கைத்தவறி விழுந்த
காலத்தை தேடுகின்றேன்.
உங்களின் லாந்தரில்
இன்னும் கொஞ்சம்
வெளிச்சம் தெரிகின்றது
வீடோ காடோ
எனக்கு வேண்டியது
கவிதை எழுத
கொஞ்சம் வெளிச்சம்
ஒரு துண்டு நிலம்.
நான்
மில்டன் இல்லை,
இழந்த சுவர்க்கத்தை மீட்க.
என்னிடம் கண்களில்
இன்னமும் பார்வை இருக்கின்றது
உதிக்கும் சூரியனைப்பார்க்க
மேகத்தோடு மோகம் கொள்ளும்
நிலவைப்பார்க்க.
நுனிப்புல்லில்
மிளிரும் பனித்துளிப்பார்க்க
வசந்தக்காலத்தின்
பரவசத்தைப்பார்க்க
உங்களின்
ஓலைச்சுவடி கவிதையும் வாசிக்க.
ஜெயானந்தன்.