நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

சாம் ஹாரிஸ் ”ஏன் நீ இஸ்ரேலை விமர்சிப்பதே இல்லை?” இந்தக் கேள்வியே அலுப்புத் தருவது. இஸ்ரேலையும் , மதத்தையும் நான் விமர்சித்தே வந்திருக்கிறேன். ஆனால் மிக வன்மையாக இந்த விமர்சனத்தை முன்வைக்கவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். இப்போது உலகில் இருக்கிற யூதர்களின் எண்ணிக்கை 15 மில்லியன் (ஒரு கோடி ஐம்பது லட்சம்.) இதைவிட நூறு மடங்கு முஸ்லீம்கள் இருக்கிறார்கள். நான் யூத மதகுருக்களுடன் விவாதித்திருக்கிறேன். பிரார்த்தனையைச் செவிமடுக்கும் கடவுள் பற்றி நான் விமர்சிக்க முற்பட்ட போது, என்னை […]

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

இதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள் காரைக்கால் அம்மையார். கணவன் தொட்ட உடலே வெறுத்து பூதவடிவம் கொண்டாள் இறைவனுக்காக. அடுத்தவள் ஆண்டாள், கண்ணனே என் காதலன் என்று நாயகன் நாயகி பாவத்தின் உச்சத்தில் சென்று அவனுடன் ஐக்கியமானாள். மூன்றாவது சொன்ன அக்காமகாதேவி திருமண ஆசையுடன் நெருங்கியவனை உதறிவிட்டு உதறிய அந்த ஆடையை எடுக்காமல் சமூகவெளிக்குள் வந்துவிடுகிறாள். அடுத்தவள் லல்லேஸ்வரிக்குத் திருமணம் ஆகிறது. ஒத்துப் போகவில்லை. வெளியில் வருகிறாள். இங்கே எவனும் ஆண்மகன் இல்லை என்ற ஆவேசத்துடன். இத்தனை […]

“சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

    நாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை நானே எனக்கு உருவாக்கிகொண்டேன்.நூல்களைப்படித்த விவரங்களைக் குறித்துவந்திருப்பதுபோல், படித்த சிறுகதைகளைப்பற்றிய விவரங்களையும்கூட குறித்துவைத்திருக்கிறேன்.நினைவில் வைத்துச்சொல்வதற்கு கைவசம் ஒரு சிறுகதைகூட இல்லை. ஆனால்,என்னுடைய கதைகளைத்தான் சொல்லமுடியும். காரணம் அவை என்னுடைய கதைகள்.நினைவிலிருந்து நழுவும் நிலை கதைகளுக்கு ஏற்படுவதால் அதைத் தவிர்க்கவே உடனடியாக இப்படிப்பதிவுசெய்கிறேன். அப்படித்தான் ஒரு சிறுகதை வாசிப்பாளனாக என்னை நிலைநிறுத்துகிறேன். அண்மையில் சிங்கப்பூர் கிளிமண்டி நூலகத்தில் ஐந்து […]

முடிவை நோக்கி !

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

      சி. ஜெயபாரதன், கனடா டெலிஃபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன ! “ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் […]

நெருப்புக் குளியல்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  சி.இராமச்சந்திரன் ( கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெருப்புக் குளியல் என்ற தலைப்பில் சிறுகதை )   “அப்பா எழுந்திரிங்கப்பா….. அப்பா எழுந்திரிங்கப்பா… எனக்கு என்ன வாங்கி வந்திருக்கீங்க….. சொல்லுங்கப்பா..” என்று அரைத்தூக்கத்தில் இருந்த சங்கரின் மீசையைப் பிடித்து இழுத்தபடி எழுப்பினாள் கீதா. “இருடா செல்லம் இன்னும் பொழுதே விடியலயே அதுக்குள்ள என்னடா அவசரம்” என்று முனகிக்கொண்டே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டான் சங்கர். ஆம் அவசரம்தான் அவளுக்கு அதிகப்படியான […]

இயற்கையின் மடியில்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

செந்தில் 1) இத்தனை சிறிய எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை பேராசை; பாதையை மறைத்து வலை பின்னியிருக்கிறது! வருவது வேலம் என்றால் என் செய்யும் இச்சிலந்தி! வந்தது ஒன்றும் வண்ணத்து பூச்சி அல்லவே! 2) எதற்காக! எறும்புகளை போல சாரை சாரையாய் சிலந்திப்பூச்சிகள்! மகரந்த தேன் கொடுத்து இனம் வளர்க்கும் மன்மத மலர்கள் அறிவோம்! வண்ண வலை விரித்து வண்டின உயிர் வடிக்கும் மலர்களும் உண்டு! எதையும் கொடாது உதிரம் குடிக்க வலை விரிக்கும் சிலந்திகள் எதற்க்காக! இயற்க்கையும் […]

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 1​7​

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் :   ​இணைக்கப்பட்டுள்ளன.  

நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  பழநியப்பன் சிங்கப்பூர் வந்தபோது அவன் மகள் பிரேமாவதி தொடக்கநிலை 3. இப்போது உயர்நிலை 3. வரும்போது அப்பா சொன்னது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ‘இந்த மண்ணில் ஒரு சொத்து வாங்கிப் போடு. நீ இந்த மண்ணை மறந்தாலும் இந்த மண் உன்னை மறக்காது.’ இப்போதும் அது ஞாபகத்துக்கு வந்தபோது தொலைபேசி ஒலித்தது. எடுத்தான். ராஜமாணிக்கம்தான் பேசுகிறான். பழநியோடுதான் அவனும் சிங்கப்பூர் வந்தான். பழநியப்பன் அறந்தாங்கி. ராஜமாணிக்கம் அமரடக்கி. அறந்தாங்கியிலிருந்து 10 மைல். […]

ஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

   படம் : ஓவியர் தமிழ்   இடம்: ஆனந்த பவன் ஹோட்டல்   பாத்திரங்கள்: ஹோட்டலின் வயது முதிர்ந்த சர்வர் ரங்கையர், ஹோட்டல் உரிமையாளர் ஆனந்த ராவ், வாசுதேவாச்சார், கிட்டு, வடிவேலு என்று மூன்று வாடிக்கையாளர்கள்.   நேரம்: காலை மணி ஏழு.   (சூழ்நிலை: சர்வர் ரங்கையர், கல்லா மேஜைக்குப் பின்னால் உயரத்தில் மாட்டியிருந்த ஸ்வாமி படங்களுக்குப் பூ மாட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாமென்று ஆனந்தராவ், மேடையிலிருக்கும் மேஜையை விட்டுக் கீழே […]

நிழல்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அவன் நண்பன்தான் அவ்னுக்குச்சொன்னான்.ஆக அவன் அருகில் உள்ள நெய்வேலி நகரம் செல்லவேண்டும். காவலர்கள் ஒரு நூறு பேருக்கு மத்தியில் ‘கிரிமினாலாஜி’ பற்றி பாடம் எடுக்க வேண்டும். இப்படிச்சொல்லி அவனை நெய்வேலிக்குப்போகச்சொன்ன அந்த நண்பனுக்கு சென்னையில் ஒரு நண்பன். அந்தச் சென்னை நண்பனுக்குக் காவல் துறையில் ஆகப்பெரிய பதவி. தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு. அங்கிருந்து பிறந்து வந்திருக்கிறது இந்தக் கட்டளை. ‘என்ன சொல்கிறாயப்பா நீ நான் நெய்வேலிக்குப்போய் கிரிமினாலஜி பாடம் எடுப்பதா அதுவும் காவல் துறையில் பணி […]