நறுவிசாகச் சுவைத்த
உன் கரிசனத்தை
பத்திரமாக
வைத்திருக்கிறேன்
வழி நெடுக
அணுக்கமாக.
தவறும்பொழுதெல்லாம்
இழுத்து வரும்
கடிவாளம்
எப்பொழுதோ
நீ இட்டதுதான்.
காலச் சறுக்கின்
நிதானிக்காத
திசைமாறலில்
வெகு தூரம்
பயணித்துவிட்டாலும்
வியாபித்திருக்கும்
அந்நியோன்னியப்
புரிதல்களை
யாதொன்றும்
அபகரிக்கவில்லை என்பதே
நேசத்தின் சாட்சியாகும்.
அஃதொரு
ஆச்சரியமாக
நினைவொன்று
தோளுரசி
சிலிர்த்துச் சென்றால்
தூசு தட்டி
சுவைக்கின்றேன்
உன்
நலவுகளையென
நம்பலாம்
மாப்பின்
மகோன்னதத்தில்
பிரிதலின்
துயரப்பாடானா
அன்றைய
அசௌகரியத்தைக்
கடந்து.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com