ரவி அல்லது
சொட்டுச் சொட்டாக
நிறைகிறது
நம்பிக்கை
பாத்திரத்தில்
துருப்பிடித்திருந்தாலும்.
யாரோ
விதைத்த வினைக்கு
அறுவடைகள் செய்யும்
எமக்கு
வாய்க்கிறது
மண் கவலமாக
மகசூல்கள்.
வெந்து
தணிந்ததில்
வெறுப்புகள் கொண்டு
உயராத
நீர் மண்டத்திற்கு
ஒரு
மரக் கன்று
நடலாம்தான்
எம்
கண்ணீரில்
அது
துளிர்த்தால்.
கருப்பின தேசத்தில்
காகிதத்தைக் காட்டியே
கனிம வளங்களை
களவாடிச் செல்லுங்கள்
கேப் டவுன்களை
கிரீடமாக
தருவித்து.
நீங்கள்
வீணாக்கும்
தண்ணீர்த் துளிகளின்
விலைகள் அறியாதபொழுதில்
நாங்கள்
விண் நோக்கிக்
கையேந்துகிறோம்
இது
மனித சதியெனத்
தெரிந்தும்
மழைக்காக.
***
-ரவி அல்லது.
நன்றி:
இன்று (22/03/25)
சொட்டும் தண்ணீரைப் பற்றி
சொரணைகளற்றவர்களின்
தண்ணீர் தினத்திற்கு.
ravialladhu@gmail.com
***
- கவிதைப் பட்டறை
- சொட்டாத சொரணைகள்
- வீடும் வெளியும்
- 4 கவிதைகள்
- I Am an Atheist
- இருட்டு