காசியில் குமரகுருபரர்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 6 of 6 in the series 18 மே 2025

முனைவர் ந.பாஸ்கரன்,

இணைப் பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 

                                                       

குமரகுருபரர் 1625-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்ற ஊரில் சைவ மரபில் பிறந்தார்.  சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிள்ளைப் பிராயத்தில் பேசும்வயதை அடைந்தும் அவர் பேசும்திறன் பெறவில்லை. எனவே இவர் பெற்றோர் திருச்செந்தூர் முருகனைவேண்டி  கோயிலில் தங்கி உப்பில்லாத உணவை உண்டு 40 நாட்கள் விரதம் இருந்தனர். 45-ஆம் நாள்  பேசும் ஆற்றலை அடைந்தான். இறைவனுக்கு நன்றி சொல்லிக் கடன்பட்டனர். சிறுவயதிலேயே இறைவன்மீது கந்தர்கலிவெண்பா பாடி அருளினார். இறைவன்மீது கொண்ட பக்தியின் காரணமாக தலயாத்திரை மேற்கொண்டு பலதளங்களும் சென்றுவர புறப்பட்டுச் சென்றார். அப்பொழுது தருமபுரம் ஆதீனம் வந்தார்.  ஆதீனகர்த்தரிடம் இவர் வாக்குத் தடைபட்டது அதனால் மாசிலாமணி தேசிகரையே தனது குருவாக ஏற்றார். சைவ சமயத்தை அழித்து இஸ்லாத்தைப் பரப்பும் பணியில் இஸ்லாமியர் பாடுபட்டனர். இதனை உணர்ந்த மாசிலாமணி தேசிகர் இஸ்லாத்துக்கு எதிராகநின்று சைவத்தை நிலைநாட்டும் திறன்பெற்றவர் குமரகுருபரே ஆவார்  என்பதை உணர்ந்து அவரை காசிக்கு ச் சென்று வரும்படி பணித்தார். அதனையேற்று  குமரகுருபரரும்  காசியாத்திரை சென்றார். அங்கே டில்லியை ஆண்ட முகலாய மன்னனான பாதுஷாவிடம் காசி மாநகரில் இடம்வேண்டிப் பெற்று பரமசிவனுக்கு ஒரு கோயில் கட்ட நினைத்தார். ஆனால் இந்துஸ்தானி மொழி தெரியாததால் பாதுஷாவிடம் தனது கோரிக்கையை எடுத்துக் கூற முடியாமல் தவித்தார். அம்மொழி தெரிந்த சிலர் இவருக்கு உதவுவதாகக் கூறி சாக்குப் போக்குகள் சொல்லி, பாதுஷாவை சந்திக்கவிடாமல் தடுத்து வந்தனர். அதனால் வருந்திய குமரகுருபரர், எல்லாம் வல்ல சரசுவதி தேவியைத் துதித்து சகலகலாவல்லிமாலை என்னும் பிரபந்தத்தைப் பாடினார். உடனே வாணியின் அருளினால் அவருக்கு இந்துஸ்தானி மொழியில் சரளமாகப் பேசும் ஆற்றல் கிட்டிற்று. பாதுஷாவிடம் எப்படிச்செல்வது என குமரகுருபரர் யோசித்துக் கொண்டிருந்தபோது வாணியின் அருளால் சிங்கம் ஒன்று அவர் முன் வந்து நின்றது. குமரகுருபரர் அச்சிங்கத்தின் மீதமர்ந்து நேரே பாதுஷாவின் சபைக்குச் சென்றார். திடீரென்று சபைக்கு வந்த சிங்கத்தையும் அதன்மீது கம்பீரமாக அமர்ந்துவந்த குமரகுருபரரையும் கண்ட சபையோர் அச்சமும் ஆச்சரியமும் அடைந்தனர்.

பாதுஷாவோ குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் கூடியிருந்த சபையில்  குமரகுருபரரை உரை நிகழ்த்த வேண்டினான் பாதுஷா. குமரகுருபரரும் கலைமகளின் அருளால் இந்துஸ்தானி மொழியில் சைவ சித்தாந்தத் தத்துவத்தை மடை திறந்த வெள்ளம் போல் எடுத்துரைத்தார். அதனைக்கேட்ட பிற சமயகுருமார்கள் இந்து மதத்திலும் சைவசமயத்திலும் ஆர்வங்கொண்டனர். பாதுஷாவும் குமரகுருபரரின் சைவசித்தாந்த உரையைக் கேட்டு அகம் மகிழ்ந்தான். அவருக்கு யாதுசெய்ய வேண்டும் எனக்கேட்டான். உடனே குமரகுருபரர் காசியிலேயே தான் இருப்பதற்கு ஒரு மடம் அமைப்பதற்கு கேதார கட்டடத்தில் இடம் வேண்டினார். அப்படியே பாதுஷா அவருக்கு கேதார கட்டத்தில் இடம் தந்து உதவினார். பின்பு குமரகுருபரர் அங்கே மறைக்கப்பட்டுக்கிடந்த விசுவலிங்கப்பெருமானை வெளிப்படுத்தி சிறுகோயில்கட்டி நித்திய பூஜைகள் சைவ நியமனப்படி நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேதார கட்டடத்தில் உள்ள கேதாரலிங்த்தை வெளிப்படுத்தி கோயில் கட்டுவித்தவர், இம்மடத்தின் கிளையைநத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் என்ற ஊரிலும் குமரகுருபர ஸ்வாமிகள் அமைத்தார். சகலகலாவல்லி மாலை 10 எளிய தமிழ்ப்பாடல்கள் கொண்டது. இதன் முதற்பாடல் 

“வெண்டாமரைக்கன்றி நின்பதம்.

தாங்க 

என் வெள்ளை உள்ளத்

தண்டாமரைக்குத் தகாது கொலோ!

சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க 

ஒழித்தான் பித்

தாக 

உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவை கொள் கரும்பே

சகல கலா வல்லியே!

ஏழு உலகங்களையும் உண்டு பாதுகாத்தவனான திருமால் உறங்கவும், அவ்வுலகங்களை அழிக்கின்ற தொழிலையுடைய சிவபெருமான் பித்தனாகி அலையவும் செய்தவனான நான்முகன் இனியதென எண்ணிச் சுவைக்கும் கரும்பைப் போன்றவளே! வெள்ளைத்தாமரையே அன்றி உனது திருவடிகளை எனது தூய்மையான வெள்ளை உள்ளம் தாங்கத்தகுதியற்றதோ? என்பதாகும். இதில் பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந் தொழில்கள் குறிக்கப்படுகின்றன. பிரும்மாவே சரஸ்வதி கடாட்சம் வேண்டித் துதித்தபாடல் இது என்பதால் மற்ற கலைமகள் தோத்திரங்களுக்கு இல்லாத மகிமை இப்பாடலுக்கு உண்டு. 

Series Navigationகூடுவதன் கற்பிதங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *