மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது

Spread the love
 matrupadangal

 

இந்நூல் சினிமாவின் உன்னத கலைப்படைப்புகள், புதிய தடம் பதித்த பெரு வழக்குப் படங்கள் அவற்றிற்கான  இயக்குனர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது. திரைப்படங்கள் மீதான இலக்கியத்தாக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் , திரைப்படங்களில் தலித்துகள் சித்தரிப்பு, ஆவணங்கள் காக்கப்படுதலின்  அவசியம், திரைப்பட ரசிகர்களின் மனோபாவம் மற்றும் சுதந்திர செயல்பாடுகள் ஆகியன ஆய்வு நோக்கில் அணுகப்பட்டுள்ளன.

பவள விழா ஆண்டு  கொண்டாடிய சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ், வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடிய பாலு மகேந்திராவின்  வீடு, மகேந்திரனின் உதிரிப்பூக்கள் ஆகியவை பற்றிய சிறப்பு கட்டுரைகளுடன் பி.கே.நாயருடனான பேட்டியும் மற்றும் சமீப காலங்களில் பெரும் விவாதங்களுக்குள்ளான பல்வேறு திரைப்பட அக்கறைகள் மீதான காத்திரமான கருத்துப் பதிவுகளும்  இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

Series Navigationசீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​5என் புதிய வெளியீடுகள்