நாக சதுர்த்திக்கு
ஒருத்தி
ஆம்லேட் எடுத்துச்சென்று
பாம்பு புற்று அருகே வைத்து
பாலை ஊற்றினாள்.
பக்கத்துல கணவன்
நின்றுக்கொண்டு
வரும்போகும் பக்தர்களிடம் சொன்னான்,
“பாம்பு
பச்சை முட்டையா……, சாப்பிட்டு
மயக்கமடைந்து விட்டது.
ஆகவேதான்
ஆம்லேட் போட்டு வைச்சிட்டோம்.
கொஞ்ச நேரத்துல
மயக்கம் தெளிஞ்சு
வெளியே வந்து
ஆம்லேட் சாப்பிடும்” என்றான்.
அரசமரத்து மேலே
கருடன் காத்திருந்தான்.
கொஞ்ச தூரத்துல
பிராந்திக்கடையும் இருந்தது.
-ஜெயானந்தன்.