மனம் கனத்து போன சமயத்தில்
உனை அழைத்தேன்.
நீ
என்னமோ
கூந்தலை அழகு செய்தாய்
நகத்தில் சாயம் ஏற்றி
புருவங்களை வில் எடுத்தாய்.
இடுப்பின் சதையை
குறைக்க செய்தாய்
தொடையின் மினுக்கில்
காமத்துப்பாலை தெளித்தாய்.
வறண்டு போன தோலின்
மேல்
பசை பூசி, பசலை போக்கி
உள்ளாடை மின்னிவர
உதட்டின் மேல்
காதல் வரைய
அழகு மகளிர் நிலையம் சென்றாய்.
எல்லாம் சரி
சகியே!
கிழக்கே உதித்த
சூரியன் கிரணத்தில்
உனை அழைத்தேன்.
நீயோ
சந்திர பிறையில் வருகின்றாய்.
அதற்குள்
என்னுள் மிதந்த
இளமைப்போய்
வாடிய பயிராய்
வயலில் சரிந்தேன்.
அறுவளோடு
வா.
இளைப்பாற
எந்தன் கரங்களில்
தவழ்ந்த இளமை
முதுமைதேர் ஏறி
வயலூர் சென்றது.
வந்தென்னை
அறுவடை செய்.
அடுத்த
விதைக்கு
நெல் கிடைக்கும்.
– ஜெயானந்தன்.