லதா ராமச்சந்திரன் எனது உயிரின் வலி யாருக்குப் புரியும் என்றிருந்த எனக்கு எங்கிருந்தோ ஞானோதயம் வலியின் ஊடே வாழும் இன்பம் புலம்பல் விடுத்து புன்னகை தவழ புதுப்புதுத் தேடல் வழியே வாழ்வின் அர்த்தம் கண்டபின் நரகம் சுவர்க்கமாய் மாறிய தருணம் வாழ்க்கை எங்கே? இக்கணத்தில் இன்பம் எங்கே? துன்பத்தில் யாரை மட்டும் சார்ந்ததுன் வாழ்க்கை? உன்னை யாரின் அன்பு உனை நிரப்பும்? யாரின் அன்பு என்றுமே பொய்க்காது? உன் மீதிருக்கும் உனதன்பு உன் மதிப்பு யாருக்குத் தெரிந்தால் […]
அழகர்சாமி சக்திவேல் ஆயர் டேனியல் – திண்டுக்கல் நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் பாடித் துதி மனமே; பரனைக் கொண் டாடித் துதி தினமே காம்போதி ராகத்தில், ஆதிதாளத்தில் இயற்றப்பட்டு இருந்த அந்தத் திருச்சபைப் பாடலை, தேவாலயத்துக்குள், ஓரத்தில் இருந்த இசைக்குழு, மனமுருகிப் பாடியது. திருச்சபையை வழிநடத்தும் தலைமை ஆயராகிய நானும் மனமுருகிப் பாடிக்கொண்டே, வந்திருந்த கூட்டத்தைக் கவனித்தேன். கூட்டத்தில் இருந்த எல்லோரும், இசைக்குழு பாடியதற்கு […]
குணா (எ) குணசேகரன் செல்வார் அலர் என்று யான் இகழ்ந்தநனே, ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே, ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் நல் அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே உண்ணும் உணவையும், உடுக்கும் உடையையும் வருமானத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வது நடுத்தர வர்க்கத்தின் சாதாரண வழக்கம். அடிப்படைத் தேவைக்குள் வீடும் அடங்கியது ஒரு அசாதாரணம். வாழ்நாளுக்குள் எப்படியாவது ஒரு சொந்த வீட்டை வாங்கி […]
. ஜனநேசன் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர்.கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதிவருபவர்: சிறந்த படைப்பாளுமைளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக. சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து பாடி மேடையேற்றியும் வருகிறார். இன்றைய சிக்கலான வாழ்வியல் நிலையில் தொடர்ந்து கவிஞராக வாழ்ந்து இயங்குதல் அரிது .தூண்டிலைப் போட்டுவிட்டு ஐம்புலன்களின் கவனத்தைக் குவிமையப்படுத்தி தூண்டிலின் அசைவுக்காகக் காத்திருப்பவர் போல் […]
அழகியசிங்கர் இந்தக் கதை சற்று வித்தியாசமானது. இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை. நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று தோன்றுகிறது. பூசலார் என்ற கதையைப் படிப்பவருக்குப் பல சந்தேகங்கள் எழும். ஏன் மா. அரங்கநாதன் கதைகளில் பல சந்தேகங்கள் வரத்தான் வரும். முத்துக்கறுப்பன் என்ற பெயர் இவர் கதைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. […]
சோம. அழகு சக மனிதனின் வாய்மொழிக்குக் காது கொடுத்து பச்சாதாபத்தை (empathy) உருவாக்கும் oxytocinஐ பெறுவதைக் காட்டிலும் அந்த 6 அங்குலத் திரை ஏற்றித் தரும் dopamine பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதிக மனநிறைவைத் […]
மஹ்மூது நெய்னா . எஸ் – கீழக்கரை உனக்கு வேலை தர்ரன்ப்பா…. ஆனா துபையில கிடையாது … பாக்குவுக்கு போறியா? துபாய் முத்தீனாவில் இருந்த கம்பெனி கட்டிடத்தின் மூன்றாவது மாடி அலுவலகத்துக்கு வந்து, மூன்று மனி நேரங்களாக காத்திருந்து, சலாமலைக்கும் காக்கா.. என்று சொல்லி சந்தித்தபோது, தடாலடியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு என்னை நிலைகுலைய வைத்தார் அசன் தம்பி…. ஏன்ப்பா ரெம்ப யோசிக்கிறா… அங்க நம்ம புள்ளைவ இருக்கிறாங்க… மீரான் இருக்கிறாரு, […]
பநியான் எல்லா கணக்குகளையும் தப்பு தப்பாகப் போடுவதற்கும் ஒரு திறமை வேண்டியிருந்தது .அது சிற்சபேசன் வாத்தியாரிடம் கச்சிதமாகவே இருந்தது .அவரென்ன செய்வார் ? எப்படிப் பார்த்தாலும் அவர் பூகோள வாத்தியார்தானே ? .அவர் போட்ட நாலைந்து கணக்குகளுமே தப்பாகிப் போனதுதான் பிரச்சினையே. அதுவும் அவர் ஓய்வு பெற்ற காலகட்டத்தில் . தன் பையன்கள் இரண்டு பேருக்கும் அடலேறு , ஆடலழகன் என்று பெயர் வைத்திருந்தார். தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைப்பது பற்றின் வெளிப்பாடு […]
குணா (எ) குணசேகரன் இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன் ஏறி பரதவர் மகளே; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புல் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? புலவு நாறுதும், செல நின்றீமோ! பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை நும்மோடு புரைவதே அன்றே; எம்மனோரில் செம்மலும் உடைத்தே தடகளம் […]
நாகேந்திர பாரதி ————————————————————————– ( நவீன விருட்சம் நிகழ்வில் ‘பெய்யெனப் பெய்யும் மழை ‘ என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதி வாசித்த வெண்பாக்கள் ) குறள் வெண்பா ————————— தொய்விலா எண்ணம் துணையெனக் கொண்டிடில் பெய்யெனப் பெய்யும் மழை சிந்தியல் வெண்பா ——————————– துய்ப்பதும் தூர்ப்பதும் ஏய்ப்பதும் நோக்கமாய் எய்வது என்றே இருந்திடில் எப்படிப் பெய்யெனப் பெய்யும் மழை இன்னிசை வெண்பா —————————— எய்திடும் அம்பு இழுத்திடும் வில்லிடம் செய்தியைக் கேட்டுச் […]