குரு அரவிந்தன்
சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய ஆண்டு விழா அதன் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் வெங்கட் ரமணன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

முதலில் மங்கள விளக்கேற்றி, கனடா தேசியப்பண், தமிழ்தாய் வாழ்த்து, மன்றப்பாடல் ஆகியன இளையோரால் இசைக்கப்பட்டு, நாட்டிற்கு நன்றி, அகவணக்கம் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. அதன்பின் மாணவர் பாசறை பற்றி முனைவர் இல. சுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
அடுத்து மாணவர் பாசறையின் ‘தொல்காப்பியர் கால வாழ்வியல்’ என்ற கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி சுவந்திசங்கர், செல்வி காவியா சிவசங்கரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடத்தினர். இதில் பங்குபற்றிய சுமார் 22 இளையோர் மிகச் சிறப்பாக ஒவ்வொரு நிலத்திணை பற்றியும் தெளிவாகத் தமிழில் விளக்கம் தந்தார்கள். அவர்களுக்கு எங்கள் பாராட்டுகள்.
தொடர்ந்து திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் கலைக்கோயில் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி யூனிதா நாதன் அவர்களின் பாராட்டுரை இடம் பெற்றது. தொடர்ந்து மன்றத்தின் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் பெற்றது. தொல்காப்பியம் சார்ந்த நிகழ்வுகளை நாம் ஏன் முன்னெடுக்க வேண்டும், அடுத்த தலைமுறையினரிடம் ஏன் கொண்டு செல்ல வேண்டும் என்பது போன்ற விளக்கத்தைச் சபையோருக்கு எடுத்துச் சொன்னார். தொடர்ந்து ஜனனி குமார் அவர்களின் சிலம்பொலி நர்த்தனாலயா மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது.
அடுத்து இடம் பெற்ற பிரதம விருந்தினர் பேராசிரியர் வெங்கட் ரமணனின் உரை சபையினருக்கு ஏற்றவகையில் சிறப்பாக இடம் பெற்றிருந்தது பாரட்டுக்குரியது. அவர் தனது உரையில் தனது பணி நிமித்தம் அதிக நேரத்தை ஆங்கிலத்தில் உரையாடுவதில் செலவிடவேண்டி இருப்பதாகவும், தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றியும், புலம்பெயர்ந்த மண்ணில் அதன் எதிர்காலம் பற்றியும், மொழியைத் தக்கவைப்பதில் உள்ள சிரமங்கள் பற்றியும் குறிப்பிட்டு, தொல்காப்பிய மன்றத்தின் செயற்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகத்தில் மறுக்கப்பட்ட மொழிச்சுதந்திரத்தை புலம் பெயர்ந்த மண்ணில் தங்கள் பிள்ளைகள் மூலமும், பேரப்பிள்ளைகள் மூலமும் வெளிக் கொண்டுவருவதை எண்ணிப் பெருமைப்படுவதாகவும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து தயாளினி ஜீனராஜ் அவர்களின் சலங்கை நர்த்தனாலயா மாணவர்களின் குமார கௌத்துவம் என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. தொடர்ந்து கு. இராச்குமாரின் நெறியாள்கையில் ‘தமிழன்னை’ என்ற நாட்டிய நாடகம் இடம்பெற்றது. இதற்கான நாட்டியமைப்பை ஜெ. தயாளினியும், இசையமைப்பை இ. ரிதுஸ்கரன் அவர்களும் செய்திருந்தனர்.
மாணவர் பாசறையின் விநாடி வினா, பெரியோருக்கான விநாடி வினா, திருமதி மாகிறேற் பவுலஸ் அவர்களின் நெறியாள்கையில் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. மொத்தத்தில் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ் மொழியை வளர்ப்பதில், அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் உள்ள ஈடுபாட்டைடை இந்த நிகழ்வில் அவதானிக்க முடிந்தது.
விழாவிற்கு வருகைதந்த சிறப்பு விருந்தினர்கள் சிலரின் உரையும் போட்டிகளில் பங்கு கொண்டவர்களுக்கான பரிசளிப்பும், கவிஞர் திரு. சண்முகராஜா சின்னத்தம்பி அவர்களின் நன்றியுரையும் இடம் பெற்றன. இளைய தலைமுறையினருக்காக வயதின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக மொத்தம் 31 தமிழ் சார்ந்த போட்டிகள் இம்முறை நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
‘தொல்காப்பியத்தைத் தொடர்ந்த தமிழரின் வாழ்வியல்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்த அதிக தமிழரின் வாழ்விடமான வடதுருவத்தைச் சுற்றியுள்ள ‘பனியும் பனிசூழ்ந்த’ நிலமும்கொண்ட ‘ஆறாம் நிலத்திணையையும்’ அடுத்தமுறை உள்வாங்கி அறிமுகப் படுத்தினால் அந்த நிலங்களில் வாழும் எங்களைப் போன்ற தமிழர்களுக்கு மதிப்பளித்தாக இருக்கும் என்றும், ஒரு சிலரை மட்டும் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் செயற்படாமல் வரலாற்றில் நடப்பதை உள்வாங்கினால்தான் தமிழ் இலக்கியம் நிலைத்து நிற்கும் என்பதையும், எமது வரலாற்றை நாமே எழுதவேண்டும் என்றும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அங்கிருந்த ஏற்பாட்டாளர்களுக்கு அதன்பின் தனிப்பட்ட முறையில் உரையாடும்போது, எடுத்துரைத்தார்.
திருமதி ஜோதி ஜெயக்குமார், திரு. சுகந்தன் வல்லிபுரம் ஆகியோர் நிகழ்ச்சி நெறியாள்கையை திறம்படக் கொண்டு நடத்தினார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், திறம்பட வழிநடத்திய மன்றத் தலைவருக்கும் எமது பாராட்டுகள்.
கனடாவில் தொல்காப்பிய விழா – 2025