மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

Meerabai_1

இதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள் காரைக்கால் அம்மையார்.

கணவன் தொட்ட உடலே வெறுத்து பூதவடிவம் கொண்டாள் இறைவனுக்காக.

அடுத்தவள் ஆண்டாள், கண்ணனே என் காதலன் என்று நாயகன் நாயகி பாவத்தின் உச்சத்தில் சென்று அவனுடன் ஐக்கியமானாள்.

மூன்றாவது சொன்ன அக்காமகாதேவி திருமண ஆசையுடன் நெருங்கியவனை

உதறிவிட்டு உதறிய அந்த ஆடையை எடுக்காமல் சமூகவெளிக்குள் வந்துவிடுகிறாள். அடுத்தவள் லல்லேஸ்வரிக்குத் திருமணம் ஆகிறது.

ஒத்துப் போகவில்லை. வெளியில் வருகிறாள். இங்கே எவனும் ஆண்மகன் இல்லை என்ற ஆவேசத்துடன். இத்தனை பேரின் வாழ்க்கையின் சாரங்கள் அனைத்தையும் நாம் ஒன்றாக சேர்த்து ஒரு பெண்ணின் உருவில் பார்க்க வேண்டும் என்றால் அவள் தான் மீரா என்ற மீராபாய். ஆண்டாளைப் போல இவளுக்கும் கிரிதர கோபலனே காதலன், இவள் ஏற்றுக்கொண்ட இவள் மணாளன். பெற்றோரின் வற்புறுத்தலால் நடக்கும் திருமணமும் இவள் கோபனிடம் கொண்ட காதலை மாற்ற முடியாமல் திணறுகிறது.

மற்ற எல்லா பெண்களையும் விட இவளுக்கே கட்டுப்பாடுகள் அதிகம். காரணம் இவள் அரசகுடும்பத்துப் பெண். ரஜபுதன அரசி. ரஜபுத்திர குடும்பங்களில் இன்றைய ராஜஸ்தான் பெண்களின் வாழ்க்கையிலும் தொடர்ந்து வரும் குலதேவி வழிபாடு மிக முக்கியமானது. அதாவது திருமணத்திற்கு முன் வரை ஒரு பெண் அவள் தந்தை வீட்டு குல தேவி வழிபாட்டை மேற்கொள்வதும் திருமணம் ஆனபின் தன் கணவன் வீட்டு குலதேவி வழிபாட்டை மேற்கொள்வதும் அவர்கள் வழக்கம்.

அதை உடைக்கிறாள் மீரா. கோபலனை மட்டுமே கும்பிட்ட அவளுக்கு வேறு எந்த உருவ வழிபாடுகளும் ஒத்துவரவில்லை. இன்றும் ஒரு பெண் கோவிலுக்கு கூட தனியாக வருவதை அனுமதிக்காத சமூகப் பின்னணியில் தான் மீராவை நாம் நிறுத்திப் பார்க்கவேண்டும். கணவன் போஜராஜன் போரில் இறந்தப் பின் அரச வம்ச வழக்கப்படி மீரா உடன்கட்டை ஏறி இருக்க வேண்டும். ஆனால் மீராவோ தன் கோபலனுடன் உரையாடிக் கொண்டும் சாதுக்களுடன் பாடிக்கொண்டும் இருக்கிறாள் அரண்மனையில்.

 

அரண்மனையின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கிறது மீராவின் தேடல். தன்னை விஷம் கொடுத்தும் கொலை செய்யத் தயங்காத தன் கொழுந்தன் ராணாவுக்கு மீரா சொல்கிறாள்:

 

ராணா..

உன் விசித்திரமான விநோதமான உலகம்

எனக்கு விருப்பமில்லை.

அங்கே குப்பைகள் நிறைந்திருக்கிறது.

இருக்கும் எவரும் புனிதமானவராய் இல்லை,.

இனி, அணியப்போவதில்லை

எந்த நகைகளையும் நான்.

கண்ணுக்கு மையிடேன்

கார்கூந்தல் முடியேன்

மங்கலப் பெண்களின்

அலங்காரங்கள் களைந்தேன்.

மலைகளை ஏந்திய கிரிதர கோபலன்

என் தலைவன்.

இனி, தேவையில்லை

எனக்கு எந்த மணமகனும்.

 

என்று சொல்லும் போது இதுவரை சமூகத்தில் நிலவிய பதிவிரதா தர்மம், இச்சமூகம் பெண்ணுக்கு விதித்திருந்த பவித்திரம் , அனைத்தும் கேள்விக்குள்ளாகிறது. நிர்வாணத்திற்கு காரணம் சொல்லவந்த அக்காமகாதேவியும் லல்லேஸ்வரியும் தாங்கள் வரித்துக்கொண்ட ஆண்டவனை மட்டுமே ஆணாக பாவித்த அதே மனநிலையை மீராவும் வெளிப்படுத்துகிறார்.

பிருந்தாவனத்தில் வைஷ்ணவர்களின் தலைவராக ஜீவா கொசைன் என்பவர் இருந்தார். மீரா அவரைப் பார்க்க விரும்பினார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. தன்னுடைய இடத்திற்கு எந்த ஒரு பெண்ணையும் அனுமதிப்பதில்லை என்று மீராவிற்கு அவர் பதிலளித்தார். கோபத்தில் மீரா, “பிருந்தாவனத்தில் இருக்கும் அனைவரும் பெண்களே. கிரிதரனான கோபாலன் மட்டுமே புண்ணிய புருஷன். அவனைத் தவிற, இன்னொரு கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இருப்பது எனக்கு இன்றுதான் தெரியும் என்று” பதிலளித்தார். ஜீவா கொசைன் தன் செய்கைக்காக வெட்கப்பட்டார். மீரா ஒரு சிறந்த பக்தை என்பதைப் புரிந்து கொண்டார். தானே மீரா இருக்கும் இடத்திற்குச் சென்று, அவருக்கு மரியாதை செய்தார்.

 

உலக ஜீவராசிகள் எல்லாம் ஆத்மா என்றும் பரமாத்மா அவன் ஒருவன் தான்,

அவன் தான் கிருஷ்ணன் என்று மீராவின் தேடலை இரண்டே வரிகளில்

அடக்கிவிட முடியும்.

 

 

இப்போது சில கேள்விகள் எழுகின்றன.

 

இந்தப் பெண்கள் இவ்வளவு தடைகளைக் கடந்து சமூகவெளிக்கு வர என்ன காரணம்?

ஜீவாத்மா பரமாத்மாவை கண்டடையும் தேடலுக்கான பாதை சந்நியாசமா, அதாவது எல்லாம் துறந்து கடந்து தான் வந்தாக வேண்டுமா?

 

இந்தக் கேள்விக்கான பதில் உபநிஷத்திலேயே சொல்லப்பட்டு விடுகிறது.

 

மைத்ரேயிக்கும் அவள் கணவர் யாக்ஞ்வால்கியருக்கும் நடக்கும் உரையாடல் பகுதியில் இதற்கான விடை வருகிறது. பிரம்மஞானத்தை வாழ்க்கையின் எந்த நிலையிலும் பெறலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

 

கார்க்கி – பிரம்மசாரினியாக இருந்த நிலையில் கண்டடைந்தாள்

சோட்டால – கிரஹஸ்த – குடும்ப நிலையில் பெற்றாள்

மைத்ரேயி – வனப்பிரஸ்த வாழ்நிலையில் கண்டடைந்தாள்

சுலபயோகினிக்கு சந்நியாசினி வாழ்க்கையில் அந்த வெற்றி கிட்டியது.

 

 

Gargi got it in the BRAHMACHARYA stage.

Choodaala attained it while a GRIHASTHA.

Maitreyi attained it while in the VANAPRASTHA stage of life.

Sulabhayogini won it while a SANYASINI.

 

அப்படியானால் இவர்கள் ஏன் சமூகவெளிக்குள் எல்லாம் துறந்து வர வேண்டும். எல்லா உரிமைகளும் கொண்ட பெண், அவளுக்கான

அடிப்படை உரிமைகளையும் மறுக்கும் சமூகத்தில் வாழ நிர்பந்திக்ப்படுகிறாள்.

அச்சூழலில் அவளின் தேடல் அதீதமாகி அவளை இயக்கும் அதீத சக்தியாக மாற்றம் பெறும் போது இச்சமூகம் தன் கட்டுப்பாடுகளை

இழக்கிறது. அல்லது தளர்த்திக் கொள்கிறது.

 

மீராவின் இசைப்பாடல்களுக்கென்று உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள்.

ஒரு பெண் பதிவிரதாவாகவும் பக்தையாகவும் இரண்டுமாகவும் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

ஆண் பெண் உறவில் பெண் சமூகத்தின் கட்டமைப்பை பாதுகாப்பவள்.

சமூக கட்டமைப்பை விலக்கி வைக்கிறது, துறக்கிறது சந்நியாசம்.

ஒரு பெண் இரண்டுமாக இருப்பது சாத்தியமில்லை. இரண்டும் பெண்ணைப் பொறுத்தவரையில் இரு துருவ நிலைப்பாடுகள்.

 

 

இப்பெண்கள் தங்கள் மொழியில் தங்கள் உணர்வுகளை புனைந்து வடிகால் தேடிக்கொண்ட கற்பிதங்கள்,ஒரு கட்டத்துக்கு மேல் பயன் தராதபோது-உடலின் எழுச்சிகள்,அவற்றையும் மீறி அவர்களை அலைக்கழிக்கின்றன. அதுவே காதல் ததும்பும் காமம் கலந்த நாயகன் நாயகி பாவத்தின் உச்சத்தில் அவர்கள் பேசிய பெண்மொழி.

 

,

”கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும்

அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில் எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே”

என்று ஆண்டாள் வெளிப்படுத்தும் உணர்வு அவள் எரிக்கும் உடல்மொழியின் வெளிப்பாடு.

.உடலின் தேவைக்காக ஆணைச்சார்ந்தாக வேண்டியிருக்கிறதே என்ற வெறுப்பும்,அது கிடைக்காதபோது விளையும் சினமும் தீவிர வெளிப்பாடுகளுடன் வெளிப்படும் இவர்களின் மொழிகளில் ஆன்மிகம் இன்னொரு வகையில் இவர்களை ஆற்றுப்படுத்துகிறது.

 

அவனே என் மணவாளன்

அவன் ஒருவன் மட்டுமே ஆண்.

மற்றவர்கள் எல்லாம் பெண்கள் என்றும் விலங்குகள் என்றும்

உணரும் போது ஆற்றமைக்கு ஆறுதல் கிடைக்கிறது.

 

 

ஆண்டாளுக்கும், காரைக்காலம்மைக்கும் நேர்ந்த இந்த அவலத்தை’மனோதத்துவ விபத்து ‘ என்று குறிப்பிடுவார்,நாவலாசிரியர் இந்திரா பார்த்த சாரதி.

 

ஆண்டாள் யாரின் மகள்? பெரியாழ்வார் பெற்றெடுத்த மகளா?

தத்து எடுத்த மகளா? துளசிச் செடி அடியில் கண்டெடுக்கப்பட்டவளா?

என்று ஆண்டாளின் பிறப்பு குறித்து சந்தேகங்களை எழுப்பிய

ஆண் மைய சமூகம் அவள் பாடல்கள் குறித்தும் சந்தேகப்பட்டது..

 

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக ஆண்டாளை ஏற்க -அவள்பெண் என்ற காரணத்தால் பக்திமரபு முதலில் தயக்கம் காட்டியது.அவளை ஒரு கவியாக அங்கீகரிக்கத்தடை போட்ட இலக்கிய மரபுகள்,அவள் பாடல்களைப்பெரியாழ்வார்தான் (அவள் பெயரில்)பாடினார் என்று கூறவும் தயங்கவில்லை”ஆண்டாளின் அகத் துறைப்பாடல்கள்,வேறெந்த ஆண் புலவரின் அகத்துறைப்பாடல்களை விடவும் துணிவும், தெளிவும் உடையவை.இதனாலேயே,ராஜாஜி,பெரியாழ்வாரே நாயகியாகத்தம்மைப்பாவித்துப்பாடிய பாடல்கள் இவை என்று கருத்துரைத்தாரோ” என்பார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.

 

பெண் அடியார்களின் போக்குகள்,மாற்றுக்கலாசார வெளிப்பாடுகளுக்கு வழியமைத்துக்கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தால் ஆணாதிக்க சமுதாயம் அதனோடு ஒரு சமரசத்தைச்செய்து கொண்டு,அதன் எதிர்ப்புப் போக்கை பலமிழக்கச்செய்தது என்று ஏ.கே.ராமானுஜன் முன்வைத்திருக்கும் கருத்து முக்கியமானது. இச்சமரசத்தின் விளைவாகவே,திருப்பாவைக்கும்,’வாரணமாயிரம்’ என்ற ஒரு பாடலுக்கும் மட்டுமே முதன்மை தரப்பட்டது என்றும்,ஆண்டாளின் பிற பாடல்கள்,”பால் ரீதியான வெளிப்படையான படிமங்கள் காரணமாகக்கோயில்களிலும்,ஏனைய பொது இடங்களிலும் …..ஓதப்படாமல்,பக்தி இலக்கிய மரபில் அதிகம் வெளிக்காட்டப்படாமல் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டன”என்றும் ஈழ எழுத்தாளர்,செல்வி திருச்சந்திரனும் குறிப்பிட்டுள்ளார்.

ஔவையைமூதாட்டியாகவும்,காரைக்காலம்மையாரைப் பேயாகவும் மாற்றிய சமூக அமைப்பு,ஆண்டாளின் ஆளுமையினையும்,அவளது பாடல்கள் எற்படுத்திய அதிர்வுகளையும் இயல்பான போக்கில் எதிர்கொள்ளவும்,அங்கீகரிக்கவும் இயலாமல் தவித்தது; பிறகு அவளையும் பெரிய பிராட்டியாகக் கோயிலில் நிற்க வைத்து வழிபாடு செய்யத்தொடங்கிவிட்டது.

 

 

திருமணமாகாதவள், கன்னிப்பெண், சூடிக்கொடுத்த சுடர் கொடியானதை காலப்போக்கில் ஏற்றுக்கொண்ட இந்திய சமூகம் உடல்வெளியைக் கடந்த பயணத்தில் அக்காமகாதேவி, லல்லா, மீரா உட்பட அனைவரையும் அவர்களின் பக்தியை மெச்சி ஏற்றுக்கொண்டாலும் ஒரு பெண்ணாக அவர்களின் உடல்வெளி கடந்த பாதையை விதிவிலக்காக மட்டுமே இன்றுவரை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

 

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

புதிய மாதவி

Similar Posts

18 Comments

  1. Avatar
    ஷாலி says:

    கணவனை வெறுத்த காரைக்காலம்மையார்,கண்ணனை காதலனாக்கிய ஆண்டாள்,திருமண ஆசையுடன் நெருங்கியவனை உதறிய அக்கா மகாதேவி, திருமணமாகியும் ஆண்மகன் இல்லையென்று ஆடையை உதறிய லல்லேஸ்வரி,இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த உருவமாய் மீரா பாய்.உடல் வெளியை துறந்த இப்பெண்கள் அனைவரும் இறைவனையே ஆண்மகனாக தன்னை ஆள்பவனாக நேசிக்க ஹிந்து சமூக வெளி காரணம் என்ன?

    பெண் தனித்து வாழ சனாதன வேதம் இடம் கொடுக்கவில்லை.திருமணத்திற்கு முன் தந்தையின் சொல்படி நடக்க வேண்டும்,திருமணம் ஆனால் கணவன் சொல்படி நடக்க வேண்டும்,அதற்க்கு பின்பு மகன் சொல்படி நடக்க வேண்டும்.பெண் தனித்து வாழ இங்கு சுதந்திரம் இல்லை.

    “பால்யே பிதிர்வசேஸ விஷ்டேது பாணிக்ரஹா யேளவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்திரி ஸ்வ தந்த்ரதாம்.”

    ஆணை மறுக்கும் பெண்கள், தனித்து வாழ இடங்கொடுக்காத சனாதன சமுதாயத்தில் கண்ணனை காதலனாக்கியதன் மூலமே பெண்கள் தங்கள் கற்பை காத்துக்கொள்ள முடிந்தது.கணவன் என்னும் ஒரு ஆணை மறுத்ததால்,பல ஆண்கள் துரத்தும் பரத்தையாக அல்லது ஊர் பெரிய மனிதர்களுக்கு தேவ தாசியாக மாற வேண்டிய நிர்ப்பந்தம்,

    இல்லையேல் மீராபாய் தப்பித்த “ச”தீ”யில் விழுந்து அக்கினி தேவனால் ஆட்கொள்ளப்படவேண்டும்.இதுதானே பெண்களுக்கு இந்திய சமுதாயம் விதித்தது.இச்சமுதாய சதிகளிலிருந்து தப்பிக்க
    “திக்கற்றவருக்கு தெய்வமே துணை” என்று கூறி,”

    கண்ணன் என்னை கண்டு கொண்டான்,
    கை இரண்டில் அள்ளிக்கொண்டான்,
    பொன்னழகு மேனிஎன்றான்
    பூச்சரங்கள் சூடிக்கொண்டான்”

    என்பதை இலக்கிய நயமாக “சூடிக்கொண்ட சுடர்கொடியே!”
    என்று பாடி அரங்கனோடு ஐக்கியமாகி தப்பிப்பதை தவிர வேறு வழியில்லை.வக்கிர ஆணாதிக்க கூட்டத்திலிருந்து தப்ப, மானம் காக்க அன்று திரௌபதியிலிருந்து அம்மையார்,அக்கா மகாதேவி இன்று மீராபாய், ஆண்டாள் வரை கண்ணனே கதி. புதிய மாதவி களத்திற்கு வந்து விட்டார்.

  2. Avatar
    I I M Ganapati Raman says:

    ரொம்ப கஷ்டம் புரிய. புதிய மாதவி என்ன ஒரு ஆராய்ச்சி மாணவியா அல்ல பேராசிரியையா? நடை அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் நேரடியான தமிழில் எழுதமாட்டார்கள். எழுதினால் மதிப்பு குறைந்துவிடுமென்ற அச்சம். மேலும் these academics are name droppers. எனவே புதிய மாதவியும், இந்திரா பார்த்தசாரதி, இராமானுஜன் என்று கொட்டேசன் கொடுத்து அசத்துகிறார். அவர்கள் தேவையில்லை. நும் சொந்த எண்ணங்களையே எமக்குத் தாரும்.

    இக்கட்டுரை இந்த பெண் மஹான்களின் சீரிசுக்கு ஒரு முடிவுரை போல. பல விதமான தகா கருத்துக்களை அள்ளி வீசுகிறார். ஒவ்வொன்றையும் விளக்க இன்னொரு கட்டுரை போடவேண்டும். இப்போது இது:

    ஆண்டாளில் நாச்சியார் திருமொழி இன்னும் அப்படியே நாலாயிர பிரபந்தத்தில் இருக்கிறது. அதோடு சேர்த்துதான் பிரபந்தம். புதிய மாதவி சொல்வது: ஆணாதிக்கம் சதி செய்து அதைப்படிக்க மக்களுக்கு காட்டவில்லை. கற்பனை இப்படியா தாவும்?

    பொதுவாக, பெண்கள் இன்றும் தங்கள் உடல் தொடர்பான விஷயங்களைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். அவை, அவர்தம்மணாளோடு கொண்ட நெருங்கிய தொடர்பாயிருப்பின் (intimacies), தங்கள் தோழிகளிடம் கூட பகிரமாட்டார்கள். உலகில் எல்லாவிடங்களும் பெண்கள் இப்படித்தான் இருப்பர். தாம்பத்திய உறவுகள் are a kind of sacred covenant between a wife and her husband. இந்தச் சூழலை வைத்தே ஆண்டாள் எப்படி தன் தடமுலைகள் etc etc. என்று விரகதாபகங்களை – அவை பக்தியே என்றெடுக்கப்பட்டாலும் – வைப்பார் என்ற கேள்வி ஒரு பாமரனுக்கு எழாமலிருக்குமா? இராஜாஜி தன்னை ஒரு பெரும் வைணவ அறிஞராக நினைத்ததில்லை. அவர் பாமரானாக இருந்துதான் சொன்னார்: “ஆண்டாள், பெரியாழ்வாரின் பெண் பாவனையே”

    இதற்கு இன்னொரு காரணமும் வலு சேர்க்கிறது. வைணவத்தில் திருமாலே ஆண் என்றும் பக்தர்கள் அனைவருமே பெண்கள் என்றும் ஒரு மரபு இருப்பதால், ஆண் பக்தர்கள் பெண் பாவனை கொண்டு திருமால் வணக்கம் செய்வர். அவர்கள் ஆழ்வார்களெனில், பெண் பாவனையில் பாசுரங்கள் பாடி வணங்குவர். நம்மாழ்வார், பராங்குச நாயகியாகியாகவும், திருமங்கையாழ்வார், பரகால நாயகியாகவும் பாடிய பாசுரங்கள் பெயர் போனவை. Intensely sensual poems. திருமங்கையாழ்வார், பரகால நாயகியாகி, திருமாலோடு ஒரு தோட்டத்தில் இணைந்ததாகவும் எழுதிவிட்டார். :-)

    எனவேதான் இராஜாஜி, பெரியாழ்வார் அப்பாவனையை தான் அனுபவிக்க மையல் கொண்டு, ஆண்டாளாகி திருப்பாவையும் நாச்சியார்திருமொழியும் பாடியிருக்கலாமெனச் சொன்னார். இராஜாஜி சொன்னது ஆணாதிக்கமா? According to Pudhiya Madahavi, Rajaji is a male chauvinist. HAHAHAHAA……….

    இன்னொன்றையும் சொல்கிறார் புதியமாதவி ஆணாதிக்கமென்று. ஒரு அனாதைக்குழந்தையாக தன் தோட்டத்தில் கிடக்கும்போது பெரியாழ்வார் எடுத்தார். குழந்தைப்பேறுக்காக ஏங்கி வாழ்ந்த தாயன்பு கொண்டவராதலால் அக்குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்தார். வைணவம் சொல்வது. அக்குழந்தை பூமித்தாயின் மகளாகவே வந்தார். அதாவது திருமகளின் அவதாரம்.

    பாமரநிலையில் பார்க்கும்போது, வைணவப்பார்வை வரவேண்டியதில்லை. அனாதைக்குழந்தை என்றால் பல ஐயங்கள் வராமலிருக்குமா? எவர் பெற்று ஏன் போட்டார்? போட்டவர் ஏன் பெரியாழ்வார் நந்தவனத்தில் போடக்காரணம்? The person has done a good home work before dropping the newly born baby there: i.e. the old man has no issue and is desiring to have one. He must have enough resources to bring up a girl child. தன் இறுதிநாளைக்கற்பனை பண்ணும் பெரியாழ்வார், தன்னைச்சுற்றி உறவுகள் போலிக்கண்ணீரை விட்டுக்கொண்டே ‘கிழவன் அல்மிராச்சாவியை எங்கே வைத்திருப்பான்’என ஆராயுமாம். :-) படித்துப்பாருங்கள் – அப்போதைக்கப்போதே சொல்லிவைத்தேன் என்று அப்பாசுரங்கள். Therefore, he must be in possession of a good fortune. Either the person, who dropped the baby, should be so poor or got the baby out of wedlock and came early in the morning, kept the baby at a vantage place in the gardern in the darkness so that it won’t escape the sight of the garden owner, and fled immediately.

    இப்படி வைணவரல்லாதோர் கற்பனைகள் பிரமாதமாக‌ப் பண்ணலாம். ஆண்கள்தானென்றில்லை; புதிய மாதவியும் கூட பண்ணலாம். பண்ணுவார்கள் என்பதுதான் எதார்த்தம்.

    ஆனால், இப்படிப்பட்ட ஐயங்கள் எழுவது ஆண்களுக்கு மட்டும்தானாம். இவை ஆணாதிக்கமாம்! கற்பனை என்பது குதிரை. அதைக்கடிவாளம் போடாமல் விட்டால் பள்ளத்தில் போய் கொண்டுவிடும் ! ஜாக்கிரதை !!

  3. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஐ.ஐ.எம். கணபதி ராமன்,

    தங்களின் மறுமொழி எனக்கு மிக்க நிறைவைத் தந்தது. என் கருத்துக்களை அப்படியே வடித்திருக்கிறீர்கள்.

    நன்றி. வணக்கம்.

  4. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஐ.ஐ.எம். கணபதி ராமன் அவர்களுக்கு,

    //Therefore, he must be in possession of a good fortune. Either the person, who dropped the baby, should be so poor or got the baby out of wedlock and came early in the morning, kept the baby at a vantage place in the gardern in the darkness so that it won’t escape the sight of the garden owner, and fled immediately.

    இப்படி வைணவரல்லாதோர் கற்பனைகள் பிரமாதமாக‌ப் பண்ணலாம். //

    May be it is written as sarcasm. No Hindu will imagine, including Vaishanavas. Every Hindu respects Aandal, Kaaraikkaal Ammaiyaar, Mangayarkarasiyaar, Bhakta Meera, and all those saints who happen to be females, as described by respected Puthiya Madhavi .

    1. Avatar
      I I M Ganapti Raman says:

      You are correct. No Hindu will whip up his imagination in such way.

      ஆனால், புதிய மாதவி, தான் ஒரு இந்து என்ற நிலையில் இருந்து எழுதவில்லை. (I don’t know her religion though!) ஒரு பெண்ணியச்சிந்தனையாளர் என்ற நிலையில் இருந்தே எழுதுகிறார. அந்நிலையில் மஹான்கள் (இதுவே ஆண்பால் – பொதுப்பால் என்ன ?) இவர் கண்களுக்கு ஆண் அல்லது பெண் என்ற பாலுக்குட்பட்டே தெரிகின்றனர். ஒரு பெண் ஒரு மஹானாக பக்தி இயக்கத்தில் மாபெரும் இடத்தைப்பிடித்தாலும் ஆணாதிக்கம் அவ்விடத்தைக் கொடுப்பதற்கு அப்பெண் மஹானை சில கட்டுக்களுக்குட்பட்டபின்னே அங்கீகரிக்கிறது என்கிறார்.

      இங்கு பக்தர்களுக்கு இடமில்லை. மதவாதிகளுக்கும் இடமில்லை. இங்கு நிற்பது ஜெண்டர் இஷ்யு (gender issue). எப்படி ஜாதீய கொடுங்கரங்கள் மஹானகளையும் விட்டுவைப்பதில்லையே அப்படி ஜென்டர் இஷ்யுவின் கொடுங்கரங்கள் மஹானகளையும் விட்டுவைப்பதில்லை.

      இந்த டிஸ்கோர்சில் (discourse) நீங்கள் சேர்ந்து உங்கள கருத்துக்களை முன்வைப்பதற்கு முன், நீங்கள் ஒரு இந்து என்னும் உணர்வைத் துறந்துவிட்டுத்தான் வரவேண்டும்.

      Gender issue is an interesting subject that is in intellectual sphere, not in spiritual sphere. Any topic can be subjected to intellectual scrutiny and debate. It will indeed hurt the sentiments and feelings of those for whom it can never be subject to intellectual discussion and debate. Muslims will issue fatwas and put a price on your head if you debate whether Holy Koran was indeed descended from St Gabriel or just a cunning fiction foisted upon the gullible Arabs. Christians will feel deeply hurt if you debate whether Jesus is a historical figure or a fiction. And you will get angry with me if I dare to say that the sthala puranas of TN big temples are fertile imagination of of Tamil brahmins to run riot :-)

      அவர்களிடம் நாம் சொல்வது ஒன்றே ஒன்று: இங்கு வந்து படிக்காதீர்கள் என்பதே. இது சுதந்திர சிந்தனையாளர்களுக்கு மட்டுமே. அவர்கள் தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்காமல் இருக்க முடியாது. I expect intellectually stimulating comments from you !

  5. Avatar
    ஷாலி says:

     உயர்திரு ஐ.ஐ.எம். கணபதி ராமன்,
    தங்களின் மறுமொழி எனக்கு மிக்க நிறைவைத் தந்தது. என் கருத்துக்களை அப்படியே வடித்திருக்கிறீர்கள்.
    நன்றி. வணக்கம்.
    அன்புக்குரிய நண்பர் “ஒரு அரிசோனன்” கூறுவதை அப்படியே நானும் வழி மொழிகிறேன்.

  6. Avatar
    I I M Ganapati Raman says:

    //.உடலின் தேவைக்காக ஆணைச்சார்ந்தாக வேண்டியிருக்கிறதே என்ற வெறுப்பும்,அது கிடைக்காதபோது விளையும் சினமும் தீவிர வெளிப்பாடுகளுடன் வெளிப்படும் இவர்களின் மொழிகளில் ஆன்மிகம் இன்னொரு வகையில் இவர்களை ஆற்றுப்படுத்துகிறது.//

    ஆன்மிகம் ரொம்ப சீப்பா போச்சு !

    ஆணைச்சார்ந்து உடல் உபாதைகள் (biological urges i.e. sexual urges) தீர்க்கப்படவேண்டும். அப்படி ஒருவனைச்சார்தல் ஏற்க முடியா வெறுப்பே. ஆனால் உடல் உபாதைகள் தணியவேண்டுமே என்ன செய்ய? இருக்கவே இருக்கான் கண்ணன் அல்லது கோபாலன். போய்த் தணித்துக்கொள்கிறார்களாம். The women concerned hates to have sexual liasion with their men. They want to have it mentally with some one else of their choice – here God – who can be felt but not actually embraced physically. What is the word for such sexual fantasies ? All of us know that. என்னை நீங்க திட்டிப்பலனில்லை வாசகரே. அவர் சொற்களைப் பாருங்கள். //உடலில் தேவைக்காக// ஆணைச்சார்திருக்க// அது கிடைக்காத போது// இவர்களை ஆற்றுப்படுத்துகிறது//

    உடல் உபாதைகளைத்தணிக்க இன்னொருவனை – அவன் கடவுளேயானாலும் – கற்பனையாகப் பயன்படுத்துவதாகச் சொல்வது பெயர் ஆன்மிகம் அன்று. Pudhiya Madhavai wanted to say something better, but alas, her Tamil lacks correct vocabulary. If so, it is better for her to read some Vaishnavite tracts by eminent scholars to know how they treat Andal’s approach to her God. Don’t worry all of them are in Tamil only. Read Naa Subbureddiyaar’s essay in the Souvenir Issue of Ulagath Thamizh Maanaadu held at Tanjore in the 80s. Or, is Madhavi indeed saying ‘human sexual urges’ literally? There I go again :-(

    The Vaishnavites take the Andal’s style of Bhakti differently. As simple guys, we need not go with them, but, even as an intellectual freedom to think for ourselves, to think as Madhavi does is to denigrate women, that too, such spiritual giants. நான் ஏற்கனவே சொன்னது போல, பெண்கள் அவ்வளவு மட்டமானவர்களா? இல்லை. புதிய மாதவியின் சிந்தனை அருவருப்பைத் தருகிறது.

  7. Avatar
    I I M Ganapati Raman says:

    Her bottom line is at the bottom of the essay:

    //திருமணமாகாதவள், கன்னிப்பெண், சூடிக்கொடுத்த சுடர் கொடியானதை காலப்போக்கில் ஏற்றுக்கொண்ட இந்திய சமூகம் உடல்வெளியைக் கடந்த பயணத்தில் அக்காமகாதேவி, லல்லா, மீரா உட்பட அனைவரையும் அவர்களின் பக்தியை மெச்சி ஏற்றுக்கொண்டாலும் ஒரு பெண்ணாக அவர்களின் உடல்வெளி கடந்த பாதையை விதிவிலக்காக மட்டுமே இன்றுவரை ஏற்றுக்கொண்டிருக்கிறது.//

    நாமெல்லோரும் மனிதர்கள். நம்மில் வெகு சிலருக்கு ஏற்படும் அல்லது அனுபவிக்கப்படும் ஆன்மிக நிலை நமக்கெட்டா தொலைவிலும் புரியா வண்ணத்திலும் இருக்குமென்பது ஆன்மிக வரலாறு. Dr Kenneth Walker in his Diagnosis of Man refers to such people of possessing Higher Consciousness and we possessing lower or lowest Consciousness. Psychologists wrote about their religious experiences rationally. இவர்களை நாம் மஹான்கள் என்றழைக்கிறோம். வைணவத்தில் இவர்கள் கடவுளின் அவதாரங்களாகிறார்கள். இசுலாமில் இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் தர்க்காக்கள் என்றழைக்கப்பட்டு மக்கள் வணங்குமிடமாகின்றனர். கிருத்துவத்தில் செயின்ட்ஸ்.

    இவர்களது செயல்பாடுகள் bizarre, maverick and shocking also. எ.காட்டாக, ஃபிரான்சிஸ் ஆஃப் டி அசசி, தான் மரணப்படுக்கையில் இருக்கும்போது தன் சீடர்களை அழைத்து என்னையும் சிலுவையில் அறையுங்கள் என ஆணையிட அவர்கள் அவர் கால் கைக்களில் ஆணிகளடித்து அப்படியே செய்தாரகள். அவர் அப்படித்தான் மரித்தார். இதைப்போல ஆண்டாள் மானுடரிக்கெனில் வாழ்க்கைப்படேன் எனபதும் மீரா, மனித உறவுகள் வேண்டா, கணண்னே போதும் என அரணமனை வாழ்க்கையை உதறியதும், குலசேகர ஆழ்வார், இராமாயண கதாகலாச்சேபத்தில், பாகவதர், இராவணன் சீதையைக் கடத்திச்செல்கிறான் எனச்சொன்னவுடன் வில் அம்புகளோடு புறப்படுங்கள் இலங்கைக்கு என்று தம் சேனைக்கு ஆணையிட்டுப்புறப்பட ஆரம்பித்ததும் – இன்னபிற இவர்களின் அமானுஷ்ய செயல்களைக் கண்டு, இவர்களை religious nuts என்று சொல்வோம். பின்னர் புரிய அவாக்கொள்வோம்.

    ஆனால் இச்செயல்பாடுகளை வெறுப்பதோ, அஞ்சுவதோ செய்யாமல், இச்செயல்பாடுகளை ஆராய்ந்து இவர்களை மஹானகள் எனவும் இவர்கள் ஆன்மிகம் விசித்திரமானது ஆனால் உட்பொருள் அமைந்தது; அவற்றை சாமானியர்களாகிய நாம் புரிந்து போற்றுதலே மதமாகும் என‌ மதப்பெரியோர் சொன்னதை ஏற்றுக்கொள்கிறோம்.

    ஏற்றுக்கொள்ளாமல், நாம் மதத்துக்கு வெளியே நின்று சுதந்திர சிந்தனையாளராகப் பார்த்தாலும். முதலில் நமக்குப்பட வேண்டியது:

    These people are not one of us. They are odd men, or odd women out. Far different from us. I must not treat them as just a woman like me, or just a man like me. Having conceded to this point, it is silly to treat the four women saints as mere women with bodily urges for which they sought the route of spirituality.

    இதுவே என் முடிவு: நாம் அவர்களல்ல; அவர்கள் நாமல்ல. நமக்கு வைக்கப்படும் வரைகள் அவர்களுக்கல்ல. (இப்படி நினைப்பதற்கும் கொஞ்சூண்டு ஆன்மிக உணர்வு தேவை)

    Over.

  8. Avatar
    ஒரு அரிசோனன் says:

    Respected IIM Ganapti Raman,

    You completely baffle me…..

    1. It is you who brought a Hindu sect, Vaishnavas into the picture in your first response to the essay. My response is to your observation to that point.
    2. You never made it very clear that you are responding to Ms. Puthiya Madhavi’s essay from the viewpoint of an agnostic/athiest, or some other mode.
    3. Thinnai has never restricted its readership to non-religious believers only. Hence, your suggestion/advice/ recommendation that others should not see this essay, or record their comments is taking Thinnai Editors’ rights in your hand. I don’t think you are their authorized attorney.

    4. //அவர்களிடம் நாம் சொல்வது ஒன்றே ஒன்று: இங்கு வந்து படிக்காதீர்கள் என்பதே. இது சுதந்திர சிந்தனையாளர்களுக்கு மட்டுமே. அவர்கள் தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்காமல் இருக்க முடியாது. I expect intellectually stimulating comments from you !//

    You words are totally irrelevent, and reeks of arrogance and contempt for other readers.

    To me, your writing “நாம் சொல்வது” may either be a royal We, or looking for stilts to prop up your point of view, since it appears that you do not have confidence in your statement.

    4. Your assumption that non-religious/agnostic/athiests are independent thinkers and rest are not capable is not acceptable. If anyone cannot respect others independent thinking capability, then he loses his right to call himself an independent thinker, who can approach with an open mind.

    5. Your behavior appears like bait and switch, like that of an used car salesman. It seems to me that you are fishing for comments from someone who can talk about religion, and then slam them. That action does not behoove an independent thinker. Ms. Puthiya Madhavi will not agree with you words that only independent thinkers should either read her essays, or record their comments.

    6. When an article is published in a public internet magazine with no limitations placed on readership, all types of readers will read it, and will record their opinions. No one has the right to tell/advice/
    recommend/suggest from what viewpoint they should respond.

    7. All I have written was that “do not limit your exceptions to Vaishnavites, all Hindus will hold that position”. Even a non-Hindu is capable of that observation. Hence, an outburst from you is non-warranted.

    8. I have never written anywhere in my articles or responses denigrading any religion, sect, including athiests.

    9. // And you will get angry with me if I dare to say that the sthala puranas of TN big temples are fertile imagination of of Tamil brahmins to run riot//

    Why should I get angry with you? You have got every right to record whatever opinions you have in this place as long as it is allowed by the esteemed editors of Thinnai. I may, or may not write a response. Then also, it is the privilege of Thinnai editors to publish my response or not.

    If you are really an independent thinker,yYou will disagree only with a point or belief. Neither would you have singled out a caste to show your contempt, nor would you not attack any caste, community, religion, etc. Your arguments would have been only against certain beliefs, methodologies, superstitions, etc., not against individuals.

    10. //இந்த டிஸ்கோர்சில் (discourse) நீங்கள் சேர்ந்து உங்கள கருத்துக்களை முன்வைப்பதற்கு முன், நீங்கள் ஒரு இந்து என்னும் உணர்வைத் துறந்துவிட்டுத்தான் வரவேண்டும்.//

    Neither did the Thinnai editorial board, nor Ms. Puthiya Madhavai put such conditions. I will understand if you record your responses strictly against/for my comments. Trying to restrict my point of view is tryhing to take away my rights for free speech/expression.

    11. Moreover, you do not know to which religion, if at all, I belong. Do not make any assumptions. I never asked/assumed/surmised your religion. It is not necessary in public debates.

    12. So, do not try to fish in troubled waters. My comments are my comments only. If they do not stimulate your intellect, I am not responsible for it.

    13. Now, you make me doubt your real aim of writing your first comment. My intellect tells me that your first response was not a response to Ms. Puthiya Madhavi. It was lure to other fish, so that you can further your hidden agenda.

    14. You are correct in the sense I am a devotee of all good writing, even if they do not respresent my point of view. I am also a fanatic of Tamil and good Tamil essays, whether I agree with the contents or not. I like Ms. Puthiya Madhavi’s essays, her writing style, and the way she puts forward her point of view. I respect her writing style, her research capabilities, and her method of presenting it in a simple, unambiguous format so that everyone can understand it very clearly.

    15. Do not climb on to a holy pulpit, and tell me what to do. I expect intellectually stimulating, straight forward, non-sarcastic comments from you.

    With best regards,
    Oru Arizonan

  9. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஷாலி அவர்களே,

    //வக்கிர ஆணாதிக்க கூட்டத்திலிருந்து தப்ப, மானம் காக்க அன்று திரௌபதியிலிருந்து அம்மையார்,அக்கா மகாதேவி இன்று மீராபாய், ஆண்டாள் வரை கண்ணனே கதி. //

    //சனாதன சமுதாயத்தில் கண்ணனை காதலனாக்கியதன் மூலமே பெண்கள் தங்கள் கற்பை காத்துக்கொள்ள முடிந்தது.//

    தங்களுடைய இக்கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை. ஆண் ஆதிக்கம் என்பது எல்லா சமூகத்திலும் இருந்த/இருந்துவருகின்ற ஒன்று.

    இன்றும் செல்வத்திலும், பெண் உரிமையிலும், சுதந்திரத்திலும் மிகவும் முன்னேறியதாகக் கருதப்படும் மேற்கு நாடுகளிலும் பெண்களின் கற்பு வக்கிர ஆணாதிக்கக் கூட்டத்தால் சூரையாடப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. ஒரு கொடியவன் மூன்று பெண்களை நிலமட்டக் கீழறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிமை செய்து வந்தது அமெரிக்காவில்தான். சனாதன நன்னெறியா இங்கு அதற்குக் காரணமாக அமைந்தது?

    “பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்று எழுதியதும் ஒரு ஆண்தான்.

    “அம்மையே அப்பா!” என்று இறைவனை ஆணும் பெண்ணுமாகப் கண்ணுற்றுப் போற்றியதும் சனாதன நெறிமுறையைச் சேர்ந்த சைவ அடிகள் திருநாவுக்கரசர்தான்.

    “வேயுறு தோளி பங்கன்” என்று இறைவன் தன் உடலில் பாதியைப் பெண்னின் அம்சமாகக் கொண்டவன், இறைவன் ஆணாகவும்,பெண்ணாகவும், அலியாகவும், விலங்குகளாகவும் இருக்கின்றான் என்று முழங்கி, அனைவரும், அனைத்தும் ஒன்றே என்று அறிவித்ததும் தாங்கள் குறிப்பிட்ட சனாதன சமயம்தான்.

    சக்தி என்னும் தன்னுணர்வு (பெண்மையின் உருவம்)தன்னுள் தோன்றாவிட்டால், சிவம் (ஆண்மையின் ஒருவம்) ஒன்றையும் சாதிக்க இயலாது என்று இயம்பிய ஆதி சங்கரர் சனாதன சமயத்தைச் சேர்ந்தவர்தான்.

    சனாதன சமயத்தின் மும்மூர்த்திகளை சிவன், திருமால், பிரம்மன் என்று ஆண்களாகக் குறிப்பிட்டாலும், அவர்கள் தத்தம் தொழில்களைச் செய்யத் தேவையான சக்தி, செல்வம், அறிவு இவற்றிற்கு, இந்த மும்மூர்த்திகளும் செயல்படுவதற்குத் தேவையான வலிமையைப் பெண் தெய்வங்களான மலைமகள், திருமகள், கலைமகள் இவர்களிடம் வைத்துச் சிறப்பித்தது சனாதன சமயம்தான்.

    உயர்திரு ஷாலி அவர்களே, உண்மை இப்படி இருக்க, எங்கோ, எந்தக் காலத்திலோ, இக்காலத்திற்குப் பொருந்தாதாதவைகளை எடுத்து மேற்கோள் காட்டி, ஒரு நன்னெறியை ஏன் தூற்றவேண்டும்? நீங்கள் கண்டனம் செய்யவேண்டியது காலத்திற்குப் பொருந்தாத கோட்பாடுகளே அன்றி, சமயம் அல்ல.

    பெண்ணடிமை செய்யத் துவங்கியது ஆண்களே! அது இன்றும் உலகில் மிகக் கொடூரமாக “White Slavery”யாக, மேற்கத்திய நாடுகளில் நடந்து வருகிறது. அதை எதிர்த்துப் போராடும் எவரும் அந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடுகிறார்களே அன்றி, எந்த சமயத்தையும் குறை கூறுவதில்லை.

    பழந்தமிழ்க் காவியங்களிலே, தலைவன் பரத்தையை நாடிச் செல்வது குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதனால், தலைசிறந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தாக்கி, “பெண்ணடிமைக்கு, பெண்கள் பரத்தையராய் ஆக்கப்பட்டதற்குப் பழந்தமிழ்ச் சமுதாயமே காரணம்!” என்று சொல்வதற்கு நிகராக இருக்கிறது உங்கள் கருத்து என்று எனக்குத் தோன்றுகிறது.

    ஆகவே, பெண்களை உயர்த்திப் போற்றிய சனாதன சமயத்தைக் காரணம் காட்டுவது பொறுப்பல்ல.

    ஆண்களைக் குறைகூறுவதை விட்டுவிட்டு, சமயத்தை, அதுவும் பெண்களைப் போற்றிவரும் ஒரு சமயத்தைக் குறைகூறுவது, “கனி இருக்கக் காய் கவர்ந்தற்று” என்ற செந்நாப் போதாரின் அற நூலிலுள்ள ஒரு சொற்றொடரை நினைவூட்டுகிறது.

    வணக்கம்.

  10. Avatar
    I I M Ganapati Raman says:

    //Puthiya Madhavi’s essay from the viewpoint of an agnostic/athiest, or some other mode.//

    No! She doesn’t write here as an agonist or an atheist. She may be anything in private. But here she comes across a feminist only. இறைப்புனிதர்களை பெண்ணியம் வழியாக எடைபோடுகிறார். அதைச்செய்யும் போது அவரின் குறைந்த எல்லை தெரியவருகிறது. அதைத்தாண்டி அவரால் வெளிவரமுடியாது. இறைப்புனிதர்கள் பெண், ஆண் என்ற உடல்சார்ந்த வாழ்க்கையிலிருந்து விடுபடுகிறார்கள். உடலை வேண்டாம் என சொல்லும்போது அதை நாம் புரிகிறோம். மாறாக, அவர் உடல் உபாதைகளைத் தீர்க்கவே இறைவணக்கம் ப்ண்ணினர் என்பது மட்டமான கற்பனை.

    //Thinnai has never restricted its readership to non-religious believers only. Hence, your suggestion/advice/ recommendation that others should not see this essay, or record their comments is taking Thinnai Editors’ rights in your hand. I don’t think you are their authorized attorney.//

    Not on the spot. You should be able to read between the lines. Don’t take words literally as my second son. பக்தர்கள் பொதுவாக சுதந்திர சிந்தனையாளர்கள் இல்லை. அவர்களிடம் பெரியார் பருப்பு வேகாது. கிருத்துவர்களிடம் போய், ஒரு கன்னிக்கு எப்படி குழந்தை பிறக்குமென்று கேட்க முடியாது. இந்துக்களிடம் போய், எப்படி நரிகளை பரிகளாக்கினார் ஈசன்? என்றெல்லாம் கேட்க முடியாது? எப்படி கபிரியேல் வானத்திலிருந்து அசிரீரியாக குரானை வழங்கினார் என்று கேட்க முடியாது. அவர்கள் சொல்வது: Religious belief cannot be subjected to reason என்பதுதான். எனினும், சிலர் அவர்களிடமும் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தில் என்ன ஏறக முடியுமோ அதை மட்டும் ஏற்று நம்பிக்கையாளர்களாக இருக்க முடியும். முடியாதவர்கள் நாத்திகராவர்.

    அருணகிரிநாதர் விலைப்பெண்டிரே என்று சென்றதால் பாலியல் நோயால் தாக்கப்பட்டார். இரமணர் கேன்சரில்தான் செத்தார் – என்றெல்லாம் எழுதினால், அருணகிரிநாதரின் பக்தர் உள்ளுழைந்து Religious belief cannot be subjected to reason என்று கண்ணியமாகச் சொல்லத்தெரியாது. மாறாக, தமிழில் இருக்கும் கெட்டச் சொற்களால் உம்மை அர்ச்சனை பண்ணுவார்.

    இப்படி வேண்டாமென்பதற்காகவே உங்களால் இதைத் தாங்க முடியாது. இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? இது சுய சிந்தனையாளருக்கு மட்டுமே என்று சொன்னால், எப்படி சொல்லலாம் என்பது itself arrogance.

    //Adults only. Similarly, free thinkers only //என்று முன்னறிவிப்பை வைத்துவிட்டால் நல்லது எனப்தே நான் சொன்னது. இதுவா திமிர்?

    Without free thinking, Thinnan will become a religious site only. You have got Tamilhindu.com and innumerable Islamic and Christian sites where these bhaktas can go and suck the nectar of religion.

  11. Avatar
    I I M Ganapati Raman says:

    //non-religious/agnostic/athiests are independent thinkers and rest are not capable is not acceptable//

    It is an arrogant assumption of the so-called free thinkers to lable others as incapable of free thinking. அவர்கள் என்ன நினைத்தாலும் நமக்கென்று ஒரு கருத்து இருக்குமில்லையா? அதன்படி, மத நம்பிக்கை கொள்வோர் கால்களில் மதம் என்ற் பாறை கட்டப்பட்டு இருக்கிறது. சுதந்திர சிந்தனையாளர்கள கால்களில் இல்லை. மதம் நம்பிக்கை உள்ளோர் எப்படி இவர்களோடு ஓட முடியும்? இருப்பினும் சிலர் செய்வர். அவ்வளவுதான். It is difficult for believers to think freely as they have to accept irrational things like virgin birth, resurrection of dead person, miracles, human beings as avatars of Gods. எப்படி முடியும் அவர்களால் இந்த நம்பிக்கைகளை ஆராய? சுதந்திர சிந்தனையாளர்களால்தான் முடியும். கோயில்களின் ஸ்தல புராணங்கள் சொல்வது ஆகாயத்திலிருந்து ஈசன் இந்தவிடத்திலதான் இறங்கினார் என்று சொல்லும் போது நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் அது கற்பனை. அதைச்செய்தவர்கள் அக்கோயில் வரலாற்றை எழுதியோரே. வலிக்கத்தான் செய்யும். இசுலாமியர் கோயில் வரலாற்றை இவர்தான் எழுதினார் என்றால் அவர்களுக்கு வலிக்கத்தான் செய்யும். வேளாங்கண்ணியின் புராணம் பற்றிய கதைகளைப்பற்றி சொன்னால் பாதிர்களுக்கு வலிக்கத்தான் செய்யும்? எனவே தான் கேட்டேன்: நீங்களேன் படிக்கவந்தீர்கள்? It is a safe life to accept all unquestioningly, isnt’ Arizonan?

    Believe me, there are lots and lots of Tamil brahmins who are otherwise. They reject many things in the religion, of which the Sthala puranas are some. You seem to be not one of them :-(

    இப்படியே போய்க்கொண்டிருந்தால், கட்டுரைத் தலைப்பையே மாற்றவேண்டியடிருக்கும். எனவே நிறுத்தலாம். A humble request: Don’t read me. It is meant for others who have no baggage to pull up.

  12. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஐ.ஐ.எம். கணப்டி ராமன் அவர்களே,

    //புதிய மாதவியின் சிந்தனை அருவருப்பைத் தருகிறது.//

    உங்களது இந்தக் கருத்துத்தான் எனக்கு அருவருப்பைத் தருகிறது.

    இதில் உங்களை சுதந்திர சிந்தனையாளர் என்று வேறு சொல்லிக்கொள்கிறீர்கள். எனக்கு எப்படிச் சிந்தனை செய்வது என்று கற்றுத் தர வேறு முயற்சிக்கிறீர்கள். ஆனால் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறீர்கள் என்று புலனாகிறது.

    என்ன நினைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. சிரிப்புத்தான் வருகிறது!!!!!!!!!!!!!!

  13. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஐ.ஐ.எம். கணபதி ராமன் அவர்களே,

    //it is silly to treat the four women saints as mere women with bodily urges for which they sought the route of spirituality.//
    //நாம் அவர்களல்ல; அவர்கள் நாமல்ல. நமக்கு வைக்கப்படும் வரைகள் அவர்களுக்கல்ல. (இப்படி நினைப்பதற்கும் கொஞ்சூண்டு ஆன்மிக உணர்வு தேவை)//

    இந்தக் கருத்துகளை நான் ஒப்புக்கொள்கிறேன். வணக்கம்.

  14. Avatar
    I I M Ganapti Raman says:

    /ஆண்களைக் குறைகூறுவதை விட்டுவிட்டு, சமயத்தை, அதுவும் பெண்களைப் போற்றிவரும் ஒரு சமயத்தைக் குறைகூறுவது, //

    ஆண்களே சம‌யங்களை எழுதிக்கொண்டவர். பெண்கள் எழுதவில்லை. சமயம் பெண்ணடிமைத்தனத்தை வைத்தே உருவாக்கப்பட்டது என்பது எல்லா பெரிய சமயங்களின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. சனாதன மதம் மட்டும் விலக்கு என்பது ஒரு வித மத வெறியைத்தான் காட்டுகிறது. விதவைகளை மொட்டை போட வைத்ததும், வெள்ளைச்சீலை உடுக்கவைத்ததும், மூலையில் உட்கார வைத்ததும், உடன்கட்டை ஏறச்செய்தலும், பால்ய விவாயகத்தை உருவாக்கியதும், வேதக்கல்வி மறுக்கப்பட்டதும், தலித்துகளோடு சமமாக வைத்துத் தீண்டாமை செயததும் சனாதனமில்லாமல் வேறெந்த மதம்? இதனால் கிருத்துவம், இசுலாம் புனிதமென்று ஆகா. அவையும் தன்பங்குக்கு பலபல செய்தன. அவ்வளவுதான்.

    உமையொரு பாகன், திருவாழ் மார்பன் என்ற கடவுள் கட்டமைப்புக்களில், ஆணில்தான் பெண் என்றிருக்கிறதே தவிர பெண்ணில் ஆள் என்றில்லை. ஆண் தெய்வங்களுக்கு பல மனைவிகள்; அல்லது இரண்டு. பெண் தெயவத்துக்கு எத்தனை கணவன்கள்? ஆக, ஆணுக்குத்தான் பெண் என்பதே எல்லா மதங்களும் அடித்துச்சொல்வதாகும். விவிலியம், ஆணிலிருந்துதான் பெண்ணை இறைவன் படைத்தான் என ஒரே போடாகப்போட்டது மட்டுமில்லாமல், ஆண் இயற்கையில் நல்லவன், இவள் வந்து அவனைக்கெடுத்தான் என பாம்புக்கதை சொல்லி வைத்து மிரட்டிவிட்டது. விவிலியத்தை நம்பும் எப்பெண்ணும் தன்னை ஆணுக்கு நிகராக வைத்துப்பார்க்க முடியாது. He for God only. She for God in him என்பதுதான் கிருத்துவம்.

    வீட்டிலிருந்து விலக்கு புனிதத்தன்மையைக்காக்க; பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது; விதவையைப்பார்த்தால் அமங்கலம். என்றெல்லாம் சொல்லிப் பெண்ணைச்சிறுமைப்படுத்தியோர் யார்? இக்கட்டுரையிலேயே, மீராவைப் பார்க்க மாட்டேன் என்று சொன்னவர் ஒரு பெரிய மஹான். ஏன் சொன்னார்? அவரின் சமயம் அவரைச்சொல்லவைத்தது. ஆணதான் பூஜாரி? இன்றுதான் கிருத்துவத்தில் இங்கிலாந்தில் பெண் பாஸ்டர் வருகிறார் பல எதிர்ப்புக்களுக்கிடையில். வெள்ளைக்காரன் புனிதம் கெட்டுவிடும் என்று மாதவிலக்கான பெண்களைச் சொல்லவில்லை. இந்துமதம் இன்னும் சொல்கிறது. பூஜை அறைக்குள் நுழைய முடியாது அந்நாட்களில். சனாதனத்தைப்பார்த்து மற்ற பிரிவுகளும் ஜால்ரா போடுகின்றன.

    மனிதர்களில் பொதுவாக பெண்ணடிமைத்தனம் எங்குமே உண்டு. அதை அரிசோனன் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. பொதுவான பெண்ணடிமைத்தனத்துக்கு மருந்து உண்டு. மாற்று உண்டு. சட்ட ரீதியான நீதியும் உண்டு. ஆனால் சமய வழி வந்ததற்கு ஒரு கழுதையும் கிடையாது. அடிமை அடிமைதான் இங்கே. எங்களைப்பெருமாள் மார்பில் வைத்தார். சிவன் இடப்புறத்தைத் தந்தார் என்பது அய்யோ பாவம் என அவர்களின் மீது இரக்கம் என்ற டிராமாதான். கடவுள் சொன்னாரென்னும் போது மக்கள் பயப்படுகிறார்கள். பயத்தில் மேல் கூடாரம் போட்டு வாழ்வதுதான் மதங்கள்.

    பெண்களே தங்கள் மதத்தை சிருஷ்டித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நீதி மதத்தில் கிடைக்கும். முடியுமா?

  15. Avatar
    I I M Ganapati Raman says:

    //புதிய மாதவியின் சிந்தனை அருவருப்பைத் தருகிறது.//
    உங்களது இந்தக் கருத்துத்தான் எனக்கு அருவருப்பைத் தருகிறது.//

    It is intellectual freedom of free thinkers to say that certain idea is repulsive.

    //Neither would you have singled out a caste to show your contempt, nor would you not attack any caste, community, religion, etc. //

    Shtala puranas are from the fertile imagination of Brahmins. – I said.

    To call it an attack on a caste and contemptuous is intellectual slavery to caste loyalty.

    BREAK FREE.

  16. Avatar
    ஒரு அரிசோனன் says:

    Mr. I.I.M. Ganapti Raman,

    In science, I read about two forces, friction, and, drag. They always oppose whatever one does. If one pushes or flies, friction and drag oppose. If one tries to stop or brake, frictin and drag oppose.

    You are like friction and drag. You always oppose indiscriminately.

    Having said that, both friction and drag serve useful purpose. May be, you have some useful purpose by opposing anything and everything.

    You preach Ms. Puthiya Madhavi and I as if we do not know how to think.

    Everyone’s thinking is shaped by what they are exposed to.

    Unless someone teaches somebody numbers, addition or multiplication, they cannot free think those. Everyone learns from others’ thinking only. They pick and choose what they believe, or what the direction they need to channel their thinking.

    If a person has an opposite point of view for everything, and considers he is above all, there is no point engaging him.

    Thanks a lot!

  17. Avatar
    ஷாலி says:

    //கணவன் போஜராஜன் போரில் இறந்தப் பின் அரச வம்ச வழக்கப்படி மீரா உடன்கட்டை ஏறி இருக்க வேண்டும். ஆனால் மீராவோ தன் கோபலனுடன் உரையாடிக் கொண்டும் சாதுக்களுடன் பாடிக்கொண்டும் இருக்கிறாள் அரண்மனையில். அரண்மனையின் கட்டுப்பாட்டிற்குள் அடங்க மறுக்கிறது மீராவின் தேடல்//

    ஆணை மறுத்து கண்ணனை காதலனாக்கிய அன்னைகளை இங்கு புதிய மாதவி வரிசைப்படுத்துகிறார். இவர்கள் சமூகத்தால் வணங்கப்பட்டு ஆன்மீக சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டனர்.கணவனை இழந்த மீராவும் சதியை தன் மதியால் வென்று தன் விதியை கோபாலன் கையில் கொடுத்து மீண்டு விடுகிறாள். இது கடந்த கால செய்தி.

    ஆனால் இன்றும் சில இறுக்கமான சாதிச் சமூகத்தில் இளம் வயதில் விதவையாகும் பருவ கன்னிகைகளுக்கு மறு வாழ்வு மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு சமுதாயத்தில் சரிசமமாக நடமாட முடியாமல் தனிமைப் படும்போது…

    // அச்சூழலில் அவளின் தேடல் அதீதமாகி அவளை இயக்கும் அதீத சக்தியாக மாற்றம் பெறும்போது இச்சமூகம் தன் கட்டுப்பாடுகளை இழக்கிறது அல்லது தளர்த்திக்கொள்கிறது. //.
    ..
    இந்த இளம் விதவைகளும் அன்னை ஸ்ரீ அம்பாளிடமே அடைக்கலம் தேடுகிறார்கள்.திடீரென அம்மன் அருள் வந்து சாமி ஆடும்போது,அப் பெண்ணை உறவும் நட்பும் அம்மனாகவே அவளைப் பார்க்க ஆரம்பிக்கிறது. இன்றைய விதவைப் பெண்கள் கண்ணனை தேடி ஓடுவதில்லை.காரணம் கண்ணன் அருள் வந்து சாமியாட்டம் எவரும் ஆடுவதில்லை.அம்மனையே நாடுகிறார்கள்.

    இந்த சாமியாட்டத்தின் மூலம் சமூதாய தடைகள் நொறுக்கப்படுகின்றன.இனி அம்பாள் எங்கும் போகலாம்,வரலாம்.இனி அப்பெண்ணை குறை சொல்வது சாமி குத்தம்..அவ அம்பாள்டா! ஆத்தாடா!..என்று சொல்லி அடக்கி விடுவார்கள்.கடந்த கால பெண்களின் ஆண் துறவுக்கு துணையாக ஆண் கண்ணனே அடைக்கலம் தேடப்படுகிறான்.ஆனால் தற்கால விதவைப்பெண்கள் சமூகத் தளைகளில் இருந்து தப்பிக்க பெண் கடவுளான அம்மனும் ஆத்தாவான மகமாயியும் துணை புரிகிறார்கள். தாயிடம் சேய் தஞ்சம் அடைவது இயற்கைதானே!

    இது போன்ற நாட்டுக் நடப்பை கி.ராஜநாராயணனின் கதைகளில் காணலாம். மெய்யியல் தேடலில் காவியப் பெண்களை எழுதியதைப்போல் பாமரப் பெண்களின் பங்கு பற்றியும் புதிய மாதவி அவர்கள் எழுத வேண்டும்.

Leave a Reply to I I M Ganapti Raman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *