கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
This entry is part 1 of 8 in the series 20 ஜூலை 2025

குரு அரவிந்தன்

சென்ற 13-7-2025 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ரொறன்ரோவில் உள்ள பைரவி நுண்கலைக் கூடத்தில்  வெளியிட்டு வைக்கப்பெற்றது.

தேனீர் சிற்றுண்டியைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன செல்வி சோலை இராச்குரார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப் பெற்றன. அதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.

தொடர்ந்து வரவேற்புரையை முன்னாள் தலைவரும், தற்போதைய துணைத் தலைவருமான குரு அரவிந்தன் வழங்கினார். அதன்பின் தற்போதைய தலைவர் ரவீந்திரநாதன் கனகசபையின் தலைமையுரை இடம் பெற்றது.

தொடர்ந்து கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ், கவிஞர் குமரகுரு, காப்பாளர் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், முன்னாள் தலைவரும் காப்பாளருமான ஆசிரியர் சிவபாலு, கவிஞர் சயந்தன், இராச்குமார் குணரட்ணம் ஆகியோரது வாழ்த்துரைகள் இடம் பெற்றன.

அடுத்து மன்றச் செயலாளர் முனைவர் வாசுகி நகுலராஜாவின் நூல் அறிமுகவுரை இடம் பெற்றது. தொடர்ந்து பேராசிரியர். இ. பாலசுந்தரம் அவர்களின் நூல் வெளியீட்டுரை இடம் பெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்கனவே இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருந்தது. கவிஞர் கந்தவனம் அவர்கள் தலைவராக இருந்த போது ‘அரும்புகள்’ என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பை தொகுத்து வெளியிட்டிருந்தார். இரண்டாவது தொகுப்பு குரு அரவிந்தன் தலைவராக இருந்த போது, ‘சர்வதேச சிறுகதைகள்’ என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டிருந்தார். மூன்றாவது தொகுப்பு ‘கதைச்சரம்’ என்ற பெயரில் இன்று வெளிவருகின்றது. இதை தலைவர் ரவீந்திரநாதன் தொகுத்திருக்கின்றார்.

இந்த சிறுகதைத் தொகுப்பில் சதிவிரதன் – குரு அரவிந்தன், கூடுகள் சிதைந்தபோது – அகில், இரு துருவங்கள் – க. ரவீந்திரநாதன், பரவைக்கடல் – டானியல் ஜீவா, இலையுதிர் – சிவநயனி முகுந்தன், ஏகாநேகம் – ஸ்ரீரஞ்சனி, நோக்கப்படாத கோணங்கள் – இரா சம்பந்தன், நேர்மை – முருகேசு கிருபாகரன், ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது – வஸந்தன், நில் கவனி – ஆர். என். லோகேந்திரலிங்கம், மாயவருத்தத்தின் மந்திர முடிச்சு – தேவகாந்தன், மௌனமே பேசு – மாலினி அரவிந்தன், ஈழத்துச் சூரியன் – நவகீதா முருகண்டி, சமரசம் – ஐ. ஜெகதீசன், பெருமிதம் – எஸ். ஜெகதீசன், நாசகாரிகள் – மா. சித்திவினாயகம், பிஞ்சுகள் – கனி விமலநாதன், அறுவடை – அகணி சுரேஸ், காலம் செய்த கோலம் – நாகேஸ்வரி ஸ்ரீ குமரகுரு, ஆழ்வாரே சாட்சி – வீணைமைந்தன், எண்ண அலைகள் – இராஜ்மீரா இராசையா, ஏமாற்றம் தந்த அனுபவம் – த. சிவபாலு, துணை போனாலும் – சிவநேசன் சின்னையா, இப்படியும் மனிதர்கள் – கமலவதனா சுந்தா, 35 வருடங்கள் – சந்திரன் வேலாயும் ஆகிய 25 கனடாத் தமிழ் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எழுத்தாளர்களுக்குச் சான்றிதழ்களும், வருகை தந்தோருக்கு விசேட பிரதிகளும் வழங்கப்பட்டன. கனடா ஜே.ஜே. பிரின்ரேசாரின் கைவண்ணத்தில் உருவான இந்த சிறுகதைத் தொகுப்பிற்குச் செல்வி ஓவியா சுபாஸ் அவர்கள் அழகான அட்டைப்படம் வரைந்திருந்தார். நூல் ஆலோசனைக் குழுவில் ரவி கனகசபை, குரு அரவிந்தன், வாசுகி நகுலராஜா, அகணி சுரேஸ், ஆர். என். லோகேந்திரலிங்கம், நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.  

தொடர்ந்து முன்னாள் தலைவரும், தற்போதைய துணைச் செயலாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை முன்னாள் தலைவரும் நிர்வாகசபை அங்கத்தவருமான அகணி சுரேஸ் அவர்கள் சிறப்பாகக் கொண்டு நடத்தினார்.

Series Navigationமாநடிகன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *