நவநீத கிருஷ்ணன்
லட்சம் கோடி காதல் கண்ட
கரை கொண்டவள் நீ
காதலர் கொஞ்சும் காட்சியின் சாட்சி நீ
நுரை தள்ள திரும்பத் திரும்பக் கரை வந்து
நோகிறாய் நீ
பேர் ஆழம்
பெரு அகலம்
கொண்டு
பேரன்பு என்ன என்று
புத்தி சொல்கிறாய்,
அதை கத்தி சொல்கிறாய்
கேளா காதும்
பாரா கண்ணும்
கொண்ட மானுடர் நாங்கள்
என்றறியாத நீ