தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.

This entry is part 36 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பூரிப்பில் உள்ளேன் என் கண்மணி !
புதைந்து என் உள்ளத்தில்
ஊறிப் போய்
உவப்பு நிரம்பி யுள்ளது.
எதுவும் கேளாதே என்னிடம்
எங்கும் ஓடாதே எனைப் பிரிந்து
என்னை மட்டும் நோக்கு !
என்னையே சுற்றிக் கொண்டிரு
என்னருகில் தங்கி !

கண்களின் மூலம்
காதலை மட்டும் வெளிப்படுத்து !
அர்ப்பணம் செய் உன்னை மௌனமாய்
இனிய சொற்களில் நுணுக்கமாய்
இன்னிசைப் பாடல்கள் எழுது..
அருகே என்முன் காணப் படாமல்
அவற்றை நீ பாடு.
பூக்களைப் பறித்து இரகசிய மாய்க்
கோர்த்திடு !
மாலை மட்டும் எனக்காக
விட்டுச் செல் !
இதயத்தைக் கேளாதே
என்னை மட்டும் பற்றிக் கொள் !
என்னையே சுற்றிக் கொண்டிரு
என்னருகில் தங்கி !

இனியது வாழ்க்கை
இனியது இரவு
இனியது வசந்த காலத் தென்றல் !
இந்த இனிமை சுய உணர்வில்
மிதந்து செல்வது
இதனிடம் எவரும் வேண்டார்
எதனையும் !
என் நறுமணத்தில் மூழ்கி
என்னை நானே
இழந்து போய் நிற்கிறேன்
என் உள்ளத்தை, என் ஆத்மாவை
எனக்கே அர்ப்பணம் செய்து !

++++++++++++++++

+++++++++++++++++++
பாட்டு : 354 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888).
+++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 2, 2012
*********************

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலுபழமொழிகளில் கிழவனும் கிழவியும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *