ஜோதிர்லதா கிரிஜா (தீபம் இதழில் 1987 இல் வந்த சிறுகதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் ‘உடன் பிறவாத போதிலும்’ எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) எழுத்தாளர் துரையரசன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, சுவரை வெறித்துப் பார்த்தபடி கையுடைந்த தமது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். தமது அறை என்று சொல்லிக்கொள்ள ஒரு மரத் தட்டியால் மறைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் யாரும் அதைத் தட்டாமல் […]
ஜோதிர்லதா கிரிஜா (நீலக்குயில், அக்டோபர் 1974 இதழில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் உள்ளது.) மாலை ஐந்து மணி அடித்ததும் நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந்திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளாமாக நான் என் செயலர் பரந்தாமனைப் பார்த்துக் கையசைத்தேன். அந்த அசைப்பின் பொருளைப் புரிந்துகொண்டவனாக அவனும் வெளி வராந்தாவுக்குச் சென்று என்னைப் பார்க்க வந்திருந்தவர்களை மறு நாள் வந்து சந்திப்பதற்குரிய நேரத்தையும் இடத்தையும் தெரிவித்து அனுப்பி வைப்பதற்கு […]
அன்புக்குரிய திண்னை வாசகர்களுக்கு. வணக்கம். 1.2.2021 அன்று மொழிபெயர்ப்பாளர்க்கான விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிந்துரையின் பேரில் தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழநிச்சாமி அவர்களால் (Voice of Valluvar, TirukkuraL, the Tamil Veda, Tamil Moral Quatrains – Naaladiyaar, All-time Adages of Avvaiyaar, the Tamil Poetess ஆகியவற்றுக்காக) எனக்கு வழங்கப்பட்டதென்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஜோதிர்லதா கிரிஜா
ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1973 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) வழக்கம் போலவே லெட்சுமிக்குக் காலை நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்துவிட்டது. அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு குளிரில் விறைத்துவிட்ட கைகால்களை இரத்தம் ஊறத் தேய்த்துவிட்டுக்கொண்டு சோம்பல் முறித்து ஒரு நீண்ட கொட்டாவியும் விட்டதன் பின் தன்னையும் அறியாமல் திண்ணைப் பக்கம் பார்வையை ஓடவிட்டாள். பழைய பாணியில் வெகு நாள்களுக்கு முன்னர் கட்டப்பெற்ற அந்தச் செங்கற்சுவர் வீட்டின் […]
ஜோதிர்லதா கிரிஜா (ஜனவரி 1976 கலைமகள்-இல் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) சச்சிதானந்தம் தாம் படுத்திருந்த சாய்வு நாற்காலியின் பின் சட்டத்தின் மீது நன்றாகக் கழுத்தைப் பதித்துத் தலையை உயர்த்திய நிலையில், மோட்டுப் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதைத் தவிர வேறு சோலி ஏதும் அவருக்கு இல்லை. சமையற்கட்டில் செங்கமலம் காப்பிக் கஷாயம் இறக்கிக்கொண்டிருந்த மணம் அந்த வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. வடிகட்டியின் மேல் அவள் […]
(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’ என்று மாற்றப்பட்ட தலைப்பில் வெளியானது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் உள்ளது.) அமுதாப்பாட்டி என்று அக்கம்பக்கத்தில் அழைக்கப்படும் அமுதம்மாள் தூக்கம் வராமையால் தன் சின்ன வீட்டின் வாசற்புறத்தில் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தாள். வானத்தைப் பார்த்து இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்தவாறு நெடிய கொட்டாவி ஒன்றை விடுவித்தாள். கொஞ்ச நாள்களாகவே இப்படித்தான், தூக்கம் வருவது போல் இருக்கும், ஆனால், படுத்தால் நன்றாக விழிப்புக் […]
திர்லதா கிரிஜா (அமரர் மணியனின் “சிறு கதைக் களஞ்சியம்” முதல் இதழில் 1985ல் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “அம்மாவின் சொத்து” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) – காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் பின்னர் நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. நாடெங்கிலும் நூற்றாண்டு விழா ஆங்காங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அடேயப்பா! நூறு ஆண்டுகள்! ஆஞ்சநேயலு தம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினார். அவர் பிறந்து வளர்ந்த தெல்லாம் மதுரை ஜில்லாவின் ஒரு சிறு கிராமத்தில். தாய் மொழி தெலுங்கானாலும், […]
வணக்கம். Mini Bharath எனும் எனது ஆங்கில மூலம் என்னாலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு அதை நிவேதிதா பதிப்பகம், 1/3, வேங்கடேஷ் நகர் பிரதான சாலை,விருகம்பக்கம், சென்னை 600092, மினி பாரதம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது என்பதைத் திண்ணை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது பதின்மர்க்கான புதினமாகும். ஜோதிர்லதா கிரிஜா
(24.4.1991 “தேவி” இதழில் வந்தது. “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்”-இன் “அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.) காலியாய்க் கிடந்த பக்கத்து வீட்டு மனையின் எதிரே வந்து நின்ற ஆட்டோவிலிருந்து, குஞ்சம் வைத்த அந்தக் காலத்துப்பாணித் தொப்பியுடனும், கையில் ஒரு தடியுடனும் இறங்கிய பெரியவரைப் பார்த்ததும், விசாலாட்சி, ‘பக்கத்து மனை யாரோ சாயபுக்கு சொந்தம்னு பேசிண்டாளே, அது இவராத்தான் இருக்கணும்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். ‘மனையை வெறுமனே பார்வையிட்றதுக்கு வந்தாரோ, இல்லேன்னா வீடுகீடு கட்டப் […]
(மங்கை ஆகஸ்ட், 1988 இதழில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.) ”லலிதா! ஏ, லலிதா! சீப்பைக் காணோமே?” என்று இரண்டு நிமிடங்கள் போல் சீப்புக்காக அது இருக்கக்கூடிய இடங்களையெல்லாம் ஆராய்ந்து, பிறகு சோர்ந்து போய்க் கூச்சல் போட்ட ஜனகராஜனுக்குப் பதில் கிடைக்கவில்லை. சீப்பைத் தேடி எடுக்க முடியாததால் தாமதம் விளைந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டிலும், லலிதாவிடமிருந்து தனது கூச்சலுக்குப் பதிலேதும் வரவில்லை என்பது அவனை அதிகப்படியான எரிச்சலுக்கு உட்படுத்தியது. […]