சம்சா மாலையில்
கடற்காற்றோடு விற்பவன்
வாழ்வின் இருண்ட பகுதிகளில்
முளைந்தெழுந்த
படகு காதலிகளின் கண்ணீரில் நனையும்
கைக்குட்டைகளில்
காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி
போட்ட துண்டுத்துணிகள் காற்றில் பறக்கும் கதைகளை அறிந்தவன்.
அடுத்த படகில்
அதே காதலன்
வேறு காதலி.
கண்ணகி நேற்று
மாதவி இன்று
மணிமேகலை நாளை வருவாள்.
சம்சா விற்றவன்
விவேகானந்த பாறையில்
தியானம் செய்தான்
ஒரு மாலை நேரத்தில்.
கிட்டத்தட்ட சந்நியாசி ஆனான்.
கடற்கரை காற்றில்
கற்பின் வாடை தெரியவில்லை.
பழைய பஞ்சாங்க மாமாக்கள்தான்
கட்டங்களைப்பார்த்து
பெண்ணிற்கு செவ்வாய்தோஷம் என்றனர்.
படகுகள் இருக்கும் வரை
செய்வாயோ, புதனோ
எப்படியும் ஒரு சுக்கிரன்
சிக்கினால் போதுமென்று
இன்னுமும் எம்ராய்ட்ரி
போடுவர் காதலிகள்.
-ஜெயானந்தன்.
- இலக்கியப்பூக்கள் 344
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
- நிறமாறும் அலைகள்
- …………….. எப்படி ?
- *BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]
- வண்ண நிலவன்- வீடு
- தவம்
- கல்விதை
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
- நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்
- தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை