Articles Posted by the Author:

 • பெண்கள் அசடுகள் !

  பெண்கள் அசடுகள் !

  (9.4.1995 ஆனந்த விகடனில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  “வாழ்வே தவமாக” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       அண்ணனும் தங்கையும் ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்துகொள்ளும் போது தூள் பறக்காத குறைதான். அதிலும் ஆண்-பெண் சமத்துவம், பெண்களின் அடிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை ஆகியவை பற்றி இருவரும் சண்டை போடத் தொடங்கினால், அந்தச் சண்டை கிட்டத்தட்ட அடிதடியில் முடியக் கூடிய நிலை உருவாகும்.       அன்றும் அப்படித்தான்.  அர்த்தமற்ற உணர்ச்சி வசப்பட்டு அசட்டுத்தனமாக நடந்து கொள்ளுகிறவர்கள் பெண்கள்தான் என்று அவன் […]


 • கவரிமான் கணவரே !

  கவரிமான் கணவரே !

  ஜோதிர்லதா கிரிஜா (1997 இல் ஆனந்த   விகடனில் வந்தது. “வாழ்வே தவமாக…” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       இப்படி ஓர் இக்கட்டு வருமென்று சாந்தி கனவு கூடக் கண்டதில்லை. திரைப்படங்களிலும், ஏட்டுக்கதைகளிலும் வரும் போக்கிரிகள் மெய்யான வாழ்க்கையிலும் உள்ளனர் என்பது அவளுக்குத் தெரியும்தானென்றாலும், அப்படி ஒரு பொல்லாதவன் தன் வாழ்க்கையிலேயே குறுக்கிட்ட போது அவளுக்கு நேர்ந்த அச்சத்தை விடவும் திகைப்பு அதிகமாக இருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை!       […]


 • வாழ்வே தவமாக …

  வாழ்வே தவமாக …

  (1.8.1996 குமுதம் இதழில் வந்தது. “வாழ்வே தவமாக….” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       தன்ராஜ் மிகுந்த உற்சாகத்துடன் பழைய சினிமாப்பாட்டு ஒன்றைச் சீழ்க்கை அடித்துக்கொண்டிருந்தான். படிப்பை முடித்ததிலிருந்து அவன் கண்டுவரும் கனவு இன்றுதான் நனவானது.        “என்ன, தன்ராஜ்? ரொம்பக் குஷியா இருக்காப்ல இருக்கு?” என்றவாறு போர்வையை அகற்றி எழுந்த கேசவ் கால்களைத் தொங்கப்போட்டபடியே கட்டிலில் உட்கார்ந்து சோம்பல் முறித்தான்.        தன்ராஜ் வெட்கத்துடன் புன்னகை செய்து, “அப்பா, […]


 • ஒதுக்கீடு

  ஒதுக்கீடு

  (ஜீவா முழக்கம் இதழின் சுதந்திரப் பொன் விழா மலரில் – 1997 இல் – வெளிவந்த சிறுகதை. ‘வாழ்வே தவமாக’ எனும் தலைப்பில் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       சென்னைப் பட்டினம் மாரப்பனுக்கு அறவே அந்நியம். மல்லணம்பட்டிக்கு அப்பால் அவன் கால் பதித்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், மிகச் சில கல் தொலைவில் உள்ள வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு ஆகிய ஊர்களுக்குப் போயிருந்தான். அவனுடைய தம்பி பெண் எடுத்திருந்த திண்டுக்கல்லுக்குப் […]


 • கோபுரமும் பொம்மைகளும்

  கோபுரமும் பொம்மைகளும்

  ஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில் வெளியானது: “கோபுரமும் பொம்மைகளும்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)       தங்கள் பொருள்களை யெல்லாம் மூட்டை கட்டிக்கொண் டிருந்த இரண்டாம் மகனையும் மருமகளையும் பார்க்கப் பார்க்கப் பரமசிவத்தின் நெஞ்சம் வேதனையால் கசந்தது. கசப்போடு கனத்து வலித்த அந்தப் பாழாய்ப்போன மனசைக் கழற்றி வைத்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணிப் பார்த்த அவரிடமிருந்து நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது.        “வேலாயி! கடைசியிலே இப்படியாயிடிச்சு, பார்த்தியா? பிள்ளைங்க ரெண்டும் […]


 • ரௌடி ராமையா

  ரௌடி ராமையா

                      ஜோதிர்லதா கிரிஜா  (28.12.1969  ஆனந்த விகடனில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்–இன் “கோபுரமும்  பொம்மைகளும்” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)                மங்களம் ஜன்னலைத் திறந்து அதனருகே நின்றுகொண்டாள். ஈரத்தலைக்குள் ஊடுருவிய இதமான காற்றின் சிலுசிலுப்பை  நுகர்ந்தவாறு அவள் கண்களை மூடிக்கொண்டு நின்றாள்.                 பக்கத்து வீட்டுப் புறக்கடைக் கதவு திறக்கப்பட்ட ஓசையைக் கேட்டு அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். திறக்கப்பட்ட கதவுக்குப் பக்கத்தில் ராமையா நின்றுகொண்டிருந்தான். நுரை வழியும் வாயுடன் தூரிகையால் பல் துலக்கியபடி […]


 • காலம் மாறிய போது …

  காலம் மாறிய போது …

  (20.10.1968 ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. ‘கோபுரமும் பொம்மைகளும்’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)       அலுவலகப் பணியாள் மேசை நாள்காட்டியில் முந்தின நாள்                                                                                                                                                                                                                                                                                                                                                                         தேதியைப் புரட்டிச் சரியான தேதியை வைத்துச் சென்றான்.  சுழலும் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த தியாகராஜன் அந்தத் தேதியைப் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தான்.       ஜனவரி ஒன்பது!       ‘இன்று மாலை வழக்கம் போல் சுகந்தாவுக்கு ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிச் செல்லவேண்டும்.’       சுகந்தாவுக்கும் தனக்கும் திருமணமாகிப் […]


 • வாங்க, ராணியம்மா!

  வாங்க, ராணியம்மா!

  ஜோதிர்லதா கிரிஜா (23.11.1978 குமுதத்தில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “விடியலின் வருகையிலே” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) மணியின் பார்வை காற்றில் படபடத்துக்கொண்டிருந்த நாள்காட்டியில் பதிந்தது. மே, பதினெட்டு. மே பதினெட்டு? ஆம். மே பதினெட்டு. அவன் வேலைக்கு வந்து சேர்ந்த நாள், இதே போல் ஒரு மே பதினெட்டுதான். பெரிய குளம் … பாதி நாள் பட்டினி. மீதி நாள்களில் அரை வயிற்றுக்குச் சாப்பாடு.  நான்கிலக்கச் சம்பளம் வாங்குகிற அளவுக்கும், கார் வைத்துக்கொள்ளுகிற அளவுக்கும் தன் […]


 • அதென்ன நியாயம்?

  அதென்ன நியாயம்?

        (02.02.1969 ஆனந்த விகடனில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “கோபுரமும் பொம்மைகளும்” எனும் என் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) ஜோதிர்லதா கிரிஜா நிர்மலாவின் இமைகள் தாழ்ந்திருந்தன. ‘டைப்’ அடித்தது சரியாக இருந்ததா என்பதை அவள் படித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சாரங்கன் தன்னையும் அவளையும் தவிர வேறு யாருமில்லை என்கிற நிலையில், துணிவுற்று – அவள் குனிந்துகொண்டிருந்தாள் என்பதால் தயக்கமற்று – கண்கொட்டாது அவளைக் கவனித்தான். அடர்த்தியான கூந்தல் அலை அலையாய் நெளிந்து […]


 • நேர்மையின் எல்லை

       அந்த அமைச்சர் நேர்மையின் வடிவம் என்று பேரெடுத்தவர். வங்கிக் கணக்கில் அவர் பெயரில் இருந்த தொகை ஒரு நடுத்தரக் குடிமகனின் சேமிப்புக்கு ஈடானது. இந்தியா  விடுதலை பெற்ற புதிதில் அவர் ஒரு மாநிலத்தில் ஓர் அமைச்சராகப் பதவி ஏற்றவர். கையூட்டு என்றால் என்ன வென்பதையே அவர் அறியாதவர். அந்த மாநிலத்தின் முதலமைச்சரும் அப்படிப்பட்டவரே! ஐம்பதுகளின தொடக்கத்தில் நம் நாடு பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. எனவேதான் காவல்துறையை முதலமைச்சார் அவரிடம் ஒப்படைத்திருந்தார். எல்லா அமைச்சர்களுமே நாணயமானவர்கள் என்று […]