தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் படைப்புகள்

‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்

    சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள் பெரும்பாலும் எளியவை. வாசிப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கலாம். சிறப்பான சொல்லாட்சிக்குச் சொந்தக்காரர். இவர் கவிதை இயல்புகளில் முன் நிற்பது அழகான கட்டமைப்பாகும். இதற்கு புதிய சிந்தனைகள் துணைபுரிகின்றன. இந்த நூலில் 36 கவிதைகளும் 3 உரைநடைப் பகுதிகளும் உள்ளன.    ‘ வண்ணத்துப் பூச்சியின் பயணம் ‘ — ஒரு வண்ணத்துப் பூச்சி பறக்கிறது. [Read More]

ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …

ராசி. அழகப்பன் கவிதைகள் –  ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …

            ராசி. அழகப்பன் திரைத்துறையில் இயக்குனர், பாடலாசிரியர், இலக்கியத்தில் கதை , கவிதை , கட்டுரைகள் எழுதுபவர். இத்தொகுப்பு இவரிடைய ஏழாவது கவிதைத்தொகுப்பு. ஒருவர் இருட்டை நேசிக்கிறார் என்றால் அவர் மனம் சற்று வித்தியாசமானதுதான். இதுவே கவிமனம் எனலாம். செல்லும் வழி இருட்டு செல்லும் மனம் இருட்டு சிந்தை அறிவிலும் தனி இருட்டு    — என்ற புதுமைப்பித்தன் [Read More]

தேடல் !

கவிதை       என் தேடல் இப்போதும் தொடர்கிறது என்முன் நிற்கிறதா என்னைச் சூழ்ந்திருக்கிறதா அல்லது என்னுள் இருக்கிறதா என் மொழி தேடல் பயனென்று கனிகளெனப் பறித்து வந்தேன் சில கவிதைகளை … அவற்றுள் ஆழ்ந்த இனிப்பெனத் தங்கியது கொஞ்சம் தமிழ் இன்னும் தேடத் தேடப் பொத்திப் பொத்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வைரங்களென புதுமையும் நயங்களும் படையெடுக்கும் மொழியின் இறுகிய மௌனம் [Read More]

நிரந்தரமாக …

       கொஞ்ச நேரம் நடந்த பிறகு தெரிந்தது அந்த வெளி அது யாருமற்ற சுடுமணல் பிரதேசம் தனிமையின் ஏராளமான கரங்கள் என்னைத் தழுவி மகிழ்ந்தன அங்கு பசுமைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது எப்போதாவது காற்று வரும் நான் முற்றாக உறிஞ்சப்பட்டு வீசி எறியப்பட்டேன் காலம் என்னைக் கரைத்து முடித்தது இப்போது என் சுவடென மணல்பரப்பில் பாதாச்சுவடுகள் மட்டுமே அந்த வெட்டவெளி [Read More]

சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ஸமிரா கவிதையின் கருப்பொருள்.சல்மாவின் மொழிநடையில் ஒரு மெல்லிய , மிக அழகான நேர்த்தி காணப்படுகிறது. பிரியும் வேளை மௌனத்தில் நனைந்திருந்தன — என்பது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. பிரியப் போகிறோமே என்ற மௌனத்தில் மெல்லிய உறைதலில் மனம் கனக்கிறது. திரைச் சீலைகள் கண்களில் எம் முகங்களை நிரப்பிக் கொள்ள கடும் பிரயத்தனம் கொள்கிறோம் நானும் ஸமிராவும் —- [Read More]

தவம்

        என் தெளிவான கேள்வி ஒரு குழப்பமான சூழலில் தத்தளிக்கிறது சொற்கள் சுழலும் மனத்தில் என் கேள்விக்கான உன் பதிலை ஏந்தி மகிழக் காத்திருக்கிறேன் அதிக மௌனத்தை உருவாக்கி மலையாய்க் குவித்து வைத்திருக்கிறாய் நீ தேடும் என் கரங்களுக்கு அகப்படாமல் ஓடி ஒளிந்துகொள்ள உன் சொற்களுக்குத் தெரிந்திருக்கிறது உன் மௌனம் திறப்பதற்காக என் தவம் நீள்கிறது ….. நீண்டுகொண்டே இருக்கிறது [Read More]

ஒளிவட்டம்

   என் மௌனத்தின் எல்லா திசைகளையும் உன் அலகு கொத்திப்பார்க்கிறது எதிலும் ஒட்டாமல் உன் மனம் விலகி விலகி ஓடுகிறது எது குறித்துமான உன் கேள்விகள் கோணல் மாணலாய் நிற்கின்றன வாசிப்பின் பக்கவிளைவாக உன் தீர்ப்புகள் பிறர் மனங்களைத் தீப்பிடிக்க வைக்கின்றன உன் பேச்சின் வெளிச்சத்தில் நீ இருளைத் தவணை முறையில் தந்து கொண்டிருக்கிறாய் நியாயங்களை அனுமதிக்காமல் உதறித் [Read More]

புலம்பல்கள்

உன் தவறுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவற்றின் மேல் கம்பீரமாக நின்று பேசுகிறாய் உன் கற்பனைகளுக்கு முலாம் பூசிக் குற்றச்சாட்டுகளென என்னைச் சுற்றி வேலி கட்டுகிறாய் கயிற்றைப் பாம்பென்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறாய் நீ காது தாண்டிய உன் வாய் அறியாமையை முழக்கியும் நீ ஓய்ந்தபாடில்லை யூகங்களின் பரந்த வெளியில் நின்று நீ தாண்டவமாடுகிறாய் அபாண்டத்தை முன் [Read More]

தனிமை

    உன் மௌனத்தின் உதடுகள் என் இரவின் முட்களுக்கு ஆதரவளிக்கின்றன என்னை வாரிவாரி விழுங்கிய பின்னும் எச்சத்தின் தவிப்பு திறந்து போடுகிறது பெரும் ஆசை வெளியை… என் எல்லா சொற்களையும் பிடிங்கிக் கொண்டு எப்போதாவது ஒன்றிரண்டை என் கையில் திணித்துப் போகிறாய் சுருள் சுருளாய் விழுகின்றன ஆசைகள் இருள் இழைத்து இழைத்துக் குவித்ததில்… காலத்தின் முன் வலைப்பட்டுக் கட்டுண்ட என் [Read More]

இன்னும் வெறுமையாகத்தான்…

  நான் சொல்லி நீ கேட்க வேண்டிய வயது உனக்கும் எனக்கும் உன் இடதுபுறம் போய்க் கொண்டிருக்கும் அந்த நிர்வாணிகளின் பக்கம் திரும்பாதே உன் வலதுபுறம் சர்வ அலங்காரங்களோடு போய்க் கொண்டிருக்கும் உன் சகாக்களைப் பார் வெறுக்கையை வெகுநேரம் மூடிக்கொண்டிருப்பதால் உள்ளே ஒன்றும் முளைத்துவிடாது உன் முதல் வேலை முயற்சியென அறிந்துகொள் நிர்வாணம் குழந்தைமையோடுதான் பொருந்தும் [Read More]

 Page 1 of 10  1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

சூன்யவெளி

ஐ.கிருத்திகா [Read More]

தேடல்

                                 புஷ்பால [Read More]

யாருக்கு சொந்தம்

அங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது [Read More]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                              [Read More]

கோபுரமும் பொம்மைகளும்

ஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில் [Read More]

Popular Topics

Archives