திருமறைகள் துதித்தன:
வெல்க! வெல்க! வென்று பகை கெடுக்கும்
வீரக் கழல்கள் போற்றி!
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகா போற்றி!
மாயையை மருட்டும் மன்னனடி போற்றி!
மறைகள் மலைக்கும் முக்குணம் முறிக்கும்
முடிசூடிய முதல்வனடி போற்றி!
மாயை கலப்பிலா மாதவனடி போற்றி!
மெய்மை மறைத்து முக்குணத்தால் முத்தளை பூட்டும்
முகுந்த மாயை மகிமை போற்றி!
திருவிற்கும் திருவாகிய திருநிறைச்செல்வன்
திருவடி போற்றி! போற்றி!
தன்னிலே தானாய் பரமான்மாவாய் நிறை
பரிபூரண நிர்குணப் பரமன் பதம் போற்றி! போற்றி!
திருமகள் கேள்வனின் திகட்டா
திருக்கல்யாண குணங்கள் போற்றி!
அண்டசராசர ஆற்றலின் ஊற்றாம் உணர்விழியாம்
ஆதிகேஶவன் அருளடி போற்றி! போற்றி!
நாரணன் நாம-ரூப நாத-விந்து-கலைகள் போற்றி!
மாயையேற்று ஸகுண பிரம்மமாய்
அவதரித்து ஆற்றிய திருவிளையாடல்கள் போற்றி!
செங்கண்ணன் அருளால் அவன் மூச்சாம்
மறைகள் துதிக்கும் மாண்பு போற்றி! போற்றி!
[ஶ்ரீம.பா.10.87.15]
பிரம்மத்தில் தோன்றி இயங்கி மறையும்
இவ்வருவுரு பிரபஞ்சம்
மாறும் மண்கலம் ஒப்பாம்.
மனம் வாக்கிற்க்கப்பால் என்றும் மாறாப்
பரம்பொருள் நும்மை
மனோவாக்கு காயம் கருதித் தொழுவர் முனிவர் பலரும்.
அஃது, மண் கல் மஞ்சம் மேல் நடந்த அடி
மண்ணுலகம் மேவியது போலத்தானே?
அவ்விதமாம், மறைகள் யாம் ஏற்றிப் பணிந்து
சாற்றி உரைப்பது அனைத்தும்
ஆதிமூலமாம் நின் திருவடிகளைத் துதிப்பதன்றோ?
[ஶ்ரீம.பா.10.87.16]
மும்மையின் மூல முதல்வோனே!
அனைத்துலகத் தாபம் தீர்க்கும் நின்
அபரிமித திருவிளையாடல் திருக்கதையமுதக்
கடலில் மூழ்கி முத்துயர் களைவர் முனிவர் சான்றோரெனில்,
என் சொல்வது, தன்னிலே தானாய் நின்று ஆசைகளறுத்து காலகுணங்களுண்டு பரமனாம் நின்னடியே பாடிப் பணிந்து
இடையறா இன்பக்கடலில் மூழ்கித் திளைக்கும்
அனுபூதிமான்களின் அப்பரமோன நிலைபற்றி?
[ஶ்ரீம.பா.10.87.17]
நித்தம் நும்மைத் தொழுதேத்துவோரே
உயிர் மூச்சுடன் வாழ்வோர்; மற்றோர்,
வெறுங்காற்றடைத்தப் பைகளாம்!
பேரறிவு, ஆணவாதி மூலதத்துவத்துள் தேவரீர் புகுந்து
பேரியக்கம் மூண்டெழுந்து சமட்டி வியட்டி வடிவாய்
உருவரு பேரண்டம் முளைத்தெழ,
இஃது, உமது உள்ளிருப்பின் ஸந்நிதான விஶேஷமே!
பஞ்ச கோஶங்கட்கு உயிராம் உள்நிறை பரமனாய் நீர்
பலப்பல உருவருவாய் புறத்தே தெரியினும்,
அவற்றுக்கப்பால் அவற்றுளொட்டா
அதிட்டான மெய்ப்பொருளாய்
நிலையாய் அமர்ந்தீர் என்றும் அகத்தே!
அடிக்குறிப்பு:
உடல் பஞ்ச கோஶ உரு; அதனால் ஐந்தும்
உடல் என்னும் சொல்லில் ஒடுங்கும் – உடலன்றி
உண்டோ உலகம்? உடல் விட்டு உலகத்தைக்
கண்டார் உளரோ? கழறு.
- உள்ளது நாற்பது, 5