Posted in

ஓவியமோ நீ?

This entry is part 4 of 10 in the series 2 நவம்பர் 2025

கு.அழகர்சாமி

(1)

வண்ணங்கள்

கலந்து

வண்ணங்களோடு

தீற்றலில்

ஒளிந்திருக்கிற

நீ

வெளியே வா-

நான்

தீட்டாத

ஓர்

ஓவியமாய்

நீ.

(2)

வண்ணங்கள்

சுழற்றியடிக்கும்

சூறாவளியின்

நடு மைய அமைதியை

அடையும் போது

நீ

ஓர் ஓவியத்தைக் 

கண்டடைவாய்

என்கிறாயே-

அப்படித் தான்

உன்னைக் கண்டடையும்

ஓர் ஓவியமோ 

நீ?

(3)

ஓர்

ஓவியமாய் இருக்கிற

ஓர்

ஓவியமாய் இருக்கிறாயோ

என் நினைவில்

ஓவியம்

நீ?

கு.அழகர்சாமி

Series Navigationமெஹரூன்மழை புராணம் – 6 மழை நேரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *