ரவி அல்லது
உடைகள்
மாறும் பொழுது
அது
உலவுவதற்கு சாத்தியமாக அமைந்தது.
உணவுகள் மாறும்பொழுது
உற்சாகமாக இருந்தது.
நினைவுகளை
ஞாபகிக்க முடியாமல்
நடப்பவைகள்
யாவும்
நிரம்பியபொழுது
நாகரீகமெனத் தோன்றியது.
அழுத்த விசைகளுக்கு
ஆட்கொண்டபொழுது
அடுத்த தலைமுறை
வளர்ந்து நின்று
அயலகனாக
ஆச்சரியம் தந்தது.
அவ்வப்பொழுதுதான
ஊர்ப் பயணங்கள்
அங்கேயும்
ஒன்ற முடியாத
அவஸ்தைகளைக் கொடுத்தது.
அயலகத்தின் பிரஜையாக
மாறிப்போன பொழுதும்
அவர்கள்
அந்நியராகவேப்
பார்த்தது
அச்சத்தைக் கொடுத்தது.
ஆதிச் சரடை
அடையும் ஆசைகள்
துளிர்த்த போது
பெயர் மட்டுமே
தங்கி
கண்ணாடிக்குள்
சிக்கிய மீன்
காவந்தில் இருப்பதான பொழுதாக
நீந்தி நீந்தி
வெளிவர முடியாது
வாழ்க்கை
யாவருக்கும்
மாறிப்போனது.
இப்பாடுகளுக்கிடையில்
‘மாப்ளை வேலை என்னாச்சு.’
‘மகளுக்கு மாப்பிள்ளை என்னாச்சு ‘ போன்ற
கேள்விகளுக்கு
பதில் சொல்லியே
மத்திய வயதைக்கடந்தவர்களுக்கு
வெளிச் சொல்ல முடியாத
வேதனையில்
அன்றாடங்கள்
மிகை
அலுப்பைக் கூட்டுகிறது.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
நன்றி:
அயலக வாழ்க்கையை
அங்கலாய்த்து அங்கிருக்கும்
நண்பர் தேனி பாபு அவர்கள் கவிதை எழுதச்சொன்னதற்கு.
- மேன்மை தாங்கிய மெய்கள்
- சுவைக்க வைத்த பாவிகள்
- 3 கவிதைகள்
- நீ தான் என் ஜீனி
- ஶ்ருதி கீதை – 4