நான் என்பது

Spread the love

 

நான்

 

சினந்ததைப் பார்த்தவன்

தீ என்றான்

 

தணிந்த்தைப் பார்த்தவன்

நீர் என்றான்

 

கொடுத்ததைப் பார்த்தவன்

தர்மன் என்றான்

 

கைவிரித்ததைப் பார்த்தவன்

கருமி என்றான்

 

சிரித்ததைப் பார்த்தவன்

குழந்தை என்றான்

 

அழுத்தைப் பார்த்தவன்

கோழை என்றான்

 

பேசக் கேட்டவன்

கிறுக்கன் என்றான்

 

பேசாமை கண்டவன்

செருக்கன் என்றான்

 

ஒளித்த்தைக் கண்டவன்

கள்ளன் என்றான்

 

விரித்ததைக் கண்டவன்

வெகுளி என்றான்

 

அணைத்தேன்

தாய் என்றான்

 

விலக்கினேன்

நாய் என்றான்

 

நான் என்பது

அசலா அபிப்ராயமா

 

அமீதாம்மாள்

Series Navigationமருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS )2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்