ஞானமும் விவேகமும் உள்ளவர்கள், முந்தைய காலங்களின் அனைத்துவிதமான ஆர்வங்கள் உத்வேகங்கள் எல்லாவற்றின் ஊடாகவும் வாழ்ந்து பார்த்து இறுதியில் இனி வாழ்வதற்கு என்று எதுவுமே இல்லை என்பதே கண்டுணர்ந்துவிட்டார்கள் என்றவிதமாய் அனுமானித்துக்கொள்வது உலக வரலாற்றில் ஏராளமான பல கால கட்டங்களில் இருந்தது போலவே, இன்றும் நம்மிடையே பொதுவான வழக்கமாக இருக்கிறது. இந்தவிதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பவர்கள் உண்மையாகவே மகிழ்ச்சியற்றிருப்பவர்கள். ஆனால், அப்படி மகிழ்ச்சியற்றிருப்பது பற்றி அவர்கள் கர்வங்கொள்கிறார்கள். இந்த மகிழ்ச்சியின்மையை அவர்கள் பிரபஞ்சத்தின் இயல்பாக அடிப்படைத் தன்மையாக வரவேற்கிறார்கள். இது மட்டுமே அறிவும் விவேகமும் கொண்டவரின் ஒரே பகுத்தறிவார்ந்த பார்வையாகக் கருதுகிறார்கள். தங்களுடைய மகிழ்ச்சியின்மை அல்லது மகிழ்ச்சியற்று இருத்தல் குறித்து அவர்களுக்கு இருக்கும் கர்வம் அவர்களை விடக் குறைவான மதிநுட்பம் உள்ள மனிதர்களை மேற்படி நபர்களின் மகிழ்ச்சியின்மையின் உண்மைத் தன்மையையே சந்தேகிக்கச் செய்கிறது. நிஜமான மகிழ்ச்சி என்பதையே சந்தேகிக்கச் செய்கிறது. மகிழ்ச்சியற்று துயரார்ந்து இருப்பதில் குதூகலம் உணரும் மனிதன் உண்மையில் துயரத்தில் ஆழ்ந்திருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்தப் பார்வை மிகவும் எளிமையான ஒன்று; மேற்குறிப்பிட்ட துயரவாதிகள் தங்கள் மகிழ்ச்சியின்மையில் ஒருவித உயர்வு மனப்பான்மையும் உள்ளொளியையும் உணர்கிறார்கள் என்றவகையில் அவை அவர்களுக்குக் கிடைக்கும் சிறிய நிவாரணம் தான். ஆனால், எளிய ஆனந்தங்களின் இழப்புக்கு அது போதுமானது அல்ல. மகிழ்ச்சியற்றிருப்பதில் எந்தவகையான மேம்பட்ட பகுத்தறிவார்ந்த/ தர்க்கபூர்வமான நியாயமும் இல்லையென்றே நான் கருதுகிறேன். விவேகமுள்ள மனிதர் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எந்த அளவுக்கு அனுமதிக்கிறதோ அந்த அளவு சந்தோஷமாக இருப்பார். பிரபஞ்சம் குறித்த, யோசனை அவதானிப்பு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வேதனையளிப்பதாக இருப்பதை உணர்ந்துகொண்டால் உடனே அவர் வேறு விஷயம் குறித்து ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கி விடுவார். இதைத்தான் நான் இந்த அத்தியாயத்தில் நிரூபிக்க விரும்புகிறேன். வாசகர்களிடம் ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்ள் என்னவிதமான வாதங்கள் முன்வைக்கப் பட்டாலும் சரி, பகுத்தறிவு மகிழ்ச்சியின் மீது எந்தவிதத் தடையையும் விதிக்கவில்லை. இது போதாது, இன்னும் அழுத்தமாக எனக்குத் தோன்றுவது என்னவென்றால், தங்களுடைய சோகங்களுக்கு பிரபஞ்சம் குறித்த தங்கள் கண்ணோட்டங்களே காரணம் என்று மிக உண்மையான அளவில் கருதுகிறார்களோ எவர் கருதுகிறார்களோ அவர்கள் தங்களுடைய குதிரைக்கு முன்னால் வண்டியை நிறுத்துகிறார்கள். உண்மை என்னவென்றால், அவர்கள் தங்களுக்கே தெரியாத ஏதோ ஒரு காரணத்தினால் மகிழ்ச்சியற்றிருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியின்மை அவர்களை தாம் வாழும் உலகின் ஏற்புடையதற்ற சில தன்மைகளிலேயே அவர்களுடைய எண்ணமும் கவனமும் நிலைகொண்டிருக்கும்படி வழிநடத்திச்செல்கிறது.
நவீன அமெரிக்கர்களுக்கு நான் கவனப்படுத்த விரும்பும் கண்ணோட்டம் திரு 1JOSEPH WOOD KRUTCHஆல் அவருடைய 2THE MODERN TEMPER என்ற புத்தகத்தில் தரப்பட்டிருக்கிறது. நம்முடைய பாட்டனார்களுடைய தலைமுறைக்கு அது 3BYRONஆல் வகுத்துரைக்கப்பட்டது. எல்லாக் காலத்திற்கும் அது 4ECCLESIASTES எழுதியவரால் வகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. திருவாளர் க்ரட்ச் கூறுகிறார்: நம்முடையது நம்பிக்கை தரவியலாத ஒன்று. நமக்கு இயல்பான, இயற்கையான பிரபஞ்சத்தில் இடமில்லை. ஆனால், நாம் அதற்காக, அப்படி இடமற்று போனதற்காக ,மானுடர்களாக பிறந்துவிட்டதற்காக வருத்தப்படவில்லை. நாம் விலங்குகளாக வாழ்வதைக் காட்டிலும் மனிதர்களாக மடிவதையே மேலாகக் கருத வேண்டும்’.
பைரன் கூறுகிறார்:
உலகத்தால் தான் பறித்துக்கொள்வதைப் போல் தர முடிந்த மகிழ்ச்சி என்று எதுவுமே இல்லை,
முன்கூட்டியே வரும் எண்ணத்தின் ஒளிர்வு உணர்வின் மந்தமான சிதிலத்தில் மறுதலிக்கப்பட்டு வீழ்ச்சியடையும்போது
ECCLESIASTES எழுதியவர் கூறுகிறார்:
எனவே நான் உயிரோடு வாழ்ந்துகொண்டிருந்தும் உயிர்ப்போடு இல்லாதவர்களைக் காட்டிலும் அதிகமாக ஏற்கனவே இறந்துபோய்விட்டவர்க ளையே, இறந்துபோய்விட்டவைகளையே அதிகம் நான் போற்றிப் பரவினேன்.
ஆம் அவர்கள் இருவரை காட்டிலும் மேலானவன் இன்னும் பிறவாதவன்
சூரியனுக்கு நடந்தேறும் தீ வினைகளைப் பாராதவன்
இந்த மூன்று அவநம்பிக்கையாளர்களும் வாழ்வின் இன்பங்களை பரிசீலனை செய்த பிறகு இந்த இருண்ட முடிவுகளுக்கு வந்துசேர்ந்தனர். திருவாளர் க்ரட்ச் ஆகச்சிறந்த அறிவுஜீவிகள் வட்டாரங்களில் வாழ்ந்தவர். பைரன் எக்கச்சக்கமான காதல் தொடர்புகளைக் கொண்டவர். ECCLESIASTES எழுதியவரின் இன்பத் தேடல்களோ இன்னும் பலதரப்பட்டவை. அவர் ’வைன்’ அருந்தி மகிழ்ந்தார். இசையில் இன்பம் தேட முயற்சித்தார். அப்படி எத்தனையோ முயன்று பார்த்தார். அவர் நீச்சல் குளங்கள் கட்டினார். இந்த சந்தர்ப்பச் சூழல்களில் கூட அவருடைய அறிவும் விவேகமும் அவரை விட்டு விலகவில்லை. என்றாலும், முடிவில் அவர் இவை எல்லாமே வீண் ஜம்பம் என்று கண்டுகொண்டார் விவேகமும் கூட வீண் ஜம்பம் என்று கண்டு கொண்டார்.
’விவேகத்தை அறிந்துணர்வதற்காக என் மனதையே கொடுத்தேன் மனப்பிறழ்வை யும் மடத்தனத்தையும் அறிந்துணரவும்; இதுவும்கூட உத்வேகத்தை சஞ்சலப்படுத்து வது என்று கண்டுகொண்டேன் காரணம் அதிக அறிந்துணரலில் அதிக துயரம் அடங்கியிருக்கிறது. அறிவாற்றலை யார் அதிகமாக்கிக்கொள்கிறானோ அவன் தனது துயரத்தை அதிகப்படுத்திகொள்கிறான்.
அவருடைய அறிவுஞானம் அவரை எரிச்சலடையச் செய்ததாய் தோன்றுகிறது. அந்த ஞானத்தை தன்னிலிருந்து விரட்டியடிக்க அவர் பலமுறை முயன்றும் வெற்றி பெற இயலவில்லை. அவர் சொல்கிறார்:
“ நான் என்னுடைய மனதிடம் சொன்னேன்: ’இப்போதைக்குச் செல். நான் உன்னை மகிழ்ச்சிகரமானதாக நிரூபிக்கிறேன். எனவே, இன்பத்தை அனுபவி. புரிந்துகொள் – இதுவும் வீண் ஜம்பம் என்று.’
ஆனால் அவருடைய விவேகமும் அறிவுஞானமும் அவருடனே தங்கிவிட்டன:
”பின், நான் என் மனதிடம் சொன்னேன்:
முட்டாள் ஒருவனுக்கு நடப்பதுபோலவேதான் எனக்கும் நடக்கிறது. அப்படி யெனில் நான் ஏன் அதிக அறிவாற்றல் உடையவனாக இருக்கிறேன்? பின், நான் என் மனதிடம் சொன்னேன் – இதுவும் வீண்ஜம்பமே’.
“எனவே நான் வாழ்க்கையை வெறுத்தேன். ஏனெனில், சூரியனுக்குக் கீழ் நடைபெறும் வேலை என் மீது துயரச்சுமையேற்றுகிறது. காரணம், எல்லாமே வீண் ஜம்பமும், உற்சாகமிழப்பும் வீண் சஞ்சலமுமே.’
மக்கள் இப்போதெல்லாம் வெகு காலம் முன்பு எழுதப்பட்டவைகளைப் படிப்பதில்லையென்பது இலக்கியவாதிகளுக்கு சாதகமான விஷயம் தான். ஏனெனில், அந்த புத்தகங்களை படித்தால் அவர்கள் குளங்குட்டைகளைப் பற்றி யார் என்ன சொல்லியிருந்தாலும், புதிய புத்தகங்களை உருவாக்குதல் கண்டிப்பாக வீண் ஜம்பமே என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். ECCLESIASTES என்ற நூலின் போதனை மட்டுமே ஒரு விவேகமான மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி என்பதை நம்மால் காட்ட முடிந்தால், பின், அதே மனநிலையில் எழுதப்பட்ட பின்னாளைய படைப்புகளைப் பெரிதாக எடுத்துக் கொண்டு நாம் அவற்றைப் படிக்கப் பிரயத்தனப்படத் தேவை யில்லை. இத்தகையதொரு விவாதத்தில் நாம், ஒரு மனநிலை – அதன் அறிவார்ந்த வெளிப்பாடு ஆகிய இரண்டுக்குமிடையே வேறு படுத்திப் பார்க்கவேண்டியது அவசியம். ஒரு மனநிலையுடன் விவாதம் செய்ய வழியில்லை. அது ஏதாவது ஒரு அதிர்ஷ்டவச மான நிகழ்வால் மாற்றம் அடைய வழியுண்டு. அல்லது, நம்முடைய உடல்நிலையில் ஏற்படக்கூடிய ஏதாவதொரு மாற்றத்தால் நம் மனநிலையும் மாறக்கூடும். ஆனால், ஒரு விவாதத்தால் மனநிலை மாற வழி இல்லை. எல்லாமே வீண் ஜென்மமே என்ற விதமாய் உணரும் மனநிலையை நான் அடிக்கடி அனுபவித்திருக்கிறேன். அந்த மனநிலையிலிருந்து நான் எந்தவொரு தத்துவத்தின் மூலமாகவும் மீண்டு வரவில்லை. தவிர்க்கமுடியாத தேவையாக இருக்கும் ஏதாவது ஒரு செயல்பாடு காரணமாகவே நான் அந்த உணர்வில் இருந்து வெளியேறியிருக்கிறேன் .உங்களுடைய குழந்தை உடல்நிலை சரியில்லையென்ன்றால் நீங்கள் மகிழ்ச்சி யற்றிருருக்க வழியுண்டு; ஆனால், எல்லாமே வீண்ஜம்பம்தான் என்பதாக உணர மாட்டீர்கள். குழந்தையின் உடல்நலனை சரியாக்கு வது முதலில் செய்தாக வேண்டிய விஷயம். மனித வாழ்க்கைக் கென்று இறுதியான. உறுதியான மதிப்பு இருக்கிறதோ, இல்லையோ – அது இப்போது முக்கியமில்லை என்றே நீங்கள் நினைப்பீர்கள். ஒரு செல்வந்தர், பல நேரங்களில் அவர் அப்படிச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது போல, எல்லாமே வீண்ஜம்பம் மட்டுமே என்று உணரக்கூடும். ஆனால், அவர் தன்னுடைய பணத்தை இழக்க நேர்ந்தால், தனது அடுத்தவேளை உணவு என்பது வெறும் வீண்ஜம்பம் இல்லை என்று அவர் உணர்வார். இந்த உணர்வு மனிதனின் இயற்கையான தேவைகளின் மிக எளிய திருப்தியிலிருந்து உருவாகிறது. மனித விலங்கு, மற்ற விலங்குகளைப் போலவே, வாழ்வதற்கான குறிப்பிட்ட அளவு போராட்டத்திற்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. அளப்பரிய செல்வச்செழிப்பு காரணமாக, நவீன மனிதர்கள் தங்களது எல்லாத் தேவைகளையும் எந்தவித முயற்சியு இன்றி ‘ஹோமோ ஸேப்பியன்கள்’ தமது எல்லாத் தேவைகளையும் எந்தவித முயற்சியும் இன்றி போர்த்தி செய்துகொள்ள முடியும்போது வாழ்க்கையில் அதற்குரிய குறைந்தபட்ச முயற்சிகூட இல்லாத நிலைமை ஒரு மிக ஆதாரமான நேர்ந்தால், தனது அடுத்த வேளை உணவு என்பது வெறும் வீண்ஜம்ப்ம் இல்லை என்று அவர் உணர்வார். இந்த உணர்வு மனிதனின் இயற்கையான தேவைகளின் மிக எளிய திருப்தியிலிருந்து உருவாகிறது. மனித விலங்கு மற்ற விலங்குகளை போலவே வாழ்வதற்கான குறிப்பிட்ட அளவு போராட்டத்திற்கு தன்னை தகவமைத்துக் கொண்டிருப்பது அளப்பரிய செல்வ செழிப்பு காரணமாக ஹோமோசெபியன்ஸ் தனது எல்லாம் தேவைகளையும் எந்தவித முயற்சியும் என்று பூர்த்தி செய்யக் கொள்ளும் செய்து கொள்ள முடியும்போது வாழ்க்கையில் அதற்குரிய குறைந்தபட்ச முயற்சி கூட இல்லாத நிலைமை மகிழ்ச்சிக்கான ஒரு மூலாதார அம்சங்களை அவரிடமிருந்து விலக்கி விடுகிறது. எந்தவொரு மனிதனுக்கு அவன் ஓரளவே விரும்பும் விஷயங்களும்/ வஸ்துக்களும் எளிதாகக் கிடைக்கின்றனவோ அவர் மனிதனுடைய விருப்பம் நிறைவேறுவதில் அவனுக்கு எந்தவிதமான மகிழ்ச்சி யும் கிடைப்பதில்லை என்ற முடிவுக்கு வருகிறார். அந்த மனிதர் ஒருவித தத்துவார்த்தக் கண்ணோட் டம் கொண்டவராக இருப்பின், ’மனித வாழ்க்கை என்பது அடிப்படையாகவே, கட்டாயமாகவே அவலமானது – காரணம் தனக்கு விருப்பமான எல்லாமே கிடைத்தும் மனிதன் இன்னமும் மகிழ்ச்சியற்றவனாகவே இருக்கிறான்’ என்று முடிந்தமுடிவாகக் கூறுகிறார். நாம் விரும்பும் விஷயங்களில் சில நம்மிடம் இல்லாமலிருப்பது மகிழ்ச்சியின் தவிர்க்கமுடியாத, பிரிக்கமுடியாத அம்சம் என்பதை அவர் மறந்துவிடுகிறார்.
இதுதான் மனநிலை என்பது. என்றபோதும்,. ECCLESIASTESஇல் அறிவார்த்தமான, தர்க்கபூர்வ மான வாதங்களும் இடம்பெற்றுள்ளன.
‘நதிகள் கடலுக்குள் ஓடிக்கலக்கின்றன;
இருந்தும் கடல் நிரம்புவதில்லை.
சூரியனுக்குக் கீழ் புதியதாக
ஏதொன்றுமே இல்லை
முந்தய விஷயங்கள் குறித்த எந்த
ஞாபகமும் இல்லை
சூரியனின் கீழ் நான் மேற்கொண்ட எல்லா வேலைகளையும் நான் வெறுத்தேன்; ஏனெனில், அவையெல்லாவற்றையுமே எனக்குப் பின் வரக்கூடிய மனிதனிடம் நான் விட்டுச்சென்றாக வேண்டும்
இந்த வாதங்களை ஒரு நவீன தத்துவவாதியின் பாணியில் கட்டமைக்கும் கமுயற்சியில் ஒருவர் ஈடுபடுவாரேயானால் அது கிட்டத்தட்ட கீழ்க்கண்டவாறு அமையும்.
‘மனிதன் நிரந்தரமாகப் பாடுபட்டுக்கொண்டேயிருக்கிறான். பருப்பொருள் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டேயிருக்கிறது. இருந்தும், எதுவும் நிபொரேயளவாய் நிலைத்திருப்பதில்லை. அதற்குப் பின் வரும் புதிய ஒன்று ஏற்கெனவேயிருந்ததிலிருந்து எந்தவிதத்திலும் மாறுபட்ட தில்லை என்றாலும், எதுவும் நிலைத்திருப்பதில்லை. ஒரு மனிதன் இறந்துபோகிறான். அவனு டைய சந்ததியினர் அவனுடைய அயரா உழைப்புகளின் பலன்களைப் பெறுகிறார்கள்; நதி கடலுக்குள் ஓடிக் கலக்கிறது. ஆனா, அந்த நீர்கள் அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கப் படுவதில்லை. மீண்டும் மீண்டும் திரும்பத்திரும்ப, முடிவற்றதொரு அர்த்தமற்ற சுழற்சியில் மானுடர்களும், பருப்பொருட்களும் எந்தவிதமான மேம்பாடும், முன்னேற்றமும் இன்றி, எந்தவிதமான நிலைத்த வெற்றி/சாதனை இன்றி – ஒவ்வொரு நாளும், வருடா வருடம் அதே நடந்தவாறு. ஆறுகள், அவை அறிவும் விவேகமும் கொண்டவையாக இருப்பின், அவை எங்கேயிருக்கின்றனவோ அங்கேயே தங்கியிருக்கும். ஸாலமன், அவர் விவேகியாக இருப்பின், தனது மகன் கனிகளை அனுபவிக்கக்கூடியதான பழமரங்களை நட்டுவைக்க மாட்டார்.
ஆனால், இன்னொரு மனநிலையில் இது எத்தனை வித்தியாசமாகக் காண்கிறது, பாருங்கள்: சூரியனுக்குக் கீழே புதிதாக எதுவுமில்லையா? அப்படியானால், வான்முட்டும் கட்டடங்கள் என்ன? ஆகாயவிமானங்கள்? அரசியல்வாதிகளின் சொற்பொழிவுகள் ஒலிபரப்பபடுவது? இந்த விஷயங்களைப் பற்றி ஸாலமனுக்கு ஏதாவது தெரியுமா என்ன? அவருடைய பிராந்தியங்களி லிருந்து திரும்பிவந்தபின் அரசி ஷீபா தன்னுடைய குடிமக்களுக்கு ஆற்றிய உரையை wirelessஇல் கேட்க முடிந்திருந்தால் அது அவரை அவரது பயனற்ற மரங்களுக்கும், குளங்களுக்கும் நடுவில் சமாதானப்படுத்தியிருக்காதா என்ன? செய்தித்தாள்கள் அவரது கட்டிடக்கலைத்திறனின் அழகைப் பற்றி, அவருடைய அந்தப்புரத்தின் சுக-சௌகரியங்கள் குறித்து, அவரிடம் தர்க்கம் புரியும் போட்டி இறைமனிதர்களின் தர்மசங்கடங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் தகவல் தர ஒரு செய்தி சேகரிப்பு மையம் அவரிடம் இருந்திருப்பின், எந்தவொரு புதிய விஷயமும் இல்லை என்று அவர் விடாமல் கூறிக்கொண்டேயிருதிருப்பாரா என்ன? மேற்குறிப்பிட்ட புதிய விஷயங்களெல்லாம் அவருடைய அவநம்பிக்கையை முழுமுற்றாக குணப்படுத்தாமலிருந்திருக்கலாம். ஆனா;, அதற்கு அவர் முற்றிலும் புதிய வேறொரு பெயரைத் தந்தாகவேண்டியிருந்திருக்கும். சொல்லப்போனால், நாம் வாழும் காலம் பற்றிய திருவாளர் ’க்ரட்ச்’சின் புகார்களில் ஒன்று, சூரியனின் கீழே எக்கச்சக்கமான புது விஷயங்கள் இருக்கின்றன என்பதுதான் ஒரு புதுமையின் புதிய விஷயத்தின் இருப்பும் இன்மையும் ஒரேமாதிரியான எரிச்சலைத் தருகிறதென்றால், அவநம்ப்க்கையின் உண்மையான காரணம் இந்த இரண்டில் ஒன்றாக இருக்க வழியேயில்லை என்பதுதான் உண்மை. திரும்பவும் அந்த உண்மைக்கு – அதாவது ‘எல்லா நதிகளும் கடலுக்குள் ஓடிக் கலக்கின்றன – இருந்தும் கூட கடல் நிரம்புவதில்லை என்ற உண்மை நிலவரத்திற்கு வருவோம். ‘எங்கிருந்து ஆறுகள் வருகின்றனவோ அங்கேயே அவை மீண்டும் திரும்புகின்றன. இதுவே விரக்திக்கும், அவநம்பிக்கைக்கும் ஆதாரமாகக் கொள்ளப்பட்ட அளவில், இது பயணம் என்பது இனிமை யல்லாத ஒன்று என்ற அனுமானிக்கிறது.மக்கள் கோடைக்காலத்தில் உடல்நலச் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்கிறார்கள். இருந்தும், அவர்கள் எங்கிருந்து சென்றார்களோ அங்கேயே ஹ்டிரும்பிவருகிறார்கள். ஆனால், கோடைக்காலத்தில் உடல்நலச் சுர்றுலாத்தலங்களுக்குப் போவது வீண் என்பதை இது நிரூபிப்பதில்லை. உங்களுக்கு உணர்வுகள் வழங்கப்பட்டிருப்பின் அவை ஒருவேளை ஷெல்லியின் ‘மேகம்’ (Cloud) கவிதையில் அவை இயங்குவது போன்ற வீரசாகச சுழற்சியை விரும்பியனுபொஅவிக்கக்கூடும். ஒருவர் தன்னுடைய வாரிசுக்குத் தன்னுடைய உடைமைகளை விட்டுச்செல்வதிலுள்ள வலி-வேதனையைப் பொறுத்தமட்டில், இந்த விஷயத்தை இரண்டு கண்ணோட்டங்களிலிருந்து பார்க்க இது மிகக் கணிசமான அளவு குறைவான அழிவாக்கம் நிரம்பியதே. அதேபோல்தான், எல்லாம் முடிந்துவிடும் என்பது அதனளவில் அவநம்பிக்கைக்கு வழிவகுப்பதில்லை. ஆனால் அவற்றைத் தொடர்ந்து அதன்பின் வருவன அவற்றை விட மோசமாக இருந்தால் அவை அவைநம்பிக்கைக்கான காரணமாக அமையும். ஆனால், அவற்றுக்குப் பிறகு இன்னும் மேலான, நல்ல விஷயங்கள் ஏற்பட்டால், அது நம்பிக்கைக்கான காரணமாக அமையும். ஆனால், ஸாலமன் அழுத்தமாக வலியுறுத்துவதுபோல, அந்த விஷயங்களைத் தொடர்ந்து அவை போலவே அச்சு அசலான விஷயங்கள்தான் நடந்தேறுகின்றன எனில் நாம் என்ன நினைக்க முடியும்? இது எல்லாவற்றையுமே வீணாக்கிவிடுகிறதல்லவா? கண்டிபாக இல்லை. அதாவது, அந்த சுழற்சியின் எல்லாக் கட்டங்களுமே அவ்வவ்வாற்றின் அளவில் வேதனையளிப்பதாக இருக்கிற தென்றால் மட்டுமே அப்படியாகும். எப்பொழுதும் எதிர்காலத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் வழக்கம் நிகழ்காலத்தின் மொத்த அர்த்தமும் அது என்ன கொண்டுவரப்போகிறது என்பதில் தான் அடங்கியிருக்கிறது என்ற எண்ணவோட்டம் மிகவும் தீங்குவிளைவிக்கக்கூடியது. ஒரு முழுமையின் தனித்தனி பாகங்களுக்கு மதிப்பு இருந்தாலொழிய முழுமைக்கென்று எந்த மதிப்புமில்லை. வாழ்க்கை ஒரு மிகையுணர்ச்சி நாடகம்போல் – கதாநாயகனும் கதநாயகியும் தாங்கவொண்ணாத் துன்பங்களைத் தொடர்ச்சியாக அனுபவிப்பதாகவும், இறுதியில் வரும் சுப முடிவு அவற்றையெல்லாம் ஈடுசெய்வதாகவும் அமையும் மிகையுணர்ச்சி நாடகத்தின் ‘ஒப்புமை’ போல் வாழ்க்கை பாவிக்கப்படலாகாது. நான் வாழ்கிறேன். என்னுடைய நாள் கிடைக்கப்பெறுகிறேன். என்னுடைய மகன் எனக்குப் பின் வருகிறான். வனுடைய நாளை அடைகிறான். இதிலிருந்தெல்லாம் ஒரு துன்பியல் நாடகத்தை இட்டுக்கட்டவேண்டிய அவசிய மென்ன? அதற்கு மாறாக, நான் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டேயிருந்தால் வாழ்க்கையின் சந்தோஷங்கள், ஆனந்தங்கள் முடிவில் அவற்றின் சுவையை இழந்துவிடுவது தவிர்க்க முடியாமல்போகும். இப்போது இருக்கும் அளவில் அவை என்றென்றைக்கும் புத்துயிர்ப்போடு இருக்கிறது.
வாழ்வு கணப்பின் முன் என் கரங்களை கதகதப்பாக்கிக் கொண்டேன்
அது அமிழ்கிறது, போகப் புறப்பட்டு விட்டேன் நான்
இந்த மனோபாவம், மரணம் குறித்த வெறுப்பு போலவே, அந்த அளவு பகுத்தறிவார்ந்தது. எனவே, மனநிலைகள் என்பவை பகுத்தறிவால் தீர்மானிக்கப்படுவதெனில், விரக்திக்கும், நம்பிக்கை யிழப்புக்கும் எத்தனையளவு தர்க்கபூர்வ நியாயம் இருக்கிறதோ அதேயளவு நியாயம் உற்சாகத்திற்கும், உத்வேகத்திற்கும் இருக்கிறது.
ECCLESESTIAS துயரார்ந்தது. திருவாளர் க்ரட்ச்சின் MODERN TEMPER அவலமானது. திருவாளர் க்ரட்ச் துயரார்ந்து இருப்பதற்குக் காரணம் – பழைய, இடைக் கால நிச்சயங்கள் தவிடுபொடி யாகிவிட்டதுதான். மேலும், சமீபகாலத்திலான சிலவும்கூட அப்படி சரிந்துபோய்விட்டது தான் அவருடைய சோகத்தின் அடிப்படைக் காரணம். தற்போதுள்ள மகிழ்ச்சியற்ற காலகட்டத்தைப் பொறுத்தவரை அது இறந்த உலகின் பைசாசங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தனதேயான இடம் அதற்கு இன்னமும் வாய்க்கவில்லை. அதன் அலைக்கழிப்பு வளரிளம் பருவத்தின் அலைக்கழிப்பிலிருந்து வேறுபட்டதல்ல. வளரிளம்பருவத்தைச் சேர்ந்தவன் அவனு டைய குழந்தைப்பிராயம் எதனூடாகக் கடந்துவந்ததோ அந்தத் தொன்மவியல் பற்றிய சுட்டல்களில் லாமல் தன்னைத் தகவமைத்துக்கொள்ள இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை. குறிப்பிட்ட பிரிவு அறிவுசாலிகளைப் பற்றிப் பேசுமளவில் இந்தக் கூற்று முற்றுமுழுக்க சரியானது. அதாவது, இலக்கியக் கல்வி கற்றவர்கள், நவீன உலகைப் பற்றி ஏதுமே தெரியாதவர்கள், தங்கள் இளமைப் பருவம் முழுக்க உணர்வின்பாற்பட்டு நம்பிக்கை கொள்ளக் கற்பிக்கப்பட்டவர்கள், பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் இருக்கும் குழந்தைத்தனமான விருப்பிலிருந்து விஞ்ஞான உலகம் பூர்த்தி செய்ய இயலாத அந்த விருப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இயலாதவர்கள். திருவாளர் க்ரட்ச், பிறவேறு இலக்கியவாதிகளை போலவே, அறிவியல் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்ற சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த வாக்குறுதிகள் என்னென்ன என்று அவர் சொல்வதில்லை. 60 வருடங்களுக்கு முன் டார்வின், ஹக்ஸ்லி போன்றவர்கள் அறிவியலிடம் ஒரு விஷயத்தை எதிர்பார்த்தார்கள், ஆனால் ,அறிவியல் அதை இன்றளவும் தரவில்லை என்று அவர் நினைப்பதாக தோன்றுகிறது. இது ஒரு முழுமொத்த பிரமை என்று நான் கருதுகிறேன். தங்களுக்கிருக்கும் தனித்துவங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று யாரும் நினைத்து விடலாகாது என்று நினைக்கும் எழுத்தாளர்கள், மதபோதவர்களால் ஊட்டி வளர்க்கப்படும் பிரமை இது. இந்தத் தருணத்தில் உலகில் அவநம்பிக்கையாளர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள் என்பது உண்மையே. தங்களது வருவாய் குறைந்துவிட்ட, சரிவடைந்துவிட்ட நிலையில் உள்ள மக்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கும்போதெல்லாம் அவநம்பிக்கை யாளர்களும் ஏராளமாகவே இருந்திருக்கிறார்கள். திருவாளர் க்ரட்ச் ஒரு அமெரிக்கர். அமெரிக்க ரின் வருவாய்கள், மொத்தமாக பார்க்கும்போது, போரின் விளைவாக அதிகரித்திருக்கின்றன.
ஆனால். ஐரோப்பிய கண்டம் முழுக்க அறிவுசாலிப் பிரிவினர் மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டனர். போர் என்பதே எல்லோருக்கும் ஒரு வித பாதுகாப்பின்மையை, பாதுகாப்பற்ற உணர்வை தந்தது இத்தகைய சமூக நிகழ்வுகள் ஒரு யுகத்தின் மனநிலை தொடர்பாக இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தவல்லனவே தவிர, உலகின் இயல்புத் தன்மையே இதுதான் என்ற கோட்பாட்டைச் சார்ந்தவையல்ல. 13ஆம் நூற்றாண்டை விட மோசமான நூற்றாண்டு இல்லை எனலாம். ஆனால், அந்த நூற்றாண்டில், இப்போது இல்லாமல்போய்விட்டதாக திருவாளர் க்ரட்ச் மிகவும் வருத்தப்படும் அந்த நம்பிக்கை / விசுவாசம் மன்னன் மற்றும் சில இத்தாலிய பிரபுக்கள் தவிர மற்ற எல்லோராலும் பெரிதும் கைக்கொள்ளப்பட்டிருந்தது. ROGER BACON இவ்வாறு கூறுகிறார்: ”நாம் வாழும் இந்த நாட்களில் மற்ற எந்தவொரு கடந்தகாலகட்டத்தையும் விட அதிக பாவங்கள் கோலோச்சிவருகின்றன. பாவம் என்பது அறிவுஞானத்தோடு எந்தவிதத்திலும் இணக்கமாகப் போக முடியாது. நாம் உலகின் எல்லாவிதமான நிலைமைகளையும் அக்கறையோடு கவனித்துப் பார்க்கிறோம்.ஊழல் எல்லாவிடங்களிலும் தலைவிரித்தாடுவதைப் பார்க்கிறோம். முதலில், தலைமைப்பீடத்திலேயே – ஒழுக்கக்கேடு மொத்த நீதியமைப்பையும் மதிப்பழிக்கிறது. பெருந்தீனி எல்லாவற்றையும் ஆள்வதாக இருக்கிறது. இது தலைமையிடமே இந்த அளவுக்கு இருக்குமென்றால் அதன் உறுப்பினர்களிடத்தில் எப்படியிருக்கும்? மதகுருக்களைப் பாருங்கள். அவர்கள் பணத்தின் பின் எப்படி பாய்ந்தோடுகிறார்கள்,. ஆன்மாக்களை குணப்படுத்துதலை எந்த அளவுக்கு புறக்கணிக்கிறார்கள் பாருங்கள். மதரீதியான ஒழுங்கமைவை எடுத்துக்கொள்வோம். நான் சொல்வதிலிருந்து எதையுமே நான் விலக்கி வைக்கவில்லை. எந்த அளவுக்கு அவர்கள் சரிந்து விழுந்துவிட்டார்கள் பாருங்கள். ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோருமே தங்களது சரியான நிலையிலிருந்து சரிவடைந்துவிட்டார்கள். புதிய தலைமை பீடங்கள் ஏற்கனவே தங்களுடைய புதிய துறவறச் சபைகள் ஏற்கெனவே தங்களுடைய முதன்மை கௌரவத்திலிருந்து மிக மோசமான அளவு சீரழிந்திருக்கிறார்கள். மடாலயங்களைச் சேர்ந்த எல்லோருமே பெயர் புகழ் பேராசை ஆகியவற்றிலேயே குறியாய் இருக்கிறார்கள். எங்கெல்லாம் குமாஸ்தாக்கள் ஒன்றாகத் திரள்கிறார்களோ, பாரிஸ் ஆக்ஸ்போர்ட் போன்ற இடங்களில் கூடுவது போல, அங்கெல்லாம் தங்களுடைய சண்டை சச்சரவுகள், மோதல்கள் மூலமும், பிறவேறு சீர்கெட்ட காரியங்களின் மூலமும் பாமர மக்களை அதிர்ச்சியடையச்செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்து – அவரவர் வேட்கையைப் பூர்த்தி செய்துகொள்வதே முக்கியமாக இருக்கிறது”. என்கிறார். புராதன காலத்து Pagan மதகுருக்களைப் பற்றி அவர் இவ்விதம் கூறுகிறார்: ”அவர்களுடைய வாழ்க்கை ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்ட அளவு நம்முடையதைவிட பன்மடங்கு மேம்பட்டதாக உள்ளது. உலகின் எல்லாவிதமான கண்ணியத்திலும் சரி, ,அதனுடைய மகிழ்வின்பங்கள் செல்வ வளங்கள் மதிப்பு மரியாதைகள் எல்லாவற்றோடும் அதன்மீது கொண்டிருந்த காழ்ப்புணர்விலும் சரி. எல்லோருமே ARISTOTLE, SENECA, TULLY, AVICENNA, ALFARABIUS, PLATO, SOCRATES மற்றும் பலருடைய படைப்புகளில் மேற்குறிப்பிட்டவற்றை படித்துணர முடியும். ஆக, அவர்கள் அறிவுஞானத்தின் எல்லா ரகசியங்களையும் எட்டியவர்கள் ஆனார்கள். எல்லா அறிவ ஞானித்தையும் கண்டறிந்தார்கள் ரோஜர் பேக்கன் அபிப்ராயம் இதுதான்: தன்னுடைய சமகாலப் படைப்பாளிகள் எல்லோரிலும் ஒருவர் கூட தான் வாழும் காலகட்டத்தை விரும்பவில்லை. ”இந்த விரக்தி, நம்பிக்கையின்மைக்கு எந்தவிதமான மீமெய்யியல் காரணமும் இருப்பதாக நான் கொஞ்சம் கூட நம்பவில்லை இந்த விரக்திக்கான காரணங்கள் போர், வறுமை மற்றும் வன்முறையாகவே இருந்தன.” என்கிறார் ரோஜர்.
திருவாளர் க்ரட்சின் மிகப் பரிதாபகரமான அத்தியாயங்களில் ஒன்று காதலைப் பற்றிப் பேசுகிறது விக்டோரியா காலகட்டத்து மனிதர்கள் அதை மிகவும் உயர்வாக பாவித்ததாகத் தெரிகிறது. ஆனால், நாம் நம்முடைய நவீன நுண்ணுணர்வால் அதை ஊடுருவி பார்த்து உண்மை அறிய கற்றுக்கொண்டுவிட்டோம். விக்டோரியா காலத்தைச் சேர்ந்தவர்களில் மிகவும் சந்தேகப் பேர்வழிகள் சிலரால் அன்பு, காதல் என்பது அவர்கள் தொலைத்துவிட்ட கடவுளின் சில செயல்பாடுகளைச் செய்வதாக பார்க்கப்பட்டது. எனவே, அதை எதிர்கொண்ட நிலையில் மிகவும் இறுகிய மனம் கொண்டவர்கள் கூட ஒரு கணம் மறையியலாளர்களாக மாறினார்கள். அன்பு என்ற ஒன்றின் முன்னிலையில் அவர்கள், வேறு எதுவும் கோராத அளவு நன்மதிப்புணர்வை தங்களிடம் தட்டியெழுப்பும் ஒன்றின் முன்னிலையில் இருப்பதாக உணர்ந்தார்கள். அந்த ஒன்றுக்கு தங்களுடைய மனதின் அடியாழத்தில் கேள்விக்கப்பாலான ஒரு விசுவாசத்தை பற்றுறுதியைக் காட்ட வேண்டியது அதற்குரிய தகுதியான எதிர்வினை என்று உணர்ந்தார்கள். அவர்களுக்கு அன்பு / காதல் என்பது கடவுளைப் போலவே எல்லாவிதமான தியாகங்களையும் கோருவது. ஆனால், கடவுளைப் போலவே அதுவும், அதில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு தகுந்த முறையில் பரிசளித்தது. ஆம், வாழ்வின் எல்லா விஷயங்களுக்கும் அதுவொரு அர்த்தம் அளித்தது. இன்றுவரை ஆய்ந்தலசப்பட்டு தெளிவாக்கப்படாத ஓர் அர்த்தத்தை. அவர்களை விட நாம் அதிக அளவு ஒரு, கடவுளற்ற பிரபஞ்சத்துக்கு பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், அன்பும் காதலும் அற்றது தான் என்றாலும் அத்தகையதொரு பிரபஞ்சத்துக்கு இன்னமும் நாம் பழக்கப்படவில்லை. அப்படி நாம் பழக்கப்படும்போதுதான் நாத்திகவாதம் என்பதன் முழு அர்த்தம், மெய் அர்த்தம் நமக்கு விளங்கும். விக்டோரியா காலகட்டம் இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த இளம் தலைமுறைக்கு அந்த காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கு வாழுங்காலத்தில் அது காணப்பட்டதை விட எத்தனை வித்தியாசமாக காட்சியளிக்கிறது என்பது சுவாரசியமான விஷயமாக இருக்கிறது. இரண்டு முதிய பெண்கள், நான் இளைஞனாக இருந்தபோது எனக்கு மிகவும் தெரிந்தவர்கள், அந்த காலகட்டத்தின் சில குறிப்பிட்ட அம்சங்களை அச்சு அசலாகப் பிரதிபலித்தவர்கள், அவர்கள் அவர்களில் ஒருவர் தூய்மைவாதி; இன்னொருவர் ஒரு VOLTAIRE இய வாதி. முதலாமவர் கவிதைகள் மிகப்பெரும் அளவில் அன்பு / காதல் என்பதைப் பற்றியே பேசுகின்றன என்றும், அது ஒரு அலுப்பூட்டும் கருப்பொருள் என்றும் வருத்தப்பட்டார். அதைக்கேட்ட மற்றவர் கூறினார்: ”யாரும் எனக்கு எதிராக எதையும் கூறவியலாது. ஆனால், அது கத்தோலிக்க இறையியலின் பத்துக்கட்டளைகளில் ஏழாம் கட்டளையை மீறுவது ஆறாம் கட்டளையை மீறுவதைப்போல் அத்தனை கடினமான ஒன்றல்ல. காரணம், எப்படியும் அதற்கு சம்பந்தப்பட்ட இன்னொரு தரப்பின் ஒப்புதல் தேவையாக இருக்கிறது. இந்த இரண்டு கண்ணோட்டங்களில் எதுவுமே அப்பட்ட விக்டோரியா கால மனிதராக திருவாளர் க்ரட்ச் முன்வைக்கும் கருத்தை ஒத்ததாக இல்லை. அவருடைய கருத்துக்கள் தங்களது சூழல்களோடு இணக்கமாக உணராத, பொருந்தியிராத சில குறிப்பிட்ட படைப்பாளிகளிடமிருந்து பெறப்பட்டது என்று நினைக்கிறேன் அவர் அன்பை/ காதலை பார்த்த அளவில் ’ காதல் / அன்பு என்பதில் ஒருவகை புழுக்கம், மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் ஏதோவொன்று இருப்பதாக உறுதியாக நம்புவதை என்னால் தவிர்க்க முடியவில்லை
கடவுள் நன்றிக்குரியவர். அவர் படைத்த உயிரினங்களில் மிக அற்பமானதுகூட இருபக்க ஆன்மாவைக் கொணிட்ருக்கின்றன. ஒன்று, உலகை எதிர்கொள்வதற்காக. இன்னொன்று, ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது அவளிடம் காட்டுவதற்காக
இது எதிர்ப்புத்தன்மை தான் உலகைப் பற்றி நாம் கொள்ளக்கூடிய சாத்தியமான கண்ணோட்ட மாக அனுமானிக்கிறது. ஏன்? ஏனெனில் உலகம் குறருமானது என்று பிரௌனிங் சொல்வார் ஏனெனில் உலகம் உன்னை உனதேயான மதிப்பில் ஏற்றுக்கொள்ளாது என்று நாம் சொல்வோம். ஒரு ஜோடி. பிரௌனிங் தம்பதியர் செய்தது போல. ஒரு பரஸ்பரம் பாராட்டும். போற்றும் சங்கத்தை உருவாக்கலாம். உங்களுடைய வேலையைப் போற்றுபவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பது மிகவும் இனிமையான விஷயம்தான். உங்கள் வேலை அந்த பாராட்டுக்குத் தகுதியானதோ இல்லையோ – மேலும், AURORA LEIGHஐப் பாராட்டத் துணியவில்லை என்பதற்காக FITZGERALD இகழ்ந்தபோது ப்ரவுனிங் சந்தேகத்திற்கிடமில்லாமல் தன்னை ஒரு அருமையான ஆண்மகனாக உணர்ந்தார். இருபக்கமுமான இத்தகையதொரு திறனாய்வுத் திறன் சார் முழு மொத்த விலக்கல் உண்மையாகவே பாராட்டுக்குரியது என்று என்னால் கருத முடியவில்லை. உண்மையில் இது பாரபட்சமற்ற திறனாய்வின் இறுகிய தாக்குதல்களைப் பற்றிய அச்சத்தினாலும், அவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள சரண்புகுவதவதற்கான இடந்தேடும் விருப்பத்தோடும் பிணைக்கப் பட்டதேயாகும். பல பழைய பிரம்மச்சாரிகள் இதேவிதமான மனநிறைவை தங்களுடையதேயான கணப்பஉப் பக்கத்திலிருந்து பெறும் வழிவகையைக் கற்றுக்கொண்டனர்.
நான் விக்டோரியா காலகட்டத்தில் நெடுங்காலம் வாழ்ந்தவன் என்பதால் திருவாளர் க்ரட்ச்சின் தரநிர்ணயப்படி நான் நவீன மனிதன் அல்ல. நான் காதல் மீதான என்னுடைய நம்பிக்கையை எந்த விதத்திலும் இழந்துவிடவில்லை. ஆனால், நான் நம்பும் அன்பு / காதல் என்பது விக்டோரியா காலகட்டத்தவர்கள் விதந்தோதியது அல்ல. நான் நம்பும் காதல் வீரசாகசத்தன்மை வாய்ந்தது. கண்களை முழுக்கத் திறந்த நிலையில் பிறக்கும் வெளிப்படையான அன்பு. அது நல்லதைப் பற்றிய அறிவைத் தரும் அதே சமயம் கெட்டதைப் பற்றிய மறதியை வரவாக்குவது இல்லை. தவிர, அது புனிதமானது வழிபடத்தக்கது என்பதாகவெல்லாம் பாசாங்கு செய்வதில்லை. விதந்தோதும் வகை காதலுக்கு இத்தகைய குணநலன்களைத் தரும் பழக்கம் பாலுறவு என்பதை சமூகத்தில் குற்றமாக பார்க்கும் மனோபாவத்தின் வெளிப்பாடு. பாலுறவின் பெரும்பகுதி பாவகரமானது என்று விக்டோரிய மனிதன் நம்பினான். எது நல்லவிதமான பாலுறவு என்று அவனால் ஏற்றுக்கொள்ள முடியுமோ அதை அங்கீகரிக்க அவன் அதீதத்தன்மை வாய்ந்த விவரங்களை, வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டயிருந்தது. ஏற்புடைய பாலுறவு பற்றி பேச அவன் ஏராளமான அடைமொழி களைப் பயன்படுத்தவேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் இப்போது இருப்பதை விட அதிகமாகவே பாலுறவு நாட்டம் இருந்தது. நிச்சயமாக இதுவே பாலுறவுக்கான முக்கியத்துவத்தை – மற்றும் துறந்த மனிதர்கள் எப்போதுமே செய்த அதேமாதிரி – அதீதமாக்கிக் காட்டச் செய்தது எனலாம். இன்று நாம் ஒரு குழப்பமான காலகட்டத்தினூடாகக் கடந்துபோய்க் கொண்டிருக் கிறோம். இந்த காலகட்டத்தில் மக்களில் பலர் பழைய வாழ்நெறிமுறைகளைத் தூக்கியெறிந்து விட்டார்கள் _ புதிய வாழ்நெறிமுறைகளைக் கற்றுக்கொள்ளாமலேயே. இது அவர்களை பல்வேறு பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்கிறது.
உதாரணமாக, அவர்களுடைய நனவிலி மனம் இன்னமும் பழைய வாழ்நெறிமுறைகளையே நம்புவது வழக்கமாக இருப்பதால் பிரச்சனைகள் வரும்போது அவை நிராசை, மனவருத்தம், நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றன. இம்மாதிரியான எதிர்மறை உணர்வுகளை அனுபவிக் கும் மனங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த மிகச்சிறந்த பேச்சுத்திறனாற்றல் கொண்டவர்களிடையே இருக்கிறார்கள். வசதி படைத்த இளைய தலைமுறையினரில் சராசரியை நாம் கணக்கிலெடுத்துக் கொண்டால் 60 வருடங்களுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது காதலைக் குறித்தும் சரி, காதலின் மதிப்பு குறித்த நிஜமான நம்பிக்கையிலும் சரி – பன்மடங்கு அதிகமான மகிழ்ச்சி நிலவுவதை நம்மால் பார்க்க முடியும். குறிப்பிட்ட சில நபர்களை நம்பிக்கையிழப்புக்கும் விரக்திக் கும் இட்டுச்செல்லும் காரணங்கள் மனித நினைவு மனதில் பழைய விழுமியங்கள் செலுத்தும் மேலாதிக்கம் சர்வாதிகாரத்தோடும், இந்நாள் மனிதர்கள் தங்களுடைய நடத்தையை ஒழுங்க மைத்துக்கொள்ள உதவும் ஒரு தர்க்கபூர்வ விழுமியம் இல்லாத நிலையும் ஆகும். இதற்கான நிவாரணம் என்பது கடந்த காலத்தின் சிறப்பை கூறிப் புலம்புவதிலும் அந்த காலம் திரும்ப வராதா என்று ஏங்குவதிலும் இல்லை. வாழ்வின் விழுமியங்கள் குறித்த நவீன கால கண்ணோட்டத்தை தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்வதும், பெயரளவில் கைவிடப்பட்ட மூடநம்பிக்கைகளை அவற்றின் அனைத்து மறைவிடங்களிலிருந்தும் வேரோடு பிடுங்கி எறிவதற்கான தீர்மானத்திலுமே இருக்கிறது.
எதனால் ஒருவர் அன்பை காதலை பெரிதும் மதிக்கிறார் என்பதைச் சுருக்கமாக சொல்வது எளிதான காரியம் அல்ல. இருந்தாலும், நான் முயன்றுபார்க்கிறேன். முதல்கட்ட பார்வையில், அன்பு /காதல் மதிக்கப்பட வேண்டியது. இது – அதன் ஆகச்சிறந்த மதிப்பல்ல என்றாலும் – பிற எல்லாவற்றுக் கும் அத்தியாவசியமானதாகிறது – அதனளவிலேயே மகிழ்ச்சிக்கான வழியாக அமைகிறது.
ஓ அன்பே காதலே
உன் இனிப்புச்சுவையைக் கசப்பென்று கூறுபவர்கள்
உனக்கு மிகப்பெரிய தவறிழைத்துவிட்டார்கள்
உனது பழுத்த கனிகளைவிட
வேறேதும் அதிக இனிப்பானதல்ல.
இந்த வரிகளை எழுதிய பெயரறியா படைப்பாளி நாத்திகத்திற்கு ஒரு தீர்வையோ அல்லது பிரபஞ்சத்திற்கு ஒரு திறவுகோலையோ தேடவில்லை அவர் தன்னைத்தானே மகிழ்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கிறார். காதல்/ அன்பு என்பது குதூகலத்திற்கான வழி மட்டுமல்ல; அதன் இன்மை வலிக்கான காரணமாக அமைகிறது. இரண்டாவதாக, காதல் / அன்பு மற்றும் அனைத்து ஆனந்தங்களையும் இசை, மலைகளிலான சூர்யோதயம், முழு நிலவின் கீழ் இருக்கும் கடல் போன்றவற்றை மேம்படுத்துவதால் அது மதிப்பார்ந்ததாகக் கொள்ளப்பட வேண்டும். தான் காதல் கொண்ட பெண்ணோடு இருக்கையில் ஒருபோதும் அழகிய விஷயங்களை மகிழ்ந்து அனுபவிக் காத ஒருவன் அத்தகைய விஷயங்களுக்கு சாத்தியமாகக் கூடிய மாயாஜாலத் திறனாற்றலை பூரணமாக அனுபவித்ததில்லை என்றாகிறது. மேலும், காதல்/அன்பு என்பதால், ’தான்’ என்ற உணர்வின் இறுகிய மேலோட்டையை உடைக்க முடியும். ஏனெனில், அது ஒருவகையான உடல் ரீதியான ஒத்துழைப்பு. அது சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளும் அடுத்தவரின் உள்ளுணர்வின்பாற்பட்ட நோக்கநிறைவேற்றத்திற்கு அவசியமானவையாக இருக்கின்றன. உலகில் பல்வேறு காலகட்டங்களில் பலதரப்பட்ட ஒற்றையான தத்துவக் கோட்பாடுகள் – சில மிக உன்னதமானவை சில சற்றே உன்னதம் குறைந்தவை – இருந்திருக்கின்றன. ஆரம்ப கால கிறித்துவர்களும் ஒரு மனிதன் மானுட வாழ்வுக்கு சாத்தியமாகக் கூடிய ஆகச்சிறந்த நன்மையை தன் மன உறுதியால் மட்டுமே அறிந்துணர முடியும் என்று. அல்லது. சக மனித உதவியின்றியே அறிந்துணர முடியும் என்று நம்பினார்கள். வேறு சிலர் அதிகாரம் என்பதை வாழ்வின் முடிந்த முடிவான குறிக்கோளும் சாதனையுமாக பாவித்தார்கள். இன்னும் சிலர் தனிநபர் சார் ஆனந்தமே வாழ்வுப்பயனாகக் கருதினார்கள். இவை யாவுமே ஒற்றையான தத்துவ கோட்பாடுகள் – அதாவது நல்லது என்பது ஒவ்வொரு பெரிய அல்லது சிறிய மனித சமூகத்தால் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனி நபராலும் அறிந்துணரக்கூடிய ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. இந்தவிதமான கண்ணோட்டங் களெல்லாம் என்னைப் பொறுத்தவரை பொய்யானவை; பாசாங்கானவை – விழுமியக் கோட்பாட்டில் மட்டுமல்லாமல் நம்முடைய உள்ளுணர்வுகளின் மேம்பட்ட பகுதியின் வெளிப்பாடு களாகவும்கூட.
மனிதன் கூட்டுறவை சார்ந்திருக்கிறான். அவனுக்கு. கொஞ்சம் பற்றாக்குறையாகவே என்பது உண்மைதான், கூட்டுறவுக்குத் தேவையான தோழமை என்பது கிளர்ந்தெழும்படியான உள்ளுணர்வார்ந்த உபகரணத்தை இயற்கை அவனுக்கு வழங்கியிருக்கிறது. அன்பு / காதல், கூட்டுறவுக்கு மனிதனை இட்டுச்செல்லும் முதன்மையான, மிகவும் பரவலான வடிவம். இந்த அன்பு / காதலை கொஞ்சம் தீவிரத்தன்மையோடு அனுபவங்கொண்டவர்கள் அவர்களுடைய அன்புக்குரியவரை சார்ந்திராமல் சுதந்திரமாக இருத்தலே அவர்கள் அடையக்கூடிய ஆகச்சிறந்த பயன் என்று அனுமானிக்கும் ஒரு தத்துவக் கோட்பாட்டினால் திருப்தியடைவதில்லை. இதில் பெற்றோர்களின் உணர்வு என்பது இன்னும் அதிக சக்தி வாய்ந்தது என்றாலும் பெற்றோர்களின் உணர்வு என்பது அதன் ஆகச்சிறந்த அளவில் பெற்றோர் இருவருக்கிடையே நிலவும் அன்பின் / காதலின் விளைவுப்பயன்தான். அன்பு / காதல் அதனால் சிறந்த வடிவில் மிகவும் பொதுவாக பரவலாக இடம் பெற்றிருப்பதாக நான் பாவலா செய்யவில்லை ஆனால் அன்பு அதன் ஆகச்சிறந்த வடிவில் சிறந்த விழுமியங்களை /வாழ்வுமதிப்புகளை வெளிப்படுத்துகிறது. அன்பினானலன்றி அந்த விழுமியங்கள் அறியப்படாதவைகளாகவே இருந்திருக்கும் என்று நான் தீர்மானமாகக் கூறுகிறேன். அன்பு அதன் ஆகச் சிறந்த அளவில் அதற்கான ஒரு மதிப்பைப் பெற்றிருக்கிறது. அந்த வாழ்வுமதிப்பு சந்தேகவியாதியால் தீண்டப்படாதது. அந்த அன்பை அனுபவங்கொள்ள இயலாத ஐயவாதிகள் தங்களுடைய இயலாமையை சந்தேகமாய் பொய்யாகக் காரணங் கற்பிப்பார்கள்.
மெய்யன்பு நிலைத்த நெருப்பு
மனதில் என்றுமே கனன்றுகொண்டிருப்பது
என்றுமே நோய்மையடையாதது
என்றுமே இறவாது என்றுமே குளிர்ந்து போகாதது
தன்னிலிருந்து ஒருபோதும் திரும்பாதிருப்பது
இனி, திருவாளர் க்ரட்ச் துன்பியிலைப் பற்றி சொல்லியிருப்பதற்கு வருகிறேன். அவர் சொல்கிறார் – இந்த விஷயத்தில் நான் அவரோடு உடன்பட்டாக வேண்டும் – IBSENஇன் GHOST KING LEAR ஐ விட தரத்தில் குறைந்தது என்கிறார். கூடுதலான வெளிப்பாட்டுத்திறனோ. இல்லை, கூடுதலான சிறப்பு மிக்க சொற்களோ இப்ஸனை ஷேக்ஸ்பியராக மாற்றியிருக்க வழியே இல்லை. பின்னவர் தனது படைப்புகளை எந்த விஷயங்களிலிருந்து உருவாக்கினாரோ அவை மனித கௌரவம் குறித்த அவரது அணுகுமுறை, கண்ணோட்டம், மனித வேட்கைகளின் முக்கியத்துவம் குறித்த அவர் அறிதல், மானுட வாழ்வின் வீச்சு குறித்த அவர் பார்வை, இப்ஸனுக்குக் கிடைத்திருக்க வழியே இல்லை. அவை அவருடைய சமகாலத்தவர்களுக்கு இருக்கவில்லை; இருந்திருக்க வழியில்லை. கடவுள், மனிதன், இயற்கை என எல்லாமே இடைப்பட்ட நூற்றாண்டுகளில் எப்படியோ சுருங்கி விட்டன. நவீன கலையின் மெய்ம்மையியல் நம்பிக்கைகள், கோட்பாடுகள் (யதார்த்தவாதக் கோட்பாடு_ நம்மை அற்ப மனிதர்களை நாடும்படி வழிநடத்தியதால் வ்ந்த விளைவல்ல இது. மாறாக, எந்தப் போக்கு, வழிமுறை நம்மை கலைசார்நம்மை வளர்த்தெடுத்ததொமானுட வாழ்வின் என்ற அற்பத்தனம் எப்படியோ, எந்த போக்கு வழிமுறை நம்மை கலைசார் எதார்த்த வகை கோட்பாடுகளை வளர்த்தெடுக்க நம்மை வழி நடத்தியதோ நம்முடைய உள்வய தரிசனத்தை நியாயப்படுத்த முடியும்படியான – அந்த வழிமுறையின் செயல்பாட்டாலேஉஏ நம் மீது திணிக்கப்பட்டதே இதற்குக் காரணம். ராஜகுமாரர்களின் துயரங்களைப் பேசும் பழைய பாணி துன்பியல் நாடகம் நம்முடைய காலகட்டத்திற்குப் பொருத்தமானதல்ல என்பதே உண்மை. நாம் பெயரறியா தனிநபரொருவரின் துயரங்களை அதேவிதமாய் கையாள / சித்தரிக்க முற்பட்டால் அதில் ஏற்படும் தாக்கம் அதேமாதிரியாக இருக்காது. இதற்குக் காரணம் வாழ்க்கை குறித்த நமது கண்ணோட்டம் தரம்தாழ்ந்துவிட்டதல்ல. அதற்கு நேர்மாறானதே காரணம். அதாவது, நாம் சில தனிநபர்களை பூமியில் இருக்கும் அதிசிறந்தவர்களாக, அவர்கள் மட்டுமே துன்பியலார்ந்த வேட்கைகளுக்கு உரிமைகூடியவர்களாக, அந்த வெகு சிலரின் உன்னதத்தை, மகத்துவத்தை உருவாக்கப் பாடுபடுவதே மற்றவர்களின் வேலை என்பதாக பாவிப்பதில்லை. ஷேக்ஸ்பியர் சொல்கிறார்:
‘பிச்சைக்காரர்கள் இறந்தால், வால்நட்சத்திரங்கள் எதுவும் தெரிவதில்லை.
ராஜகுமாரர்கள் இயற்கையெதினால் விண்ணுலகங்களே கனன்றெரிகின்றன.
ஷேக்ஸ்பியர் காலத்தில் இந்த உணர்வுநிலை முற்ற முழுக்க நம்பப்பட்டதோ, இல்லையோ, குறைந்தபட்சம் உலகளாவிய அளவில் இருக்கலாகும் ஒரு கண்ணோட்டத்தையாவது வெளிப்படுத்தியது. ஷேக்ஸ்பியராலேயே மிக ஆழமான அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் விளைவாக, கவிஞனாகிய ‘ஸின்னாவின் மரணம் வேடிக்கையாகச் சித்தரிக்கப்படுகிறது. ஒரு தனிநபருடைய மரணத்தின் பிரபஞ்சரீதியான அர்த்தம், முக்கியத்துவம் நம்மால் பொருட்படுத்தப்படாததாக மாறிவிட்டது. காரணம் நாம் ஜனநாயக்ரீதியிலாகிவிட்டோம். புறவய வடிவங்களில் மட்டுமல்ல – நம்முடைய அடியாழ நம்பிக்கைகளிலும்கூட. எனவே, தற்காலத்தில் உயரளவு துயரம், துன்பகரமான நிகழ்வு என்பது தனிநபர் குறித்ததாக, தனிநபரோடு தொடர்புடையதாக இல்லாமல் ஒரு மக்கட்குழுவோடு தொடர்புடையதாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. நான் என்ன சொல்கிறேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக ERNST TOLLERஇன் MASSEMENSCH ஐ சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தப் படைப்பு கடந்த காலத்தின் சிறந்த காலகட்டங்களிலான படைப்புகளுக்கு இணையானது என்றோ, அவற்றுக்கு மேலானது என்றோ நான் சொல்லவரவில்லை. ஆனால், அவற்றோடு ஒப்பிடத்தக்கது இந்தப் படைப்பு என்று சொல்வது நியாயமாகவே இருக்கும். அது உன்னதமானது, ஆழமானது, மெய்யானது, வீரநாயகச் செயலைப் பற்றியது, பரிதாபம் மற்ரும் பீதியுணர்வு மூலம் வாசகரை ‘களையெடுத்துச் சுத்திகரிப்பது’ – அரிஸ்டாட்டில் ஒரு படைப்பு எதைச் செய்யவேண்டும் என்று சொன்னாரோ அதைச் செய்வது. இந்தவகையான நவீன பாணி துன்பியலுக்கு/ துன்பியல் படைப்புக்கு இன்றுவரை வேறு எடுத்துக்காட்டுகளே இல்லையெனலாம். ஏனெனில், பழைய பாணி உத்திகளும், பழைய மரபுகளும், வெறும் ஏட்டுக்கல்வியறிவு பெற்ற சாதாரணங்களால் இடம்பெயர்க்கப்பட்டுவிடாத அளவில் புறமொதுக்கப்பட்டாகவேண்டியிருக்கிறது என்பதால் துன்பியலை எழுத வேண்டுமானால் ஒரு மனிதன் கொடுந்துயரை உணரவேண்டும். துன்பியலை உணரவேண்டுமானால் ஒரு மனிதன் தான் வாழும் உலகம் குறித்த விழிப்புடையவனாக இருக்கவேண்டும். தனது மனஹ்டாலும், அறிவாலும் மட்டுமல்லாமல் தனது உதிரத்திலும், தசைநார்களிலும் அவனுக்கு இந்தப் பிரக்ஞை இருக்கவேண்டும். திருவாளர் க்ரட்ச் தனது புத்தகம் முழுக்க தொடர்ச்சியான இடைவெளிகளில் விரக்தி, நம்பிக்கையிழப்பு குறித்துப் பேசிக்கொண்டேயிருக்கிறார். ஒர் இருண்ட உலகை அவர் வீர நாயக பாவத்தோடு ஏற்றுக்கொள்வது எல்லோருடைய மனங்களையும் ஹ்டொடுகிறது. ஆனால், அந்த இருண்ட தன்மை, அவரும் பெரும்பாலான இலக்கியவாதிகளும் பழைய உணர்ச்சிகளை புதிய தூண்டுகாரணிக்கான எதிர்வினையாக உணர்வதை இன்னமும் கற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே உண்டாகிறது. இந்தக் தூண்டுகாரணி புழக்கத்திலிருக் கிறது. ஆனால், இலக்கிய வட்டங்களில் இல்லை. இலக்கிய வட்டங்கள் சமூகத்தின் வாழ்க்கையோடு அடிப்படையான, ஆதாரமான தொடர்புகொண்டிருக்கவில்லை. இந்தத் தொடர்பு மிகவும் அத்தியாவசியமானது – துன்பியல், மெய்யான சந்தோஷம் இரண்டுமே எதனுள்ளிருந்து உருவாகி வளர முடியுமோ அத்தகைய தீவிரத்தன்மையும் ஆழமும் கொண்டவையாக மனிதர்களின் உணர்வுகள் இருக்க மேற்குறிப்பிட்ட தொடர்பு மிகவும் இன்றியமையாதது. இந்த உலகில் அவர்கள் செய்யத்தக்கதாக எதுவுமேயில்லை என்ற உனர்வுடன் இலக்கில்லாமல் அலைந்ந்து திரிந்துகொண்டிருக்கும் திறமைவாய்ந்த இளைஞர்கள் எல்லோரிடமும் நான் சொல்வது இதுதான்: ‘எழுத முயற்சிப்பதைக் கைவிடுங்கள். அதற்கு பதிலாக, எழுதாமலிருக்க முயற்சி செய்யுங்கள். வெளியே உலகிற்குள் செல்லுங்கள். ஒரு கடற்கொள்ளைக்காரனாக, Borneoவில் ஒரு மன்னனாக, சோவியத் ருஷ்யாவில் ஒரு தொழிலாளியாக மாறுங்கள்; அடிப்படையான உடல்சார் தேவைகளின் வழியான திருப்தி உங்களுடைய சக்தித் திறனாற்றல்களையெல்லாம் முழுமையாக எடுத்துக்கொண்டுவிடும்படியான இரு ‘இருப்பை’ உங்களுக்கு வழங்கிக்கொள்ளுங்கள்.
இந்த வாழ்க்கை வழிமுறையை நான் எல்லோருக்குமான தாகப் பரிந்துரைக்க மாட்டேன். – ஆனால், திருவாளர் க்ரட்ச் பரிசோதித்துக் கண்டுபிடித்திருக்கும் நோயால் பீடிக்கப்பட்டிருப்பவர் களுக்கு மட்டுமே இதை நான் பரிந்துரைக்கிறேன். அவ்வாறான வாழ்க்கையை சில வருடங்கள் வாழ்ந்த பிறகு அந்த முன்னாள் அறிவுஜீவி, தான் எத்தனை முயன்றாலும் தன்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை என்பதைக் கண்டறிவார், இந்த நேரம் வந்தவுடன் அவருடைய எழுத்து வீண்விரயமாக அவருக்குத் தோன்றாது.
***
குறிப்புகள்:
1. Byron லார்டு பைரன் (Lord Byron) 22 சனவரி 1788 முதல் 19 ஏப்ரல் 1824 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஆவார்.
2.JOSEPH WOOD KRUTCH ஜோசப் வூட் க்ரூட்ச் ( / kruːtʃ / ; நவம்பர் 25, 1893 – மே 22, 1970) ஒரு அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார்,
3.The Modern Temper: A Study and a Confession : நவீன கால மனிதன் எதிர்கொள்ளும் சஞ்சலங்கள் அவதிகளை நுட்பமாக அலசியாராயும் நூல்
4.ECCLESIASTES – ஹீப்ரூ பைபிளின் எழுத்தாக்கங்களில் ஒன்று. கிறித்துவ பழைய வேதாகமத்தின் ஞானபோதனை படைப்புகளில் ஒன்று. தன் மீது விழுந்த சாபத்தால் மானுடம் பூமியில் விழுந்தது என்கிறது இந்தப் படைப்பு. *உண்மையில் சாலமனால் எழுதப்பட்டது அல்ல. ஆனால் அதை எழுதியவரை இந்த பெயரால் குறிப்பது வசதியாக இருக்கிறது.
ஹென்ரிக் இப்ஸன் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கியமான நார்வீஜிய நாட்டு நாடகாசிரியர். யதார்த்த, தற்கால கருப்பொருட்களைக் கொண்ட நாடகங்களை அறிமுகப்படுத்தியவர்.
Aurora Leigh 1856இல் கவிதைவடிவில் எழுதப்பட்ட புதினம் இந்த நூல் வசன கவிதை வடிவில் எழுதப்பட்ட ஒன்பது நூல்களை உள்ளடக்கிய புதினம்.
Gaius Helvius Cinna (கி.மு 44, மார்ச் 20இல் இறந்தார்) ரோமானிய குடியரசின் பிற்பகுதியைச் சேர்ந்த தாக்கமுண்டாக்கிய நவீன கவிஞர். சர்வாதிகாரி ஜூலியஸ் ஸீஸரைக் கொன்றவர்களுக்கு ஆதரவாகப் பேசிய Cornelius Cinna வாகத் தவறாகக் காணப்பட்டு ஜூலியஸ் ஸீஸரின் இறுதி ஊர்வலத்தின் போது மக்களால் அடித்துக்கொல்லப்பட்டார்.
Ernst Toller (1 December 1893 – 22 May 1939) இடதுசாரி ஜெர்மானிய நாடகாசிரியர்.
MASSEMENSCH – எட்டு வருடங்களுக்குப் பிறகு மனநோய் மருத்துவமனியிலிருந்து வெளிவரும் ஒரு புரட்சியாளர் தனது நட்பினராக இருந்த புரட்சியாளத் தோழர்கள் இப்போது செயலற்று, அரசமைப்போடு சமரசமாகப் போவதைக் காண்கிறார். விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார்.
- இலக்கியப்பூக்கள் 344
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
- நிறமாறும் அலைகள்
- …………….. எப்படி ?
- *BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]
- வண்ண நிலவன்- வீடு
- தவம்
- கல்விதை
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
- நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்
- தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை