கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை
@
பாண்டவர் கூத்தில் தருமர்
மகிழுந்தில் சென்ற பாட்டி
வீட்டிற்கு நடந்து வந்தார்
வாக்குச்சாவடி
@
விடாமுயற்சியே வெற்றி
பேச வந்தவரின் ஒலிவாங்கியில்
தொடர் சிக்கல்
@
பிள்ளையார் சிலை
மறைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்
கைபேசியில் பூசாரி
@
வீட்டைப் பூட்டிய பின்
இழுத்து உறுதி செய்தார்
பணிக்குச் செல்லும் திருடன்
@
பசிக்கும் வயிறு
அவசரமாய் சாப்பிட்டான்
ஆகாரத்துக்கு முன் மாத்திரை
@
குத்துச்சண்டை வீரர்
கதறி கதறி அழுகிறார்
சொத்தைப் பல்
@
தேர்தல் பிரச்சாரம்
சேகரிக்கப்பட்டன
பிரியாணி டோக்கன்
@
நீண்ட சாலை
வளைந்து செல்லும் கால்கள்
குடிமகன்
@
தொடர்வண்டி கழிவறை
ஒட்டவே இல்லை
சங்கிலியில் ஜக்கு