சசிகலா விஸ்வநாதன்
சொல்லிய சொல்லுக்கும்,
சொல்லப் போகும்
அடுத்த சொல்லுக்கும் இடையே,
நெருடலாக;
அது..
ஒரு நொடியா?
ஒரு யுகமா?
இடைவெளி கடினம்.
சொல்லும் நேரம் தவற,
சொல் தடுமாற,
சொல்லும் பொருளும் மாற்றம் அடைய,
சொல் மாறி வரும் நாவில்.
சந்தியில், மனம்
பொருந்தா சந்தியில்
சந்தி சிரிக்க;
சொற்கள் தனித்தனியாக;
சந்தியின் சந்தியில்
என் சொற்கள்.
சசிகலா விஸ்வநாதன்
சசிகலா விஸ்வநாதன்